‘ஏழைகளின் ஆப்பிள்’ என்றழைக்கப்படும் இந்த கனியின் மகத்துவம் எண்ணில் அடங்காதது!!!

20 October 2020, 7:04 pm
Quick Share

அனைவரும் விரும்பி உண்ணும் ஒரு கனி என்றால் அது நெல்லிக்கனி தான். எப்போதும் இளமையாகவும், அழகாகவும் இருக்க வேண்டும் என்ற ஆசை கொண்டவர்கள் இதனை அதிக அளவில் எடுத்து கொள்கின்றனர். இவர்களின் இந்த ஆசையை நிறைவேற்றும் ஒரு கனியாக நெல்லிக்கனி அமைகிறது. ‘என்றும் பதினாறு’ போல இருக்க தினமும் தவறாமல் நெல்லிக்காய் ஜூஸ் குடித்து வர வேண்டும். 

நெல்லிக்காய் 82% நீர்ச்சத்தால் ஆனது. மேலும் இதில் புரதம், கால்சியம், மாவுச்சத்து, வைட்டமின் போன்ற சத்துக்களும் அடங்கி உள்ளன. குறைந்த விலையில் கிடைக்கும் இந்த நெல்லிக்காயானது ‘ஏழைகளின் ஆப்பிள்’ என்றும் கூட அழைக்கப்படுகிறது. தினமும் ஒரு ஆப்பிள் பழம் சாப்பிட்டு வந்தால் மருத்துவரிடம் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது என்ற பழமொழியை கேட்டிருப்பீர்கள். 

ஆனால் ஆப்பிள் சற்று விலை உயர்ந்த பழங்களில் ஒன்று. தினமும் இதனை வாங்கி சாப்பிடும் அளவிற்கு அனைவரிடமும் பணம் இருக்கும் என கூறி விட முடியாது. இருந்தாலும் கவலை வேண்டாம்… ஆப்பிள் பழத்திற்கு பதிலாக தினமும் ஒரு நெல்லிக்கனியை கூட நீங்கள் சாப்பிட்டு வரலாம். இத்தகைய மகத்துவம் வாய்ந்த நெல்லிக்கனியை சாப்பிடுவதினால் ஏற்படும் நன்மைகளை பற்றி இப்போது தெரிந்து கொள்ளலாம். 

நெல்லிக்கனியில் நிறைந்துள்ள குரோமியம் என்ற சத்தானது இதய நோய்கள் வராமல் பார்த்து கொள்வதில் வல்லமை பெற்றது. மேலும் இதய தசைகளை வலுவடைய செய்கிறது. இது மட்டும் இல்லாமல் இதய வால்வுகளில் ஏதேனும் அடைப்பு இருந்தால் அதை சரி செய்து, சீரான இரத்த ஓட்டத்திற்கு வழிவகுக்கிறது. இதனால் குறிப்பாக மாரடைப்பு ஏற்படாமல் பார்த்து கொள்கிறது. 

நாம் ஆரோக்கியத்தை கவனத்தில் கொள்ளாமல்  சாப்பிடும் உணவின் காரணமாக நம் உடலில் அதிகப்படியான கொழுப்பானது சேர்ந்து விடுகிறது. இத்தகைய கொழுப்பை குறைக்கும் தன்மை நெல்லிக்கனிக்கு உண்டு. சிறுநீர் சம்பந்தப்பட்ட பிரச்சினை உள்ளவர்கள் தினமும் நெல்லிக்கனி சாறு அருந்தி வர அதிகப்படியான சிறுநீர் வெளியேறி சிறுநீரக கோளாறானது மெல்ல மெல்ல குணமாகும். 

அடுத்தபடியாக நெல்லிக்கனியில் நிறைந்து காணப்படும் கால்சியம் சத்தானது எலும்பு சம்மந்தமான பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வு தருகிறது. மூட்டு வலியினால் அவதிப்படுபவர்கள் தினமும் நெல்லிக்கனி ஜூஸ் குடித்து வருவது பயன் அளிக்கும். செரிமான கோளாறுகளுக்கும் நெல்லிக்கனி ஒரு அருமருந்தாக விளங்குகிறது. 

ஒரு சிலருக்கு அடிக்கடி வாய்ப்புண்கள் ஏற்படுவது வழக்கம். இதனால் சரியாக சாப்பிட கூட முடியாது. இத்தகைய பிரச்சினை ஏற்படாமல் தடுக்கும் ஆற்றல் நெல்லிக்கனிக்கு உண்டு. ஹீமோகுளோபின் குறைப்பாட்டை சரி செய்ய தினமும் நெல்லிக்கனி சாப்பிட்டு வரலாம். கிட்டப்பார்வை, தூரப்பார்வை மற்றும் கண் புரை போன்ற கண் சம்பந்தப்பட்ட நோய்களுக்கும் நெல்லிக்கனி நல்ல ஒரு தீர்வாக அமைகிறது.

Views: - 24

0

0