தொழில்நுட்பம் அதிக ஆதிக்கத்தை செலுத்தி வரும் இன்றைய உலகில் நாம் பெரும்பாலான நேரத்தை போன்கள், லேப்டாப்கள் அல்லது டேப்லெட்களின் ஸ்கிரீன்களின் முன்பு செலவிடுகிறோம். இந்த அனைத்து சாதனங்களும் குறைந்த அலை நீளம் கொண்ட நீல நிற ஒளியை வெளியிடுகின்றன. இந்த நீல நிற ஒளியானது நம்முடைய சரும ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கும்.
நீல நிற ஒலி நமது சருமத்திற்கு ஏற்படுத்தும் பாதிப்புகள் என்னென்ன? செல்லுலார் அழுத்தம் மற்றும் வயதான அறிகுறிகள்
நீண்ட நேரத்திற்கு நீல நிற ஒளிக்கு நம்மை வெளிப்படுத்தும் பொழுது சருமம் ஃப்ரீ ரேடிக்கல்களை உற்பத்தி செய்து அதனால் சரும செல்கள் பாதிப்புக்கு ஆளாகிறது. ஃப்ரீ ரேடிக்கல்கள் என்பது தீங்கு விளைவிக்கும் நிலையற்ற மூலக்கூறுகள் ஆகும். சருமத்தின் நெகிழ்வுத் தன்மை மற்றும் இளமையான தோற்றத்திற்கு காரணமான கொலாஜன் மற்றும் எலாஸ்டின் என்ற புரதங்களை விரைவாக உடைக்கிறது. இதன் விளைவாக சருமத்தில் சுருக்கங்கள் மற்றும் மெல்லிய கோடுகள் ஏற்படுகிறது.
ஹைப்பர்பிக்மென்டேஷன் மற்றும் சமமற்ற சரும தொனி
நீல நிற ஒளி ஹைப்பர்பிக்மென்டேஷன் பிரச்சனையை மோசமாக்குகிறது. ஹைப்பர்பிக்மென்டேஷன் என்பது சருமத்தில் ஏற்படும் கருமை நிற திட்டுகள். நீல நிற ஒளி சருமத்தின் நிறத்திற்கு காரணமான மெலனின் என்ற பிக்மென்ட் உற்பத்தியை தூண்டுகிறது என்று ஆராய்ச்சி கூறுகிறது. இதனால் சமமற்ற சரும தொனி மற்றும் தோலில் கரும்புள்ளிகள் உண்டாகிறது. அதிலும் குறிப்பாக கருமையான சருமம் கொண்ட நபர்களுக்கு இன்னும் மோசமான அறிகுறிகள் ஏற்படுகிறது.
வீக்கம் மற்றும் உணர்திறன்
சருமத்தை நீல நிற ஒளிக்கு வெளிப்படுத்தும் பொழுது அது தோலில் வீக்கம் விளைவுகளை தூண்டுகிறது. இதனால் சருமத்தில் சிவத்தல், எரிச்சல் மற்றும் அதிகப்படியான உணர்திறன் ஏற்படும். அதிலும் ஏற்கனவே ரோசேஸியா அல்லது எக்ஸிமா போன்ற சரும நிலைகளால் பாதிக்கப்பட்டுள்ள நபர்கள் இன்னும் மோசமாக பாதிக்கப்படுகின்றனர்.
நீல நிற ஒளியால் பாதிக்கப்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
தற்போதைய தொழில்நுட்ப சூழலில் ஸ்கிரீன்களில் இருந்து விலகி இருப்பது சவாலான காரியம் தான். நீல நிற ஒளியானது ஒருவகையான UV கதிர். இது செல்லுலார் சேதம் மற்றும் பல்வேறு சரும பிரச்சனைகளை உருவாக்குகிறது. எனவே இவற்றிலிருந்து நம்மை பாதுகாப்பதற்கு ஒரு சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
1. நீங்கள் நாள் முழுவதும் ஸ்கிரீன்களை பயன்படுத்தும் பொழுது அவ்வப்போது பிரேக் எடுத்துக் கொள்ளுங்கள். அதிலும் குறிப்பாக படுக்கைக்கு செல்வதற்கு முன்பு ஸ்கிரீன்கள் பயன்படுத்துவதை முற்றிலுமாக தவிர்ப்பது நல்லது.
2. மாலை நேரத்தில் நீல நிற ஒளிக்கு உங்கள் தோலை வெளியிடுவதை குறைப்பதற்கு உங்களுடைய சாதனங்களில் உள்ள செட்டிங்ஸை பயன்படுத்தவும். உங்கள் சாதனங்களில் இருந்து வெளியாகும் நீல நிற ஒளியிலிருந்து தப்பிக்க ஸ்கிரீன் புரோடெக்டர்கள் அல்லது கிளாஸ்கள், அதிலும் குறிப்பாக நீல நிற ஒளியை வடிகட்டும் ஒன்றை பயன்படுத்தவும்.
எனவே இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலமாக உங்கள் சரும ஆரோக்கியத்தை பாதுகாத்து பல்வேறு சரும பிரச்சினைகளை தவிர்க்கலாம்.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.