மனஅழுத்தம் குறைந்து ஆரோக்கியமாக இருக்கவும் பல்லாண்டு வாழவும் உதவும் 10 சிம்பிள் டிப்ஸ்

2 July 2021, 11:28 am
simple health tips to stay healthy
Quick Share

யாருக்குத் தான் ஆரோக்கியமாக பல ஆண்டுகாலம் வாழவேண்டுமென்று ஆசை இருக்காது. என்ன தான் ஆசைப்பட்டாலும் எல்லோருக்குமே ஆரோக்கியம் கிடைப்பதில்லை. அவர்களின் ஆரோக்கியமின்மைக்கு காரணம் என்ன என்று பார்த்தால் அவரகளின் பழக்கவழக்கம் தான். நம்மில் இருக்கும் சில பழக்க வழக்கங்களை மாற்றிக்கொண்டு சில ஆரோக்கிய வழிமுறைகளை பின்பற்றினாலே நமக்கு ஆயுள் கூடிவிடும்.

 • முதலில் சிரிப்பு. அவசர வாழ்க்கையில் பலருக்கும் சிரிக்கவும் கூட நேரம் தேவைப்படுகிறது என்கிறார்கள். ஆனால் சிரிக்க நேரமெல்லாம் தேவையில்லை. நாமும் மகிழ்ச்சியாக இருந்து நம்மைச் சுற்றி இருப்பவர்களுடனும் கல கல வென பேசிக்கொண்டிருந்தாலே ஆரோக்கியமாக இருக்கலாம். மகிழ்ச்சியாக சிரிப்புடன் இருப்பது இதயத்திற்கு நல்லது மற்றும் இதனால் இரத்த ஓட்டம் 20 சதவீதம் அதிமாகும்.
 • உடலில் தோல் மிகப்பெரிய உறுப்பு மட்டுமல்ல, இது உடல் வெப்பநிலையை சீர்செய்து நோய் தொற்று ஏற்படாமல் உடலைப் பாதுகாக்கிறது. இதனால் சருமத்தை நாம் அக்கறையோடு பாதுகாத்துக்கொள்ள வேண்டும். 
 • நீங்கள் சோர்வாக இருந்தாலும் சின்ன சின்ன உடற்பயிற்சிகளை  செய்தால் உடலின் ஆற்றல் அதிகரிக்கும்.
 • அதிக நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து இருப்பதும் அதிகமாக உறங்குவதும் வாழ்நாளை குறைக்கும் என்று சொல்லப்படுகிறது.
 • மனஅழுத்தம் அதிகமாக இருக்கும் வேளையில் ஆர்வமாக உங்களுக்கு பிடிக்கின்ற புத்தகம் படித்தால் கார்டிசோல் மற்றும் பிற ஆரோக்கியமற்ற மன அழுத்த ஹார்மோன்கள் 68% குறையுமாம்.
 • புதிய மொழியைக் கற்றுக்கொள்வது அல்லது இசைக்கருவி வாசிப்பது உங்கள் மூளைக்கு ஊக்கத்தை அளிக்குமாம்.
 • உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் நல்ல உறவைப் பேணுதல், மன அழுத்தத்தைக் குறைக்கும் மற்றும் உங்கள் நோயெதிர்ப்பு ஆற்றலை மேம்படுத்தும்.
 • கலப்படம் இல்லாத காபி குடிப்பதால், குறிப்பாக பெண்களுக்கு மன அழுத்தம் அபாயத்தை குறையும்.
 • யோகா உங்கள் அறிவாற்றல் செயல்பாட்டை அதிகரிக்கும் மற்றும் மன அழுத்தத்தை குறைக்கும்.
 • வெளியில் அல்லது பசுமையான இடத்தில் நடைப்பயிற்சி மேற்கொள்வது எதிர்மறை எண்ணங்களை குறைத்து நேர்மறை எண்ணங்களை அதிகரிக்கும்.
 • சாக்லேட்டில் அதன் ஆக்ஸிஜனேற்றிகள் இருப்பதால் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகின்றன மற்றும் புற ஊதா கதிர்களின் சேதத்திலிருந்து பாதுகாக்கின்றன.
 • உணவை சாப்பிட சில நிமிடங்கள் மட்டுமே ஆகும் என்றாலும், உணவை முழுமையாக ஜீரணிக்க உடல் சில மணி நேரம் எடுத்துக்கொள்ளும் என்பதால் பசித்தால் மட்டுமே சாப்பிடுவது நல்லது.
 • 50 வயதிற்குட்பட்ட பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு ஏற்படும் என்பதால், முருங்கை கீரை, பேரீட்சை பலம் போன்ற இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
 • தினம் ஒரு ஆப்பிள் அல்லது நெல்லிக்காய் சாப்பிட்டால் மருத்துவரிடம் செல்ல வேண்டிய தேவையே இருக்காது. ஆப்பிள் சாப்பிடுவதால் உங்கள் இதய ஆரோக்கியம் மேம்படும் மற்றும் கெட்ட கொழுப்பின் அளவுக் குறையும்.

Views: - 272

0

0