நோய்களை ஓட ஓட விரட்ட இந்த சுவையான பானம் ஒன்றே போதும்!!!

18 August 2020, 6:19 pm
Quick Share

நாடு முழுவதும் பருவமழை  தொடங்கியிருந்தாலும், பல இடங்கள் தொடர்ந்து வெப்பமான மற்றும் ஈரப்பதமான காலநிலையை அனுபவித்து வருகின்றன. கணிக்க முடியாத வானிலை மாற்றங்கள் காரணமாக, உடலானது  நோய்த்தொற்றுகள் மற்றும் காய்ச்சலுக்கு ஆளாக்குகிறது.  தற்போது சுகாதார நெருக்கடியால்  உலகம் தத்தளித்து வருகிறது.  உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் நடவடிக்கைகளை ஒருவர் பின்பற்ற வேண்டும். 

உங்கள் வழக்கமான அளவை விட  அதிகமான நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் நல்ல ஆரோக்கியத்தை சேர்க்க, ஒரு சுவையான சாறு செய்முறையை தான் இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கிறோம். உங்கள் தாகத்தைத் தணிக்க உங்களில் பலர் கடைகளில் விற்கப்படும் பானங்களை பருக ஆசைப்படுவீர்கள். ஆனால் அதற்கு பதிலாக ஆரோக்கியமான மற்றும் ருசி மிகுந்த ஒரு பானத்திற்கு ஏன் நீங்கள் மாறக்கூடாது.  

தேவையான பொருட்கள்:

½ – ஆப்பிள்

½ – ஆரஞ்சு

1 – சிறிய கேரட்

¼ – வெள்ளரி

1 அங்குலம் – இஞ்சி

¼ – எலுமிச்சை

தேவைப்பட்டால் தண்ணீர்

செய்முறை:

* அனைத்து பொருட்களையும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து ஜூஸாக அரைத்து கொள்ளுங்கள்.

* தேவைப்பட்டால் தண்ணீர் சேர்க்கவும்.

* உங்களுக்கு தேவைப்பட்டால், இனிப்பு சேர்த்து கொள்ளலாம்.

சுகாதார நலன்கள்:

* இந்த பழச்சாறானது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க சிறந்த வழியாகும். கேரட், ஆப்பிள் மற்றும் ஆரஞ்சு ஆகியவை உடலைப் பாதுகாத்துக் கொள்ளவும், தொற்றுநோய்களை எதிர்த்துப் போராடவும் உதவுகின்றன. மேலும் உங்கள் வைட்டமின் C தேவையையும் இந்த பானம் பூர்த்தி செய்கிறது.

Views: - 4

0

0