உதட்டோடு உதடு வைத்து முத்தம் கொடுப்பதால் ஏற்படும் 10 அறிவியல் நன்மைகள்

3 February 2021, 6:07 pm
10 Scientific Benefits of Kissing
Quick Share

முத்தம் என்பது ஒருவரிடம் நாம் நம் பாசத்தை வெளிப்படுத்தும் ஒரு உணர்வின் வெளிப்பாடு. குழந்தைகளின் அழகான முகங்களிலும், நண்பர்களின் கன்னங்களிலும், காதலர்களை உதட்டிலும் முத்தமிடுகிறோம். முத்தம் என்பது உறவு பிணைப்புக்கான வழிமுறைகளில் ஒன்றாகவும் பார்க்கப்படுகிறது. முத்தத்தால் வெளிப்படையான இன்பங்கள் ஏராளமாக இருந்தால், அறிவியல் ரீதியாக நிரூபணம் செய்யப்பட்ட சில குறிப்பிடத்தக்க சுகாதார நன்மைகளும் உள்ளன. அது என்னவென்று தெரிந்துக்கொள்வோம்.

1. முத்தம் ஆக்சிடோசின் மற்றும் வாசோபிரசின் போன்ற ஹார்மோன்களை வெளியிடுகிறது. இந்த நியூரோட்ரான்ஸ்மிட்டர் ஹார்மோன்கள் லவ் ஹோர்மோன் என்றும் அழைக்கப்படுகிறது. இது உறவின் பிணைப்பை மேலும் உறுதிப்படுத்தும். 

2. முத்தத்தால் வெளியாகும் ஆக்சிடோசின் மற்றும் வாசோபிரசின் போன்ற ஹார்மோன்கள் குணப்படுத்தும் மன அழுத்தம் போன்ற பிரச்சினைகளைக் குணப்படுத்தும் திறன்களைக் கொண்டுள்ளன.

3. முத்தம் கொடுப்பது அட்ரினலின் மற்றும் நோராட்ரெனலின் போன்றவற்றின் வெளியீட்டைத் தூண்டுகிறது. இவை இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு உங்களை உற்சாகமாகவும் வைத்துக்கொள்ளும்.

4. முத்தம் கொடுப்பது உங்களுக்கு மன அழுத்த கொடுக்கும் கார்டிசோல் ஹார்மோன்களின் வெளிப்பாட்டை குறைக்க உதவும்.

5. உங்கள்  மன அழுத்தம் குறையும் போது உங்கள் கொலஸ்டெரோல் அளவும் குறையும். இதனால் நீங்கள் உடல் ஆரோக்கியத்துடன் இருக்க முடியும்.

6. முத்தம் கொடுப்பது உங்கள் அலர்ஜி அறிகுறிகளை குறைக்க உதவும்.

7. உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை உயர்த்துவதில் முத்தத்திற்கும் பங்கும் உண்டு.

8. தினமும் ஒரு முறை உதட்டோடு உதடு வைத்து முத்தம் கொடுத்து வந்தால் உங்களுக்கு பல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் ஏற்படாது, நீங்கள் பல்மருத்துவரையும் சந்திக்க வேண்டிய  தேவை இருக்காது.

9. முத்தம் உங்கள் துணையுடனான உங்கள் பாலியல் வாழ்க்கையை மேம்படுத்த உதவும்.

10. முத்தம் உங்கள் துணையுடன் உங்கள் இல்லற உறவை மேம்படுத்த உதவும்.

Views: - 4

0

0