வயிறு நிறைய சாப்பிட்ட பிறகும் கூட ரொம்ப பசிக்குதா… அதுக்கான காரணம் இதுவா இருக்கலாம்!!!

Author: Hemalatha Ramkumar
21 January 2025, 4:05 pm

வயிறு நிறைய உணவு சாப்பிட்ட பிறகும் உங்களுக்கு எப்போதாவது பசி எடுத்துக் கொண்டே இருப்பதாக உணர்ந்து இருக்கிறீர்களா? இதனை நிச்சயமாக நம்மில் பெரும்பாலான நபர்கள் அனுபவித்திருக்க வேண்டும். நன்றாக சாப்பிட்ட பிறகும் மீண்டும் சமையலறைக்கு சென்று சாப்பிடுவதற்கு ஏதாவது கிடைக்குமா என்று தேடி பார்த்திருப்போம். ஆனால் இதனை நாம் சாதாரணமாக எண்ணக் கூடாது. நன்றாக சாப்பிட்ட பிறகும் பசி உணர்வு இருப்பதற்கு பின்னணியில் ஒரு சில காரணங்கள் இருக்கலாம். அவற்றைப் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

விரைவாக சாப்பிடுவது 

உணவை எப்பொழுதும் நிதானமாக மென்று கூழாக்கி விழுங்க வேண்டும். அவசர அவசரமாக நீங்கள் உணவை மென்றும் மெல்லாமலும் விழுங்கும் பொழுது மூளையானது வயிறு நிரம்பிய உணர்வு கிடைத்ததற்கான சிக்னலை பெறாது. இதனால் நீங்கள் அளவுக்கு அதிகமாக சாப்பிடுவீர்கள் அல்லது உங்களுக்கு வயிறு நிரம்பிய உணர்வு கிடைக்காது. கூடுதலாக விரைவாக சாப்பிடுவதால் செரிமானம் பாதிக்கப்படும்.

நீரிழப்பு 

நீரிழப்பு காரணமாகவும் உணவு சாப்பிட்ட பிறகும் கூட உங்களுக்கு பசி உணர்வு இருக்கலாம். உங்கள் உடலில் போதுமான அளவு தண்ணீர் இருக்காவிட்டால் தாகத்திற்கும், பசிக்கும் இடையே உங்கள் உடலில் ஒரு குழப்பம் நிலவும். இதனால் நீங்கள் தேவையில்லாமல் மீண்டும் உணவுகளை சாப்பிடுவீர்கள். கூடுதலாக நீரிழிப்பு செரிமானத்தை மெதுவாக்கும்.

மன அழுத்தம் 

நாள்பட்ட மன அழுத்தம் என்பது பசி ஹார்மோன்களை தூண்டி, நன்றாக சாப்பிட்ட பிறகும் கூட பசி உணர்வை ஏற்படுத்தும். மன அழுத்தத்தில் இருக்கும் பொழுது நம்முடைய உடலில் கார்டிசால் என்ற ஹார்மோன் உற்பத்தி ஆகிறது. இது பசியை தூண்டி ஒரு சில ஆறுதல் உணவுகளுக்கான ஏக்கத்தை வரவழைக்கிறது.

இதையும் படிக்கலாமே: ஹெல்தியா இருக்க இந்த மாதிரி உணவுகளை தினமும் சாப்பிட்டா கூட தப்பில்ல!!!

அதிக உப்பு நிறைந்த உணவு 

உப்பு நிறைந்த உணவை அதிகம் சாப்பிட்ட பிறகு உடனடியாக பசி ஏற்படலாம். அளவுக்கு அதிகமான சோடியம் உடலின் இயற்கையான தாக செயல்முறையை சிகர்குலைத்து, அதனால் நீரிழப்பும் அதிகப்படியான பசியும் உண்டாகிறது. மேலும் அளவுக்கு அதிகமான உப்பு சேர்க்கப்பட்ட உணவில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் எதுவும் இருக்காது.

போதுமான அளவு தூக்கம் இல்லாமை

போதுமான அளவு தூங்காவிட்டால் அது உங்களுடைய பசி ஹார்மோன்களை பாதிக்கலாம். தூக்கமின்மை பசியை கட்டுப்படுத்தக்கூடிய ஹார்மோனை பாதிக்கிறது. இந்த ஹார்மோன் சமநிலையின்மையால் உங்களுக்கு உணவு சாப்பிட்ட பிறகு பசி ஏற்படுகிறது.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • After listening to the story, Simbu spat out கதையை கேட்டதும் காரித் துப்பிய சிம்பு… சங்கடத்தில் இயக்குநர்!!