பற்சொத்தை ஏற்படுவதற்கு முன்பே அதனை தடுக்க நீங்கள் செய்ய வேண்டியது இது தான்!!!

21 November 2020, 11:29 pm
Quick Share

பற்கள் என்பது சாப்பிடுவதற்கு மட்டும் அல்ல. நாம் சிரித்தால் நமது புன்னகைக்கு அழகு சேர்ப்பதும் பற்கள் தான். அதனால் நம் பற்களை முறையாக பராமரிப்பது மிகவும் அவசியம். தற்போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இருக்கும் ஒரு பிரச்சனை பற்சொத்தை ஆகும். இத்தகைய பற்சொத்தையை ஆரம்ப கட்டத்திலே தடுக்க என்ன மாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கலாம் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். 

◆தினமும் பல் துலக்க நீங்கள்  பயன்படுத்தும் பிரஷ் சாஃப்டாக உள்ளது என்பதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள். பிரஷ் ஹார்டாக இருந்தால் ஈறுகள் மிக எளிதில் சேதம் அடைந்து விடும். 

◆காபி, டீ ஆகியவற்றை அதிக சூட்டோடு குடிப்பதை தவிர்த்து விடுங்கள். மேலும் ஐஸ்கிரீம் போன்ற குளிர்ச்சியான பொருட்களை அடிக்கடி உண்ண வேண்டாம். 

◆மாவு வகை உணவுகள், சாக்லேட், ஸ்வீட், மிட்டாய் ஆகியவற்றை சாப்பிட்ட உடனே வாயை நன்றாக கொப்புளித்து விடுங்கள். 

◆வெற்றிலைபாக்கு, பான் மசாலாக்கள், புகைப்பிடித்தல், மதுபானங்கள் போன்றவை உடலுக்கு தீங்கு விளைவிப்பதோடு பற்களுக்கும் சுத்தமாக ஆகாத பொருட்கள். ஆகையால் முடிந்த வரை அவற்றை தவிர்த்து விடுவது நலம். 

◆குழந்தைகள் பால் குடித்த பின் ஒரு துணி கொண்டு ஈறுகளை நன்றாக துடைத்து விடவும். பற்கள் உறுதியாக இருக்க கேரட், பீட்ரூட், வெள்ளரிக்காய் போன்றவைகளை அடிக்கடி கொடுங்கள். 

◆பற்களின் ஆரோக்கியத்திற்கு தேவையான வைட்டமின் C, வைட்டமின் D, கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை அடிக்கடி எடுத்து வர வேண்டும். 

◆ஆறு மாதங்களுக்கு ஒரு முறையாவது பல் மருத்துவரை அணுகி உங்கள் பற்களை பரிசோதனை செய்து கொள்ளுங்கள். அதிலும் உங்களுக்கு பற்சொத்தை இருக்குமோ என்ற சந்தேகம் இருக்கும் பட்சத்தில் உடனடியாக மருத்துவரை அணுகுங்கள். 

◆தினமும் காலை, மாலை ஆகிய இரண்டு வேலையும் பற்களை துலக்குங்கள். 

◆எந்த உணவு சாப்பிட்டாலும் உடனடியாக வாயை தண்ணீர் கொண்டு கொப்பளித்து விடுங்கள். 

இந்த விஷயங்களை பின்பற்றினாலே போதும். உங்கள் பற்களின் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும்.

Views: - 34

0

0