மூட்டு வலியில் இருந்து நிரந்தர தீர்வு பெற இந்த ஒரு பொருள் போதும்!!!

10 November 2020, 10:42 pm
Quick Share

தற்போது இருக்கும் உணவு மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் காரணமாக பெயர் தெரியாத பல புதுப்புது நோய்கள் வரத்தொடங்கி விட்டது. அதில் யாரைக் கேட்டாலும் தற்போது அலுத்து கொள்வது மூட்டு வலி தான். உட்கார கஷ்டம்… அப்படி உட்கார்ந்து விட்டால் எழுந்திருக்க கஷ்டம் என மூட்டு வலி இருப்பவர்கள் கூறும் துயரங்களை கேட்டால் நமக்கே கஷ்டமாக இருக்கும். 

இத்தகைய பெரும் துயரம் தரும் மூட்டு வலியை நிரந்தரமாக போக்கக்கூடிய அற்புதமான ஒரு வீட்டு வைத்தியத்தை பற்றி இந்த பதிவில் பார்ப்போம். இது முழுக்க முழுக்க இயற்கையான முறையில் செய்யப்படுவதால் இதனால் ஏதும் பக்க விளைவுகள் ஏற்பட்டு விடுமோ என்றெல்லாம் பயப்படத் தேவையில்லை. 

இந்த மருத்துவம் பற்றிய மற்றொரு சிறப்பு என்னவென்றால் இதனை செய்வதற்கு நமக்கு ஒரே ஒரு பொருள் போதும். சுத்தமான வேப்ப எண்ணெய் இருந்தாலே உங்கள் மூட்டு வலியை இருந்த இடம் தெரியாமல் துரத்தி அடித்து விடலாம். மளிகை கடைகள், நாட்டு மருந்து கடைகளில் உங்களுக்கு வேப்ப எண்ணெய் கிடைக்கும். 

மூட்டு என்று சொல்லும் போது கால் முட்டி மட்டும் இல்லாமல் கைகள் மற்றும் உடலின் பிற பகுதிகளில் எங்கெல்லாம் இரு எலும்புகள் ஒன்று சேர்கிறதோ அவற்றில் ஏற்படும் வலிக்கு இந்த மருத்துவத்தை நீங்கள் செய்து வரலாம். உங்களுக்கு காலில் உள்ள மூட்டில் வலி இருக்கும் பட்சத்தில் 1 1/2 தேக்கரண்டி தூய வேப்ப எண்ணெயை எடுத்து கொள்ளுங்கள். 

இந்த எண்ணெயை ஒரு சிறிய பவுலில் போட்டு அதனை சூடான நீர் இருக்கும் ஒரு பாத்திரத்தின் மேல் வைக்கவும். இவ்வாறு நாம் செய்யும் போது எண்ணெய் ஓரளவு வெதுவெதுப்பாக மாறும். எண்ணெயை நேரடியாக அடுப்பில் வைத்து சூடாக்காமல் சுடு தண்ணீர் மீது வைக்கும் இந்த முறை டபுள் பாய்லர் மெத்தட் என்று அழைக்கப்படும். 

இளஞ்சூடான இந்த எண்ணெயை வலி இருக்கும் இடத்தில் சூடு பறக்க தேய்த்து விடுங்கள். நன்றாக தேய்த்த பிறகு 30 நிமிடங்கள் அப்படியே விட்டு விடலாம். பிறகு ஒரு துணியை எடுத்து எண்ணெயை துடைத்து எடுக்கவும். இதனை தொடர்ந்து ஒரு வாரம் செய்து வரும்போது உங்களுக்கே வலி குறைந்து இருப்பது தெரியும். ஆனால் இதற்கு ஒரு நிரந்தர தீர்வு கட்ட வேண்டும் என்ற ஆசை இருந்தால் ஒரு மாதம் வரை தொடர்ந்து செய்து வர வேண்டும். கண்டிப்பாக இந்த மருத்துவத்தை முயற்சி செய்து பாருங்கள்.

Views: - 21

0

0