அச்சோ இந்த நிறத்தில் விந்து வெளியேறினால் ரொம்ப ஆபத்தாம்! எச்சரிக்கையா இருங்க!

16 July 2021, 6:12 pm
reasons for thick yellow sperm
Quick Share

ஆரோக்கியமான விந்து என்பது வெள்ளை அல்லது வெள்ளை கலந்த சாம்பல் நிறத்தில் இருக்க வேண்டும். இதற்கு மாறாக விந்துவின் நிறத்தில் ஏதேனும் மாற்றத்தை கண்டால் நிச்சயமாக அது கவனிக்க வேண்டிய ஒரு விஷயம். ஒரு சில நேரத்தில் விந்துவானது பச்சை, சிவப்பு, மஞ்சள், பிரவுன், பின்க் ஆகிய நிறங்களில் தோன்றும். இதற்கு பல விதமான காரணங்கள் உண்டு. இந்த பதிவில் மஞ்சள் நிறத்தில் வெளிவரும் விந்துவிற்கான காரணத்தை தான் நாம் பார்க்க இருக்கிறோம்.

1. மஞ்சள் காமாலை:

மஞ்சள் காமாலை இருக்கும் போது சருமம் மற்றும் கண்கள் மஞ்சள் நிறத்தில் காட்சி அளிக்கும். இருப்பினும் இதனால் கூட விந்து மஞ்சள் நிறத்தில் வெளியேற காரணமாக இருக்கலாம். கல்லீரலால் பிலுருபினை உடைக்க முடியாத நிலை தான் மஞ்சள் காமாலை.

2. ப்ராஸ்டேட் இன்ஃபெக்ஷன்:

ப்ராஸ்டேட் இன்ஃபெக்ஷன் இருக்கும் போதும் விந்துவானது பச்சை கலந்த மஞ்சள் நிறத்தில் வெளியேறும். சிறுநீரில் உள்ள பாக்டீரியாவானது ப்ராஸ்டேட் பகுதிக்குள் கசிந்து இன்ஃபெக்ஷன் உண்டாக்குவதே ப்ராஸ்டேட் இன்ஃபெக்ஷன் ஆகும். அடிக்கடி சிறுநீர் கழிப்பது, முகுகு வலி, விந்து வெளியேறும் போது வலி ஆகியவை இதன் அறிகுறிகள் ஆகும்.

3. விந்துவில் சிறுநீர் கலப்பது:

சிறுநீர் எடுத்து செல்லப்படும் யுரீத்ரா என்று சொல்லப்படும்  அதே வழி மூலமாக தான் விந்துவும் எடுத்து செல்லப்படுகிறது. ஒரு சில நேரங்களில் யுரீத்ராவில் தங்கி விடும் சிறுநீரானது விந்துவோடு கலந்து விடுவதினால் மஞ்சள் நிறத்தில் காட்சி அளிக்கும்.

4. லியூக்கோசைட்டோஸ்பெர்மியா (Leukocytospermia):

விந்துவில் சுரக்கப்படும் அதிகமான வெள்ளை அணுக்கள் அதன் நிறத்தை மஞ்சளாக மாற்றலாம். இது லியூக்கோசைட்டோஸ்பெர்மியா என்று அழைக்கப்படும். இதனால் ஆண்மை குறைவு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.

5. பால்வினை நோய்கள்:

லாம்டியா, ஹெர்பிஸ், கொனோரியா போன்ற பால்வினை நோய்கள் காரணமாகவும் விந்தின் நிறம் மஞ்சளாக மாற கூடும். 

6. வாழ்க்கை முறை:

மது அருந்துதல், புகையிலை அதிகமாக பயன்படுத்துதல் மற்றும் ஒரு சில நோய்களுக்கு எடுத்து கொள்ளப்படும் மருந்து விந்துவின் நிறத்தை மஞ்சள் நிறமாக்க கூடும். 

மஞ்சள் நிற விந்து வெளியேறுவதற்கான அறிகுறிகள்:

●காய்ச்சல்

●வலி

●உடல் உறவில் ஈடுபடும் போது சிக்கல்

●சிறுநீரில் இரத்தம்

●விந்துவில் கவிச்ச வாடை அடிப்பது

மருத்துவரை எப்போது அணுக வேண்டும்???

பெரும்பாலான நேரத்தில் இந்த மஞ்சள் நிற விந்துவானது தற்காலிகமானதாக தான் இருக்கும். ஒரு வாரத்திற்கு மேலாக மஞ்சள் நிற விந்து வெளியேறும் பட்சத்தில் மருத்துவரை ஆலோசியுங்கள்.

Views: - 158

0

0