வெங்காயத்தாள் நாட்டுக்கோழிக்கறி உங்கள் வீட்டிலேயே செஞ்சு அசத்த கத்துக்கலாம் வாங்க | Scallion Chicken Recipe

Author: Dhivagar
10 September 2021, 5:28 pm
Scallion Chicken Recipe at home
Quick Share

வெங்காயம் பயிர் செய்து தூர் விட்டு வளர்ந்த பிறகு, வெங்காயத்தாள் பெரியதாக வளரும். பூப்பூக்கும் இளம்பருவத்தில் வெங்காயத்தாளை பொரியல் செய்து சாப்பிடலாம். அது உடலுக்கு மிகவும் நல்லது. அதுமட்டுமில்லாது, வெங்காயத்தாள் சேர்த்து நாட்டுக்கோழிக்கறி சாப்பிட்டால் மிக மிக சுவையாக இருக்கும். அது எப்படி என்பதை இந்த பதிவில் அறிந்துக்கொள்ளலாம். 

தேவையான பொருட்கள்

 • பச்சை வெங்காயத்தாள் – 1 கொத்து (நறுக்கியது)
 • கோழிக்கறி – 1 கிலோ (எலும்பு மற்றும் தோல் இல்லாமல்)
 • இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 தேக்கரண்டி
 • சிவப்பு மிளகாய் தூள் – 1/2 தேக்கரண்டி
 • கருப்பு மிளகு தூள் – 1/2 தேக்கரண்டி
 • மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை
 • கொத்தமல்லி தூள் – 1/2 தேக்கரண்டி
 • கரம் மசாலா – 1/4 தேக்கரண்டி
 • எலுமிச்சை சாறு – 3 தேக்கரண்டி
 • உப்பு – தேவைக்கேற்ப
 • எண்ணெய் – 2 டீஸ்பூன்

செய்முறை

 • கோழிக்கறியைச் சுத்தம் செய்து துண்டாக வெட்டிக்கொள்ளுங்கள். கோழிக்கறி உடன் எலுமிச்சை சாறு, இஞ்சி பூண்டு விழுது, கொத்தமல்லி தூள், கருப்பு மிளகு தூள், மஞ்சள் தூள், சிவப்பு மிளகாய் தூள் மற்றும் கரம் மசாலா ஆகியவற்றைச் சேர்க்கவும்.
 • அனைத்தையும் நன்கு கலந்து குறைந்தது அரை மணி நேரம் ஊற விடவும்.
 • கடாயில் எண்ணெயை ஊற்றி சூடாக்கவும். சின்ன வெங்காயம் கொஞ்சம் சேர்த்து, இரண்டு நிமிடங்கள் வறுக்கவும்.
 • அடுத்து மரினேட் செய்யப்பட்ட கோழிகறியைச் சேர்த்து, கோழி சமைக்கும் வரை மிதமான தீயில் வறுக்கவும். சுமார் 5-7 நிமிடங்கள் நன்கு வேகட்டும்.
 • இப்போது வெங்காயத்தாளைச் சேர்த்து வறுக்கவும். வேண்டிய அளவுக்கு தண்ணீர் ஊற்றி நன்கு கோழிக்கறி வேகும் வரை, அடுப்பிலேயே வேகவிடவும். தண்ணீர் சுண்டி, மசாலா கோழிக்கறியோடு சேரும் வரை நன்கு வேக விடவும்.
 • நன்கு வெந்தது தெரிந்ததும், கொத்தமல்லி, புதினா, கறிவேப்பிலை எல்லாம் சேர்த்து நன்கு கலந்துவிட்டு அடுப்பை அணைத்து விடவும். ஒரு 10 நிமிடங்கள் கழித்து உங்கள் வீட்டினருக்கு பரிமாறி மகிழுங்கள்.

Views: - 224

3

0