உங்கள் கணவரை ‘அந்த’ விஷயத்தில் ஸ்பீட் ஏற்ற ஆறு படுக்கையறை டிப்ஸ்!!!

12 January 2021, 10:55 pm
Quick Share

திருமணம் ஆன புதிதில் உங்கள் கணவர் உங்கள் மீது காட்டிய பாலியல் ஆசை படிப்படியாக குறைந்து விட்டது என்று நீங்கள் பல முறை யோசித்து இருக்கலாம். உங்கள் கவர்ச்சி குறைந்து விட்டதால் தான் இது நிகழ்கிறது என மனதிற்குள் எண்ணி நீங்களே உங்களை தாழ்த்தி கொள்ள வேண்டாம். உங்கள் கணவர் உங்கள் மீது வைத்துள்ள காதல் நடவடிக்கைகளை உறுதிப்படுத்தி கொள்ள நீங்கள் ஒரு சில விஷயங்களை செய்யலாம். அவருடைய கவனம் உங்கள் பக்கம் திரும்ப வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் இதனை நீங்கள் செய்யலாம். 

★காரணத்தை கண்டுபிடியுங்கள்:

உங்கள் கணவரின்  பாலியல் மனநிலையை மேம்படுத்துவதைப் பற்றி நாம் பார்க்கும் முன்பாக அவர் என்ன மனநிலையில் இருக்கிறார் என்பது மிகவும் முக்கியம். அதனை மட்டும் கண்டுபிடித்து விட்டால் மிச்ச வேலையை எளிதாக செய்து விடலாம். 

★உடலுறவை தொடங்குங்கள்:

படுக்கையில் உங்கள் கணவரின் கவனத்தை ஈர்க்க நீங்கள் உடலுறவை தொடங்கலாம். எப்போதும் அவரே உங்களை உடலுறவுக்கு அழைப்பதால் அதனால் அவர் சலிப்படைந்து போயிருக்கலாம். எனவே நீங்கள் ஒரு முறை அதனை முயற்சித்து பார்த்து அவரின் மனநிலை எப்படி இருக்கிறது என்பதை கவனியுங்கள். 

★கவர்ச்சியான மசாஜ்:

மசாஜ் ஒருவரின் மனநிலையில் என்னென்ன வேலைகளை செய்யும் என்பது உங்களுக்கு தெரியாது. உங்கள் கணவரை கவர்ந்து இழுக்கக்கூடிய ஆடைகளை அணிந்து அவருக்கு மசாஜ் செய்ய தொடங்குங்கள். நீங்கள் பேச நினைக்கும் வார்த்தைகளை உங்கள் கணவரின் காதில் கிசுகிசுக்களாம். 

★உங்கள் கணவரின் மனதில் உள்ள கருத்துக்களை தூண்டவும்:

பாலியல் ஆசையை தூண்டுவதற்கான மற்றொரு வழி படுக்கையில் என்ன செய்யலாம் என்பதைப் பற்றி முன்கூட்டியே பேசுவது ஆகும். இவ்வாறு நீங்கள் பேசும்போது உங்கள் கணவரும் அவருடைய மனதில் இருக்கும் ஆசைகளை வெளிப்படையாக பேச ஆரம்பிப்பார். 

★ஆடை அணியும் விதத்தை மாற்றவும்:

நீங்கள் ஆடை அணியும் விதத்தை மாற்றும் போது அதவே உங்கள் கணவர் உங்களை கவனிக்க தூண்டும் காரணமாக மாறும். கட்டிப்பிடிக்கும் போது வசதியாக இருக்கும்படி ஆடைகளை அணிந்து கொள்ளுங்கள். லைட் மேக்அப் போட்டாலும் கவர்ச்சியாக இருக்குமாறு பார்த்து கொள்ளுங்கள். 

★ஷவரில் அவரை அசத்துங்கள்:

படுக்கைக்கு செல்லும் முன்பு உங்கள் கணவருடன் ஷவரின் கீழ் ரொமான்ஸ் செய்யுங்கள். ஒன்றாக குளிக்கும் போது அதில் உங்களுக்கு ஒரு சிற்றின்பம் கிடைக்கும். இது நிச்சயமாக உங்கள் மீது உள்ள ஆசையை தூண்ட உதவும்.  

மேலே கூறப்பட்டுள்ள ஆறு விஷயங்களை கண்டிப்பாக நீங்கள் டிரை பண்ணி பார்க்க வேண்டும். இவை அனைத்தும் உடனடியாக கிளிக் ஆகக்கூடிய பிளான்கள். சமூக நலன் கருதி updatenews360.