உதட்டோடு உதவு வைத்து முத்தம் கொடுப்பதால் இதெல்லாம் நடக்குமா? இதெல்லாம் தெரியாம போச்சே! Scientific Benefits of Kissing

10 July 2021, 5:36 pm
Scientific Benefits of Kissing
Quick Share

முத்தம் என்பது அன்பின் வெளிப்பாடு என்று சொல்லலாம். நாம் பிறப்பு முதல் இறப்பு வரை அன்பு என்ற ஒன்று இன்றிமையாதது. அதே போல தான் காதல் உறவிலும் கல்யாண உறவிலும் அன்யோன்யமும் பிணைப்பும் பலமாக முத்தம் என்பது மிகவும் முக்கியம். காதலர்களும், கணவன் மனைவியும் உதட்டோடு உதடு வைத்து முத்தம் கொடுப்பது அன்யோன்யத்தின் வெளிப்பாடாக இருந்தாலும் அது மட்டுமில்லாமல் பல உடல் நன்மைகளையும் வழங்கக்கூடியது. அடுத்து என்ன மாதிரியான நன்மைகள், என்னவெல்லாம் நல்லது நடக்கும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

முத்தம் மூளைக்கான வெகுமதி என்று சொல்லப்படுகிறது. ஆம், முத்தத்தை பரிமாறிக்கொள்ளும்போது “லவ் ஹார்மோன்” எனும் ஆக்ஸிடாஸின் மற்றும் வாசோபிரசின் போன்ற நரம்பியக்கடத்திகள் வெளியாகிறது. அதோடு நம் மனநிலையை சீரானதாக வைத்திருக்க எண்டோஜெனஸ் ஓபியாய்டுகள், டோபமைன் மற்றும் பிற பயனுள்ள நியூரோஹார்மோன்களையும் வெளியிடுகிறது.

Scientific Benefits of Kissing

இன்பம் மற்றும் காமம் ஆகியவை மன அழுத்தத்தைக் குறைத்து ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளதென ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. காமம் மிகுந்து கலவியின் போது பகிர்ந்துக்கொள்ளும் முத்தங்கள் உங்கள் மன அழுத்த ஹார்மோன்களைக் குறைத்து உடலில் உள்ள குறைபாடுகளை குறைக்கும் தன்மை வாய்ந்தது.

முத்தம் பெரும்பாலும் அட்ரினலின் மற்றும் நோராட்ரெனலின் வெளியீட்டைத் தூண்டுகிறது. இந்த இரசாயனங்கள் உங்கள் இதயத் துடிப்பை அதிகரிப்பதன் மூலம் உங்களை உற்சாகமடையச் செய்வது மட்டுமல்லாமல், அவை உங்களைச் சுறுசுறுப்பாகவும் வைத்துக்கொள்ளும்.

Scientific Benefits of Kissing

வெஸ்டர்ன் ஜர்னல் ஆஃப் கம்யூனிகேஷன், 2009 ஆம் ஆண்டு ஆய்வில் குறிப்பிட்டுள்ளபடி, பாசத்தின் வெளிப்பாடான முத்தத்தை காலையில் பரிமாறிக்கொள்வதன் மூலம் கார்டிசோல் போன்ற மன அழுத்த ஹார்மோன் நாள் முழுவதும் குறைக்கக்கூடும்.

உங்கள் துணையுடன் நீங்கள் முத்தத்தைப் பரிமாறிக்கொள்வதன் மூலம் மன அழுத்தம் குறைவதோடு மட்டுமல்லாமல் கொலஸ்ட்ரால் அளவும் குறைவதாக கண்டறியப்பட்டுள்ளது. இதனால் உடல் எடையைக் குறைக்க ஆர்வமாக இருப்பவர்கள் தினமும் அன்பையும் முத்தத்தையும் தங்கள் துணையுடன் பரிமாறிக்கொள்ளலாம்.

மென்மையான இசை ஒரு மாமருந்து என்று சொல்லலாம். அதோடு முத்தமும் சேர்ந்தால் உங்களுக்கு அவ்வளவு நல்லது கிடைக்குமாம். ஆமாங்க, மென்மையான, ரம்மியமான உங்களுக்கு பிடித்த இசையைக் கேட்டுக்கொண்டு நீண்ட நேரம் உதட்டோடு உதடு வைத்து முத்தம் கொடுத்தால் உங்களுக்கு இருக்கும் ஒவ்வாமை பிரச்சினை எல்லாம் குணப்படும் என்று ஜப்பானிய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.  

Scientific Benefits of Kissing

உதட்டோடு உதடு வைத்து முத்தம் கொடுத்துக்கொண்டால் உடலின் நோயெதிர்ப்பு ஆற்றல் மேம்படும் என்றும், பல் சம்பந்தமான பிரச்சினைகள் எதுவும் ஏற்படாது என்றும் சொல்லப்படுகிறது. முக்கியமாக உங்கள் துணையின் சம்மதத்துடன் முத்தத்தை பரிமாறிக்கொண்டால் மட்டுமே முத்தத்தின் முழுமையான பலனை அடைய முடியும் என்று ஆய்வுகள் சொல்கின்றன. வற்புறுத்தலாம் நிகழும் முத்தத்தால் எந்த பலனும் கிடைக்காது என்பதையும் நினைவில் கொள்க. 

Views: - 118

0

0