நீங்கள் சுயஇன்ப பழக்கத்திற்கு அடிமையாகிறீர்கள் என்பதற்கான அறிகுறிகள் என்ன? சில சுவாரசியமான தகவல்கள் உங்களுக்காக

Author: Dhivagar
28 July 2021, 5:12 pm
symptoms that shows you are addicted to masturbation
Quick Share

சுயஇன்பம் காணுதல் என்பது மனிதர்களின் இயல்பான ஒரு செயல்பாடுதான். அதுமட்டுமில்லாமல் இது ஒரு ஆரோக்கியமான செயல்முறையாகவும் கருதப்படுகிறது. இது பாலியல் இன்பத்தை அதிகரிக்கும் மற்றும் ஆரோக்கியமான பாலியல் வாழ்க்கைக்கு எந்த பாதிப்புகளையும் ஏற்படுத்தாது. இருப்பினும், இது ஒரு ஆட்கொள்ளும் போதை பழக்கம் ஆக மாறக்கூடாது. சுயஇன்பம் காணுதல் ஒரு கட்டுப்பாடற்ற செயல்முறையாக மாறும் அளவுக்கு அதிகமாக அதற்கு அடிமையாகக்கூடாது.  மக்கள் ஏன் சுயஇன்பம் காணுகின்றனர், எவ்வாறு நிறுத்துவது, என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

நீங்கள் அதிகமாக சுயஇன்பம் செய்கிறீர்கள் என்ற உணர்த்தும் அறிகுறிகள் யாதெனில்:

  • சுயஇன்பம் செய்ய வேலை, பள்ளி மற்றும் சமூக கூட்டங்களைத் தவிர்த்தல்,
  • சுயஇன்பம் காண ஒரு கட்டுப்பாடற்ற வேட்கை,
  • தோன்றும் இடங்களில் சிந்திக்காமல் அதைச் செய்வது,

போன்றவை எல்லாம் நீங்கள் அளவுக்கு அதிகமாக சுயஇன்பம் கண்டு அதற்கு அடிமையாகிறீர்கள் என்பதை உணர்த்தும் அறிகுறிகள் ஆகும்.

எல்லோருமே சுயஇன்பம் காண்கின்றனர், இது ஒரு ஆரோக்கியமான செயல்முறை தான். பாலியல் உறவில் திருப்தி அடைந்தவர்கள் மற்றும் திருப்தியடையாதவர்கள் என எல்லோருமே சுயஇன்பம் செய்கிறார்கள். நீங்கள் மனதில் கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால், நீங்கள் அதை அதிகமாக செய்யக்கூடாது. அதிகமாக சுயஇன்பம் கண்டு அதற்கு அடிமையாகக்கூடாது

சுயஇன்பம் குறித்த சில சுவாரசிய தகவல்கள்:

  • ஒவ்வொரு வாரமும் அதிகபட்சம் ஐந்து முறை சுயஇன்பம் காணும் ஆண்களுக்கு புரோஸ்டேட் புற்றுநோய் உருவாகும் அபாயங்கள் மிகவும் குறைவு.
  • சுயஇன்பம் காணுவதால் ஆண்குறி சுருங்குதல், பாலியல் ஈடுபாடு குறைதல், கருவுறாமை அல்லது பார்வைக்குறைபாடு ஏற்படும் என்று அறியாதவர்கள் சொல்வதெல்லாம் சுத்த பொய். சுயஇன்பம் காணுவதால் இது போன்ற பிரச்சினைகள் ஏதும் ஏற்படாது. 
  • சொல்லப்போனால், அளவோடு செய்யும்போது இதனால் உடலுக்கு ஆரோக்கியம் மட்டுமே ஏற்படும். 
  • 20 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் அதிக அளவில் சுயஇன்பம் செய்கிறார்கள்.
  • சுயஇன்பம் உங்கள் பாலியல் வாழ்க்கையை மேம்படுத்தும்.
  • ஆண்கள் பெண்களை விட அதிக அளவில் சுயஇன்பம் செய்கிறார்கள்.

Views: - 403

1

0