கண் பார்வையை மேம்படுத்தும் சர்க்கரைவள்ளிக் கிழங்கு சூப்!!!

4 March 2021, 12:00 pm
Quick Share

இனிப்பு உருளைக்கிழங்கு  பீட்டா கரோட்டின் அதிக அளவில் கொண்டுள்ளது. நோயெதிர்ப்பு மண்டலத்தையும் கண்பார்வையையும் மேம்படுத்துவதாக நம்பப்படும் பீட்டா கரோட்டின் ஒரு ஆக்ஸிஜனேற்றியாகும். இது நம் உடலில் வைட்டமின் A ஆக மாறும். சர்க்கரைவள்ளிக் கிழங்கு கிட்டத்தட்ட கொழுப்பு இல்லாதவை மற்றும் கலோரிகள் குறைவாக உள்ளன. ஆனால் இதில்  சர்க்கரை அதிகம். அவை பொட்டாசியம் மற்றும் B6 வைட்டமின்களால் நிரப்பப்பட்டுள்ளன. 

அவை உங்கள் இதயத்திற்கு சரியானவை. அவை இயற்கையாகவே இரத்த அழுத்த அளவைக் குறைக்கும் மற்றும் உங்கள் இதய துடிப்பை மெதுவாக்கும் உணவுகள் என்றும் நம்பப்படுகிறது. இதைப் பற்றி பலருக்கும் தெரியாது. ஆனால் இனிப்பு உருளைக்கிழங்கு  அருமையான நன்மைகளை வழங்குகிறது. இதில் உள்ள வைட்டமின் A இயற்கையான அழற்சி எதிர்ப்பு மருந்தாக செயல்படுகிறது. இது முகப்பருவை ஏற்படுத்தும் பாக்டீரியாவிலிருந்து விடுபடவும் உதவும்.

இந்தியாவில் பல தெரு உணவுகளில் சர்க்கரைவள்ளிக் கிழங்கு பிரதானமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது ஏராளமான சுவை மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த இந்த சூப்பர் உணவு ஆகும். இனிப்பு உருளைக்கிழங்கைப் பற்றிய பெரிய விஷயம் என்னவென்றால், அவை மிகவும் விலை குறைவானவை. மேலும் அதனை சமைக்க அதிக நேரம் எடுக்காது.

இனிப்பு உருளைக்கிழங்கு உற்பத்தி கிமு 750 க்கு முன்பு இருந்தே வந்துள்ளது. இது மனிதனுக்குத் தெரிந்த மிகப் பழமையான பயிர்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஸ்பானிஷ் மற்றும் போர்த்துகீசிய ஆய்வாளர்கள் இந்த உருளைக்கிழங்கை ஆசியர்களிடம் கொடுத்ததாக கருதப்படுகிறது. இந்த சர்க்கரைவள்ளி கிழங்கு வைத்து ஒரு ருசியான ரெசிபியை இன்று நாம் பார்க்கலாம். 

சர்க்கரைவள்ளிக் கிழங்கு சூப்: 

இது இனிப்பு உருளைக்கிழங்கு, முந்திரி மற்றும் அன்னாசிப்பழத்தின் கசுவைகளுடன் கூடிய ஒரு டேஸ்டான இனிப்பு சூப் ஆகும். இது வெயில் காலத்தில் சாப்பிட ஏற்றது.

செய்முறை: 

*ஒரு வாணலியை அடுப்பில் வையுங்கள். 

*அடுப்பை  நடுத்தர-குறைந்த தீயில் வைக்கவும். 

*வாணலியில் சிறிதளவு வெண்ணெயை உருக விடவும். 

*இதனோடு நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, அது பொன்னிறமாக மாறும் வரை வதக்கவும். 

*இரண்டு பல் பூண்டு சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கவும். 

*இப்போது  அன்னாசிப்பழம், கேரட், சர்க்கரைவள்ளிக் கிழங்கு, ஃப்ரெஷ் கிரீம், உப்பு, மிளகு ஆகியவற்றை சேர்க்கவும். 

*இதனை ஒரு கொதி நிலைக்கு கொண்டு வாருங்கள். 

*அடுப்பை சிம்மில் குறைக்கவும். 

*உருளைக்கிழங்கு மென்மையாக ஆகும் வரை 15 நிமிடங்கள் சமைக்கவும்.  

*கடைசியாக கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

Views: - 19

0

0