லைசின் என்றால் என்ன? லைசின் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வதற்கான முக்கியத்துவம் என்ன? | Lysine

By: Dhivagar
9 September 2021, 10:42 am
The importance of including lysine in the diet
Quick Share

லைசின் என்பது ஒன்பது அத்தியாவசிய அமினோ அமிலங்களில் ஒன்றாகும் மற்றும் புரதங்களின் கட்டுமான அமைப்புக்கு மிகவும் அவசியமான ஒன்று. லைசின் எனும் அமினோ அமிலத்தை உடலால் உற்பத்தி செய்ய முடியாது என்பதால் இதை வெளிப்புறமாக லைசின் நிறைந்த உணவுகளைக் கொண்டு தான் எடுத்துக்கொள்ள வேண்டும். அப்படி உணவுகளின் வாயிலாக நாம் எடுத்துக்கொள்ளும்போது நம் உடல் அதை உறிஞ்சிக்கொள்ளும்.

இந்த லைசின் அமினோ அமிலம் இறைச்சி, மீன், முட்டை போன்ற புரத அடிப்படையிலான உணவுகள் மற்றும் சீமைத்தினை, பீன்ஸ் போன்ற தாவர அடிப்படையிலான உணவுகளில் காணப்படுகிறது.

லைசின் நிறைந்த உணவுகளை நீங்கள் ஏன் உட்கொள்ள வேண்டும் என்பதற்கான முக்கியத்துவத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.

எலும்புகள் மற்றும் தோல் போன்ற இணைப்பு திசுக்களில் கொலாஜன் ஒரு முக்கிய அங்கமாகும் மற்றும் காயங்களைக் குணப்படுத்துவதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.

காயங்கள் ஏற்பட்ட இடத்தில் கொலாஜன் உற்பத்திக்கு லைசின் உதவுகிறது மற்றும் காயங்களை ஆற்றும் செயல்முறையை துரிதப்படுத்துகிறது. இது காயத்தில் புதிய உயிரணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது மற்றும் புதிய இரத்த நாளங்களை உருவாக்க உதவுகிறது.

பனிக்காலத்தில் உதடுகளில் அல்லது வாயைச் சுற்றி ஏற்படும் புண்களால் மிகுந்த வலி ஏற்படும் மற்றும் அடிக்கடி எரிச்சல், வலி ​​உணர்வு உண்டாகும். நோய் எதிர்ப்பு அமைப்பு பலவீனமாக இருக்கும்போது HSV-1 என்ற வைரஸால் புண்கள் ஏற்படுகின்றன.

லைசின் மற்றொரு அமினோ அமிலமான அர்ஜினைனின் செயல்பாட்டைத் தடுப்பதன் மூலம் HSV-1 ஐ பிரதிபலிப்பதைத் தடுக்க உதவுகிறது. அதன் மூலம் இது புண்களை குணப்படுத்தும் ஆற்றலைப் பெறுகிறது.

50 ஆரோக்கியமான நபர்களிடம் நடத்தப்பட்ட ஒரு வார ஆய்வில், லைசின் மற்றும் அர்ஜினைன் ஆகியவை மன அழுத்தத்திற்கு காரணமாக இருக்கும் ஏற்பிகளைத் தடுக்க உதவியது கண்டறியப்பட்டது, இதனால் மன அழுத்த ஹார்மோன் கார்டிசோலின் அளவைக் கணிசமாகக் குறைக்க முடியும்.

இதற்கான ஆராய்ச்சிகள் தற்போது ஆரம்ப கட்டத்தில் இருந்தாலும், லைசின் ஸ்கிசோபெர்னியாவை மேம்படுத்தும் திறனைக் கொண்டுள்ளது என்று நம்பப்படுகிறது. மனநல பிரச்சினைகளை குணப்படுத்த லைசின் மிகவும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

லைசின் உடலுக்கு கால்சியத்தை உறிஞ்சுவதற்கு உதவுவது மட்டுமல்லாமல், சிறுநீரகங்கள் தக்கவைத்துக்கொள்ள உதவுகிறது, இதனால் சிறுநீரில் கால்சியம் இழப்பின் அளவைக் குறைக்கிறது. எலும்பு ஆரோக்கியத்தை பராமரிக்க லைசின் உதவுகிறது மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற நிலைகளை குணப்படுத்த உதவுகிறது.

இரத்த நாளங்களில் கால்சியம் சேர்வதை லைசின் தடுக்கிறது என்று ஒரு ஆய்வு காட்டுகிறது, இது இதய நோய்க்கு வழிவகுக்கும்.

Views: - 188

1

0

Leave a Reply