கால்சியம் குறைப்பாட்டைக் குறிக்கும் அறிகுறிகள்!!!

Author: Hemalatha Ramkumar
26 January 2022, 11:26 am

நீங்கள் அடிக்கடி பல் பிரச்சனைகளை எதிர்கொள்கிறீர்கள், எப்போதும் சோர்வாக இருந்தால், வறண்ட சருமம் இருந்தால், தசைப்பிடிப்பால் அவதிப்படுகிறீர்கள் என்றால், இந்த பிரச்சனைகளை நிவர்த்தி செய்து உங்கள் உடலில் கால்சியம் அளவை மீட்டெடுக்க வேண்டிய நேரம் இது.
எலும்பு-கனிம அடர்த்தியை அதிகரிக்கவும் பல் ஆரோக்கியத்திற்கும் கால்சியம் தேவைப்படுகிறது. அதன் ஆதாரங்கள் பால், பாலாடைக்கட்டி, தயிர், முட்டைக்கோஸ், வெண்டைக்காய், கருமையான இலை கீரைகள், பருப்பு வகைகள் மற்றும் மத்தி மீன்.

கால்சியம் குறைபாடு உங்கள் உடலில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் மற்றும் நீண்ட காலமாக அதை புறக்கணிப்பது பேரழிவு விளைவுகளுக்கு வழிவகுக்கும் மற்றும் குழந்தைகளில் ரிக்கெட்ஸ், ஆஸ்டியோபோரோசிஸ், வலிப்புத்தாக்கங்கள் வரை பல உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

மோசமான கால்சியம் உட்கொள்ளல் அல்லது கால்சியம் நிறைந்த உணவுகளுக்கு சகிப்புத்தன்மை இல்லாதது காலப்போக்கில் கால்சியம் குறைபாட்டை ஏற்படுத்தும். பெண்களில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் சில மரபணு காரணிகளும் கால்சியம் அளவை பாதிக்கலாம்.

கால்சியம் குறைபாடு பொதுவாக குழந்தைகள் மற்றும் பெரியவர்களில் காணப்படுகிறது மற்றும் அவர்களுக்கு பலவிதமான உடல்நலப் பிரச்சினைகளை வரவழைக்கலாம். கால்சியம் என்பது நல்ல எலும்புகள் மற்றும் பற்களுக்கு தேவையான முக்கியமான கனிமங்களில் ஒன்றாகும். நரம்புகள், தசைகள் மற்றும் இதயத்தின் சரியான செயல்பாட்டிற்கு இது தேவைப்படுகிறது.
எலும்புகளுக்கு மட்டுமல்ல, இதயத்திற்கும் கால்சியம் இன்றியமையாதது.

ஹைபோகால்சீமியா என்றால் என்ன, அது நம் நல்வாழ்வை எவ்வாறு பாதிக்கிறது?
ஹைபோகால்சீமியா என்பது இரத்தத்தில் கால்சியத்தின் அளவு மிகக் குறைவாக இருப்பதைக் குறிக்கிறது. ஒருவர் கவனிக்க வேண்டிய கால்சியம் குறைபாட்டின் சில அறிகுறிகள்:-

குழந்தைகள் மற்றும் பெரியவர்களில் கால்சியம் குறைபாட்டின் அறிகுறிகள்:

* கை கால்களில் உணர்வின்மை மற்றும் கூச்ச உணர்வு கால்சியம் குறைபாட்டைக் குறிக்கும்.

* சோர்வு: குறைந்த அளவு கால்சியம் பலவீனத்தை ஏற்படுத்தும் மற்றும் ஒருவரால் அன்றாட வேலைகளை எளிதாக செய்ய முடியாமல் போகலாம்.

* தசைப்பிடிப்பு: கால்சியம் குறைபாடு காரணமாக தசைப்பிடிப்பு மற்றும் தசை பலவீனம் கூட ஏற்படலாம். ஏனெனில் கால்சியம் இல்லாத தசைகள் அவற்றின் இயல்பான தொனியை பராமரிக்க முடியாது.

* வலிப்புத்தாக்கங்கள்: ஹைபோகால்சீமியா மூளையை அதிகமாக உற்சாகப்படுத்துவதால் வலிப்புத்தாக்கங்களைத் தூண்டும்.

* ஆஸ்டியோபோரோசிஸ்: கால்சியம் குறைபாடு குறைந்த எலும்பு-தாது அடர்த்திக்கு வழிவகுத்து ஆஸ்டியோபோரோசிஸை ஏற்படுத்தும். இதில் ஒருவரின் எலும்புகள் உடையக்கூடியதாகி, எலும்பு முறிவு ஏற்படும் அபாயம் அதிகமாகும்.

* வறண்ட சருமம்: கால்சியம் அளவு குறைவாக இருக்கும்போது, ​​சருமத்தில் ஈரப்பதம் மற்றும் ஆரோக்கியமான pH ஐ பராமரிக்க முடியாது. இதனால், உங்கள் தோல் வறண்டு போகலாம்.

* பல் மற்றும் ஈறு பிரச்சனைகள்: உடலில் கால்சியம் சத்து குறைவதால் ஈறு நோய் மற்றும் பல் சொத்தை ஏற்படுவது பொதுவானது.

* ரிக்கெட்ஸ்: குறைந்த கால்சியம் அளவு குழந்தைகளில் ரிக்கெட்ஸ் மற்றும் எலும்பு முறிவுக்கு வழிவகுக்கும்.

  • michael rayappan character was inspired from original character said by atlee ராயப்பன் கேரக்டர் உண்மையிலேயே வாழ்ந்தவர்- யார் அந்த நபர்? சீக்ரெட்டை உடைத்த அட்லீ