நீங்க எளிதில் ஒல்லியாக வேண்டுமா? 40 கலோரிக்கும் குறைந்த உணவை மட்டும் சாப்பிடுங்க போதும் !

14 February 2020, 2:18 pm
banana flower updatenews360
Quick Share

நம்  அனைவருக்குமே   உடலை கட்டுக்கோப்புடன்  வைத்திருக்க வேண்டும் என்றே  ஆசை. ஆனால் சில உணவுப் பொருட்கள்  காரணமாக நம் உடல் எடை அதிகரிக்கின்றதே  தவிர, எடை குறைவதில்லை. உடல் எடை குறையா   40 கலோரிக்கும் குறைந்த உணவுகளை உண்ணுங்கள். அவை  உங்கள் உடல் எடையை குறைத்து, உடலை மெல்லியதாக காண்பிக்கும்.  உங்களுக்கு கட்டான உடல் வடிவமும் கிடைக்க செய்யும். 

கீழே கொடுக்கப்பட்ட  உணவுகளில் 40 கலோரிக்கும்  குறைவான உணவுகளே தரப்பட்டுள்ளது.  அதை உண்பதன் மூலம் உங்கள் உடலை நீங்கள்  கட்டுப்பாட்டுடன் வைத்துக்கொள்ளலாம்.

 ப்ரோக்கோலி:

ஒரு  கப் நிறைய  இருக்கும் ப்ரோக்கோலியில்  34 கலோரிகள் மட்டுமே உள்ளது. எனவே இதை  நீங்கள் ப்ரோக்கோலியை பயன்படுத்தி பொரியலாகவும்,  சாம்பார் சமைத்தும் நீங்கள் உண்ணலாம்.

காலிபிளவர்:

காளிபிளவரை நீங்கள்   வறுத்தும், குழம்பு தயாரித்தும் உண்ணலாம்.    100 கிராம்  வேகவைத்த  காலிபிளவரில், 25  கலோரிகள் மட்டுமே நிறைந்திருக்கிறது.

வெள்ளரி:

பாதியளவு  நறுக்கப்பட்ட   வெள்ளரியில் இன்னும் குறைவாக   22 கலோரிகள் மட்டுமே உள்ளது.

கிரேப் புரூட்:

பாதி  அளவு இருக்கும்    கிரேப் புரூட்டில் 37 கலோரிகள்  இருக்கின்றது. அதுமட்டுமில்லமல் இது ரத்த அழுத்தத்தை  குறைக்க வல்லது.

குடமிளகாய்:

100   கிராம் குடைமிளகாயில் 31  கலோரிகள் மட்டுமே நிறைந்திருக்கிறது.  அதுமட்டுமில்லாமல் இது வயிற்றை சுத்தம்  செய்ய பயன்படுகின்றது.

பாப்கார்ன்:

ஒரு கப்  நிறைய உள்ள  பாப்கார்னில் வெறும் 34  கலோரிகள் மட்டுமே நிறைந்திருக்கின்றது.

காளான்:

இயற்கையாக  கிடைக்கும் சரியான அளவு  காளானில் வெறும் 4 கலோரிகள்  மட்டுமே நிரம்பி இருக்கின்றன.