வயிற்றில் அளவுக்கு அதிகமாக அமிலம் உற்பத்தியாகும் ஒரு பொதுவான பிரச்சனை அசிடிட்டி அல்லது நெஞ்செரிச்சல் என்று அழைக்கப்படுகிறது. நீண்ட நேரத்திற்கு வயிறு காலியாக இருக்கும் போது உணவுகளை ஜீரணிப்பதற்காக உற்பத்தியாகும் அமிலம் வயிற்றின் ஓரங்களில் எரிச்சல் மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தி நெஞ்செரிச்சல் பிரச்சனையை உருவாக்குகிறது. வெறும் வயிற்றில் அசிடிட்டி பிரச்சனையை சமாளிப்பதற்கு நீங்கள் ஒரு சில வாழ்க்கை முறை மாற்றங்கள், உணவு மாற்றங்கள் மற்றும் எளிய வீட்டு வைத்தியங்களை பின்பற்றலாம். அந்த வகையில் வெறும் வயிற்றில் ஏற்படும் அசிடிட்டி பிரச்சனையை சமாளிப்பதற்கு உதவும் எளிமையான தீர்வுகள் பற்றி இப்பொழுது பார்க்கலாம்.
சிறிய அளவிலான உணவை அடிக்கடி சாப்பிடவும்
நீண்ட நேரத்திற்கு வயிறு காலியாக இருப்பதை தவிர்த்து, அசிடிட்டி பிரச்சனையை தடுப்பதற்கான சிறந்த வழிகளில் இதுவும் ஒன்று. ஒரு நாளைக்கு மூன்று பெரிய உணவுகளை சாப்பிடுவதற்கு பதிலாக சிறிய அளவில் நாள் முழுவதும் அடிக்கடி சாப்பிடுவது உங்கள் வயிற்றில் அமில உற்பத்தியை சீராக்கும். மேலும் நீங்கள் சாப்பிடும் உணவில் முழு தானியங்கள், பழங்கள் மற்றும் காய்கறிகள் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
கார உணவுகளோடு உங்களுடைய நாளை ஆரம்பிக்கவும்
உங்களுடைய நாளை கார அல்லது லேசான அமிலத்தன்மை கொண்ட உணவுகளுடன் ஆரம்பிப்பது நல்லது. உதாரணமாக வாழைப்பழங்கள், ஊறவைத்த பாதாம் பருப்பு அல்லது ஓட்ஸ் போன்றவற்றை சாப்பிடலாம். இந்த உணவுகள் வயிற்றில் உள்ள அமிலத்தை நடுநிலையாக்கி வயிற்றின் ஓரங்களில் பாதுகாப்பு தடையை உருவாக்கும். மேலும் வெறும் வயிற்றில் காபி, டீ அல்லது அமிலத்தன்மை கொண்ட பழச்சாறுகள் பருகுவதை தவிர்க்கவும்.
தண்ணீர் பருகவும்
காலை எழுந்த உடனேயே ஒரு பெரிய டம்ளரில் வெதுவெதுப்பான தண்ணீர் குடிப்பது வயிற்றில் உள்ள அமிலத்தை கரைத்து செரிமான பாதையை ஆற்றும். இந்த தண்ணீரில் ஒரு டீஸ்பூன் தேன் அல்லது ஒரு சில துளிகள் எலுமிச்சை சாறு சேர்ப்பது இன்னும் கூடுதல் பலன்களை அளிக்கும்.
இதையும் படிச்சு பாருங்க: நாள் முழுவதும் உட்கார்ந்து வேலை பார்க்கிறவங்களா நீங்க… அப்படின்னா இந்த எச்சரிக்கை உங்களுக்கு தான்!!!
அசிடிட்டி பிரச்சனையை தூண்டும் உணவுகளை தவிர்க்கவும்
அதிக மசாலாக்கள் சேர்க்கப்பட்ட உணவுகள், பொரிக்கப்பட்ட உணவுகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் அசிடிட்டி பிரச்சனையை அதிகரிக்கலாம். எனவே வெறும் வயிற்றில் நெஞ்செரிச்சல் ஏற்படுவதை தடுப்பதற்கு இந்த மாதிரியான உணவுகளை நீங்கள் குறிப்பாக தவிர்க்க வேண்டும்.
இயற்கை தீர்வுகள்
இஞ்சி: ஒரு சிறிய துண்டு இஞ்சி அல்லது இஞ்சி டீ குடிப்பது வயிற்றின் ஓரங்களில் வீக்கத்தை குறைத்து அசிடிட்டியை போக்கும்.
கற்றாழை சாறு: குளிரூட்டும் பண்புகளுக்கு பெயர் போன கற்றாழை சாறு அசிடிட்டியை நடுநிலைப்படுத்துகிறது.
சோம்பு: சோம்பு விதைகளை சாப்பிடுவது அல்லது சோம்பு டீ பருகுவது செரிமானத்தை மேம்படுத்தி அமில உற்பத்தியை குறைக்கும்.
மன அழுத்தத்தை கட்டுப்படுத்துதல்
மன அழுத்தம் வயிற்றில் உள்ள அமில உற்பத்தியை அதிகரித்து, அசிடிட்டி பிரச்சனையை இன்னும் மோசமாக்கலாம். மன அழுத்தத்தை குறைப்பதற்கு யோகா, தியானம் அல்லது ஆழ்ந்த மூச்சு பயிற்சிகள் போன்றவற்றை முயற்சி செய்து பாருங்கள். தொடர்ந்து அசிடிட்டி பிரச்சனை இருந்தால் மருத்துவ ஆலோசனையை உடனடியாக பெறவும்.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.
கண்டபடி பேசிய தயாரிப்பாளர் வேதிகா, யோகி பாபு, சாந்தினி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “கஜானா”.…
பிறகு பாஜக மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்று தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் பயங்கரவாதிகளுக்கு…
பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளின் காஷ்மீர் பஹல்காமில் தாக்குதல் நடத்தியதை கண்டித்து திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் பாஜக சார்ப்பில் கண்டன…
துணிச்சல் நடிகை நடிகை திரிஷா தனது 16 வயதிலேயே மாடலிங் துறைக்குள் வந்தவர். அதனை தொடர்ந்து “ஜோடி” திரைப்படத்தில் சிறு…
சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா…
தனது வாகனத்தின் மீது மோதிய மர்ம நபர்கள் மீது காவல்துறையினரிடம் மதுரை ஆதினம் நேர்மையாக புகார் அளித்திருக்கலாமே? ஏன் புகார்…
This website uses cookies.