பாரம்பரிய நெல்: இரத்த சோகைக்கு அருமருந்தாகும் கருடன் சம்பா அரிசி!!!

25 February 2021, 10:37 pm
Quick Share

நம் பாரம்பரிய அரிசி வகைகள் ஏராளம் இருந்தாலும் இன்று நம்மிடம் இருப்பது என்னமோ மிகவும் குறைவானது தான். இதில் மேலும் சோகமான விஷயம் என்னவென்றால் இப்போது இருக்கும் குறைவான பாரம்பரிய இரகங்களும் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து கொண்டு வருகின்றன. அவற்றை காக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். 

இதனை மக்கள் உணர வேண்டும் எனில் அவர்களுக்கு பாரம்பரிய அரிசிகளின் நன்மைகளைப் பற்றி தெரிந்திருப்பது அவசியம். ஆகவே தினமும் ஒரு பாரம்பரிய அரிசி வகையைப் பற்றி நாம் பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருப்பது கருடன் சம்பா அரிசி. 

கருடன் சம்பா என்பது காடைகுழந்தான் என்றும் அழைக்கப்படுகிறது. தமிழர்களின் பாரம்பரியமான நெல் வகைகளில் இதுவும் ஒன்று. உணவுக்காக தேர்ந்தெடுக்கப்படும் அரிசி வகைகளில் கருடன் சம்பா ஒரு தனி இடத்தை கொண்டுள்ளது. கருடன் சம்பா அரிசிக்கு இந்த பெயர் வருவதற்கு ஒரு காரணம் உண்டு. 

கருடனுக்கு கழுத்தில் வெள்ளையாக இருப்பது போல கருடன் சம்பா நெல்லின் நுனி பகுதி வெள்ளையாக இருக்கும். இதனால் தான் இந்த வகை நெல் கருடன் சம்பா என்று பெயர் பெற்றது. இயற்கை பேரழிவுகளான வறட்சி மற்றும் வெள்ளத்தை தாங்கி வாழக்கூடிய தன்மை இந்த நெல்லுக்கு இருக்கிறது.

கருடன் சம்பா நெல் நான்கு அடி உயரம் வரை வளரும். இதன் காரணமாக கால்நடைகளுக்கு அதிகப்படியான வைக்கோல் கிடைக்கும். இந்த அரிசியை இட்லி, தோசை, கஞ்சி, சாதம், சிற்றுண்டிகள் போன்றவைகளாக செய்து சாப்பிடலாம். இப்போது கருடன் சம்பா அரிசியை சாப்பிடுவதனால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதையும் இந்த அரிசியின் மருத்துவ குணங்கள் என்ன என்பதையும் பற்றி பார்க்கலாம். 

*கருடன் சம்பா அரிசி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

*இதனை வைத்து ஒரு ஆரோக்கியமான சிற்றுண்டி, மதிய உணவு ஆகியவற்றை சமைக்கலாம்.

*இந்த அரிசி இரகத்தில் பசையம் குறைவாக இருக்கும்.

*இதனை தொடர்ந்து சாப்பிட்டு வரும்போது உடல் வலிமை பெறும்.

*சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல், சிறுநீர் தொற்று போன்றவற்றிற்கு இந்த அரிசி ஒரு சிறந்த மருந்து.

*இரத்த சோகை உள்ளவர்களுக்கு ஏற்ற அரிசி வகை இது. 

*உடலில் உள்ள கட்டிகளை கரைக்கும் தன்மை இந்த அரிசிக்கு உண்டு. 

Views: - 404

1

0