இந்த நேரத்தில் தான் நாம் தன்னம்பிக்கையோடு இருக்க வேண்டும்….அதற்கான ஒரு எளிய வழி இதோ!!!
4 September 2020, 11:30 amதன்னம்பிக்கை என்பது ஒருவர் தம்மை தாமே நம்புவது. உங்களை நம்புவதற்கான திறன் அல்லது நம்பிக்கையானது, எந்தவொரு பணியையும் முரண்பாடுகள் எதுவுமில்லாமல், சிரமம் இல்லாமல், துன்பங்கள் எதுவுமில்லாமல் சிறப்பாக நிறைவேற்ற உதவுகிறது. நீங்கள் ஒரு செயலை நிறைவேற்ற முடியும் என்ற நம்பிக்கை தான் தன்னம்பிக்கை. தன்னம்பிக்கை ஏன் ஒரு திறமை, மற்றும் ஒருவர் அதிக தன்னம்பிக்கை அடையக்கூடிய வழிகள் என்ன என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
தன்னம்பிக்கையை வளர்ப்பதற்கான எளிதான வழி – மீண்டும் மீண்டும் ஒரு விஷயத்தை பயிற்சி செய்வதே ஆகும். ஒரு போதும் தோல்வியை ஏற்காதீர்கள். நாம் அனைவரும் எதையாவது மீண்டும் மீண்டும் செய்வோம். ஆனால் நம்மில் மிகச் சிலரே அதில் தொடர்ந்து நீடிப்பார்கள். எனவே இது தன்னம்பிக்கையை வளர்ப்பதற்கான ஒரு வழியாகும். நீங்கள் செய்ய விரும்புவதைச் செய்யுங்கள். ‘முடியாது’ என்பதை ஏற்றுக்கொள்ளாதீர்கள்.
மற்றொரு வழி சுய பேச்சு … நம் எண்ணங்கள் நம் செயல்களை பாதிக்கின்றன என்பதை நாம் அறிவோம். எதிர்மறையான சுய-பேச்சை ஒரு போதும் பேச கூடாது. நம்மை நாமே தேற்றிக் கொள்ள கூடிய நல்ல வார்த்தைகளை நம்மிடத்தில் நாம் பேச வேண்டும்.
மேலும் மற்றவர்கள் மீது நீங்கள் நம்பிக்கையை வளர்த்துக் கொள்ள ஒரு நல்ல வழி உள்ளது. அதாவது அந்த நபர் நன்றாக இருக்கும்போது அவர்களிடம் பேசுங்கள். இது மிகவும் எளிமையானது.
ஒருவரின் எதிர்மறையான நடத்தைகளைத் திருத்துவதற்குப் பதிலாக, மற்றவர்களின் நேர்மறையான நடத்தைகளைப் புகழ்வதை கற்றுக்கொள்ளுங்கள். இதனால் அந்த நபரின் தன்னம்பிக்கை குறைக்கப்படாது. மேலும் ஒரு பணியை எவ்வாறு சரியாகச் செய்வது என்பதையும் அவர்கள் கற்றுக்கொள்கிறார்கள்.
0
0