கீட்டோ டையட் பின்பற்றும் உங்களுக்கு ஏற்ற நொறுக்கு தீனி இது தான்!!!

Author: Poorni
10 October 2020, 11:00 am
Quick Share

கீட்டோஜெனிக் டயட் என்றும் அழைக்கப்படும் கீட்டோ டயட் ஒரு குறைந்த கார்போஹைட்ரேட்  உணவாகும். இதில் ஒருவர் அதிக அளவு கொழுப்புகளை உட்கொள்கிறார். அதே நேரத்தில் புரதமானது குறைந்த அளவு கார்போஹைட்ரேட்டுகளுடன் போதுமான அளவு உட்கொள்ளப்படுகிறது. ஆகவே, விரைவான எடை இழப்பை ஊக்குவிக்கும் கீட்டோ உணவைப் பின்பற்றுபவராக நீங்கள் இருந்தால், உங்களுக்கான சரியான ஸ்னாக்ஸ் ரெசிபி  ஒன்று இங்கு உள்ளது. இருப்பினும், நீங்கள் எந்தவொரு உணவையும் தொடங்குவதற்கு முன்பு மருத்துவ கருத்தைப் பெற எப்போதும் அறிவுறுத்தப்படுகிறது.

இந்த எளிதான செய்முறைக்கு இரண்டு எளிய பொருட்கள் மட்டுமே  தேவைப்படுகிறது. ஆகவே இந்த செய்முறையை நிச்சயம் உங்கள் வீட்டில் முயற்சித்து பாருங்கள். 

தேவையான பொருட்கள்:

60 கிராம் – பாதாம் மாவு

60 கிராம் – பார்மேசன் சீஸ்

தண்ணீர்

செய்முறை:

ஒரு மிக்சி ஜாரை எடுத்து,  பாதாம் மாவு மற்றும் அரைத்த பார்மேசன் சீஸ் ஆகியவற்றை சம அளவு (60 கிராம்) சேர்க்கவும்.

இப்போது அதை கலந்து பின்னர் 2 தேக்கரண்டி  தண்ணீர் சேர்க்கவும். ஒரு நிமிடம் மீண்டும் கலந்து செயல்முறையை மீண்டும் செய்யவும். இரண்டாவது முறை செய்யும் போது ஒரு தேக்கரண்டி தண்ணீர் போதுமானது. 

இப்போது கலவையை ஒரு மாவாக பிசைந்து டிரேயில்  ஒரு காகிதத்தோல் தாள் மீது வைக்கவும்.

உங்கள் கைகளைப் பயன்படுத்தி அதை தட்டையாக அழுத்தி,  தோராயமாக ஒரு செவ்வக வடிவத்தைக் கொடுங்கள். மற்றொரு காகிதத்தோல் தாளுடன் அதை மூடி, நன்றாக அழுத்தம் கொடுங்கள். பிறகு  தாளை அகற்றி சிறிய சதுர துண்டுகளாக வெட்டவும்.

ஒரு டூத் பிக்கை பயன்படுத்தி, மாவின் மேற்பரப்பில் சிறிய துளைகளை செய்யவும். 

இப்போது இதனை ஒரு தட்டையான கண்ணாடித் தட்டில் மாற்றி மைக்ரோவேவில் வைக்கவும்.

ஒரு நிமிட இடைவெளியில் அவற்றை 2 நிமிடங்கள் சமைக்கவும். சமைத்த பின் 5-10 நிமிடங்கள் குளிர்விக்கட்டும். முடிந்ததும், அழகுபடுத்துவதற்கு சிறிது உப்பு அல்லது ஆர்கனோவைச் சேர்த்து மகிழுங்கள்!

Views: - 46

0

0