சிவப்பு அரிசி கொழுக்கட்டை உங்களுக்கு செய்ய தெரியுமா? ஈசியா செய்ய சொல்லித்தாறோம் வாங்க

Author: Hemalatha Ramkumar
9 August 2021, 5:44 pm
SIGAPPU ARISI KOZHUKATTAI, RED RICE KOZHUKATTAI
Quick Share

நம் பாரம்பரிய அரிசி வகைகளில் ஒன்று தான் இந்த சிவப்பு அரிசி. இந்த சிவப்பு அரிசியில் சாதம் மட்டுமல்லாமல் பல உணவு பண்டங்களைச் செய்ய முடியும். இந்த சிவப்பு அரிசியில் சமைத்து உணவுகள் ருசியோடு இருப்பது மட்டும்மல்லாமல் பல விதமான ஆரோக்கிய நன்மைகளை நமக்குத் தரக்கூடிய ஒன்று. நம்மால் முடிந்தவரை அடிக்கடி இந்த சிவப்பு அரிசியை உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. அதை ஒரே மாதிரியாக இல்லாமல் பல்வேறு பண்டங்களாக எடுத்துக்கொண்டால் நமக்கும் சலிப்பு தட்டாமல் இருக்கும். அப்படி வித்தியாசமான உணவு பண்டங்களில் ஒன்று தான் சிவப்பு அரிசி கொழுக்கட்டை. இதை எப்படி செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

சிவப்பு அரிசி கொழுக்கட்டை செய்ய 

தேவையான பொருட்கள்

 • சிவப்பு அரிசி மாவு – 1 கப்
 • சூடான நீர் – 1 முதல் 1.5 கப்
 • உப்பு – 1/2 தேக்கரண்டி
 • துருவிய தேங்காய் – 2 டீஸ்பூன் (விரும்பினால்)
 • நாட்டு சக்கரை (நாட்டு சர்க்கரை) – 1/2 கப்
 • ஏலக்காய் தூள் – 1/2 தேக்கரண்டி
 • தேங்காய் பால் – 3 கப்

சிவப்பு அரிசி கொழுக்கட்டை செய்முறை

 • ஒரு பாத்திரத்தில் சிவப்பு அரிசி மாவை எடுத்துக் கொள்ளுங்கள். 
 • கொஞ்சம் உப்பு மற்றும் தேங்காய் துருவலைச் சேர்த்து கலந்துக்கொள்ளுங்கள். 
 • கொஞ்சம் கொஞ்சமாக வெந்நீரைச் சேர்த்து, தொடர்ந்து கலந்து, மிருதுவான மாவை உருட்டிக்கொள்ளவும்.
 • நன்கு பிசைந்து உருட்டிய மாவுடன் சிறிய அளவிலான உருண்டைகளை பிடித்துக்கொள்ளுங்கள். அதை தனித்தனியே ஒரு தட்டில் வைத்துக்கொள்ளுங்கள்.
 • தேங்காய் பாலை ஒரு பெரிய பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும். சிறிது உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும்.
 • ஒரு கொதி வந்தவுடன், பிடித்து வைத்த உருண்டைகளை கவனமாக தேங்காய்ப் பாலில் சேர்க்கவும்.
 • இதனுடன் 1 டீஸ்பூன் சிவப்பு அரிசி மாவையும் சேர்க்கவும். இது கொழுக்கட்டையைத் தடிமனாக்க உதவும்.
 • 7-8 நிமிடங்கள் மிதமான சூட்டில் நன்றாக சமைக்கவும். உருண்டைகள் பாத்திரத்தில் ஒட்டிக்கொள்லாமல் இருக்க ஒன்று அல்லது இரண்டு முறை அவ்வப்போது கலந்து விடுங்கள்.
 • சுவைக்கு நாட்டுச் சக்கரையைச் சேர்க்கவும். நன்கு தூள் ஆகிய ஏலக்காயையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.
 • நன்கு பால் கெட்டியாகும் வரை 1-2 நிமிடங்கள் நன்றாக சமைக்கவும். நன்கு பதத்திற்கு வந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு உங்கள் குழந்தைகளுக்கும் வீட்டில் இருப்போருக்கும் சுவையான கொழுக்கட்டையைப் பரிமாறி மகிழுங்கள்.

Views: - 858

0

0