மகத்துவம் வாய்ந்த மரவள்ளிக்கிழங்கு பற்றி உங்களுக்கு தெரியாத பல தகவல்கள்

Author: Hemalatha Ramkumar
20 August 2021, 5:53 pm
Tapioca Facts, Benefits, Recipes, and More
Quick Share

மரவள்ளிக்கிழங்கு ஒரு காய்கறியோ அல்லது பழமோ அல்ல. மரவள்ளி ஒரு வேர்களில் விளையும் ஒரு மாவுச்சத்து நிறைந்த உணவாகும்.  இந்தியாவிலும் மற்ற வெப்பமண்டலப் பகுதிகளில் இது ஒரு பிரதான உணவாக இது பயன்படுத்தபடுகிறது. மரவள்ளிக்கிழங்கு கார்போஹைட்ரேட்டுகளின் வளமான ஆதாரமாகும். மரவள்ளிக்கிழங்கு வேகவைத்து சாப்பிட சுவையாக இருக்கும்.  இந்த மரவள்ளிக்கிழங்கு பற்றி நீங்கள் அறியாத பல நன்மைகளை இந்த பதிவில் அறிந்துக்கொள்ளலாம்.

மரவள்ளிக்கிழங்கின் ஆரோக்கிய நன்மைகள்

சரியாக தயாரித்து உட்கொள்ளும்போது, ​​மரவள்ளிக்கிழங்கு நம் உடலுக்கு பல நன்மைகளைத் தரும் வல்லமைக்கொண்டது. அவற்றில் சில நன்மைகள் இந்த பதிவில் பார்க்கலாம்.

1. ஆரோக்கியமான எடை அதிகரிப்புக்கு உதவும்

மரவள்ளிக்கிழங்கு உடல் எடையை அதிகரிக்க ஒரு எளிய மற்றும் சத்தான வழி ஆகும். அதிக கார்போஹைட்ரேட் உள்ளடக்கம் இருப்பதால், உங்கள் தினசரி கலோரிகளை அதிகரிக்க இது ஒரு சுலபமான வழியாகும். மரவள்ளிக் கிழங்கு கொழுப்பு இல்லாதது என்பதால் உங்களுக்கு ஆரோக்கியமான உடல் எடையைக்  கொடுக்க வல்லது. இருப்பினும், சுக்ரோஸ் மரவள்ளிக்கிழங்கு வேர்களில் உள்ள சர்க்கரையின் பெரும்பகுதியை கொண்டுள்ளது என்பதால் அதிக அளவில் உட்கொள்ளக்கூடாது

2. இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவும்

மரவள்ளிகிழங்கில் இரும்பு மற்றும் தாமிரச்சத்து உள்ளது. இந்த தாதுக்கள் இரத்த ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியம். நல்ல சுழற்சி மற்றும் போதுமான ஆக்ஸிஜன் அளவை நிர்வகிப்பதன் மூலம், இந்த தாதுக்கள் இரத்த சோகை போன்ற நோய்களை எதிர்த்துப் போராட உதவுகின்றன.

3. பிறவி குறைபாடுகளை குறைக்க உதவும்

மரவள்ளிக்கிழங்கில் B-காம்ப்ளெக்ஸ் வைட்டமின்கள் அதிகமாக இருக்கலாம். கர்ப்ப காலத்தில் உட்கொள்ளும் போது, ​​அவை குழந்தைகளில் நரம்பு குழாய் குறைபாடுகள் ஏற்படும் ஆபத்தை குறைக்க உதவியாக இருக்கும்.

4. செரிமானத்திற்கு உதவுகிறது

மரவள்ளியில் உணவு நார்ச்சத்து அதிகம் உள்ளது. மலச்சிக்கல், வயிறுவீக்கம் மற்றும் செரிமான குறைபாடு போன்ற பிரச்சினைகளிலிருந்து உங்களை விடுவிக்க  உதவியாக இருக்கும்.

5. எலும்பு தாது அடர்த்தியை பலப்படுத்தும்

இந்த கிழங்கில் அதிக புரதம் மற்றும் வைட்டமின் K சத்துக்கள் நிறைந்து உள்ளது. அவை தசை மற்றும் எலும்பு ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். எனவே, அவை உங்கள் கைகால்கள் மற்றும் மூட்டுகளை ஆரோக்கியமாகவும், நெகிழ்ச்சியாகவும் இருக்க உதவியாக இருக்கும்.

6. அல்சைமர் நோயைத் தடுக்க உதவும்

ஒரு ஆய்வின்படி, வைட்டமின் K மன ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. மூளை நரம்பியல் செயல்பாட்டை அதிகரிப்பதன் மூலம் அல்சைமர் நோயின் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைகிறது.

7. உப்பு மற்றும் டிரான்ஸ் கொழுப்பு இல்லாதது

உங்களுக்கு உயர் இரத்த அழுத்தம் இருந்தால், சோடியம் குறைவாக இருப்பதால் மரவள்ளிக்கிழங்கை சாப்பிட பாதுகாப்பானது தான். இதில் சர்க்கரை அல்லது கொலஸ்ட்ரால் எதுவும் இல்லை. இது சமையல் மற்றும் பேக்கிங்கில் பயன்படுத்த பசையம் இல்லாத சிறந்த மாற்று ஆகும்.

8. இதய பிரச்சினைகளைத் தடுக்கிறது

மரவள்ளிக்கிழங்கு இதய நோய் மற்றும் பக்கவாதம் தடுப்பு உட்பட பல இதய ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. குறைந்த சோடியம் உள்ளடக்கம் இருப்பதால் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் இதிலிருந்து அதிகம் பயனடைகிறார்கள்.

9. ஆஸ்டியோபோரோசிஸ் தடுப்புக்கு உதவுகிறது

ஆஸ்டியோபோரோசிஸ் என்பது எலும்புகளில் ஏற்படும் நுண்துளைகள் ஆகும். அதுபோன்ற பிரச்சினை ஏற்படாமல் தடுப்பதற்கு கால்சியம் சத்து நன்மை பயக்கும். அளவாக மரவள்ளிக்கிழங்கு உட்கொள்வதால் உங்கள் எலும்புகள் வலுவடையும்.

Views: - 419

0

0