வாழைப்பழத்தை தினமும் சாப்பிடலாமா கூடாதா என்ற சந்தேகம் உங்களுக்கு இருந்தால் இந்த பதிவு உங்களுக்கு தான்!!!

9 October 2020, 10:12 pm
Quick Share

பழங்கள் நம் உடல் நலத்திற்கு ஆரோக்கியமானது என்பது நமக்கு தெரியும். ஆனால் ஒரு சில பழங்களை தினமும் சாப்பிடுவதால் உடலுக்கு தீங்கு வருமோ என்ற பயம் உங்களுக்கு இருக்கலாம். அதிலும் தினமும் வாழைப்பழம் சாப்பிடும் பழக்கம் ஒரு சிலருக்கு உள்ளது. ஆனால் ஒரு சில சமயங்களில் இவ்வாறு சாப்பிடுவது நல்லது தானா என்ற எண்ணம் உங்களுக்கு தோன்றலாம். உங்களின் சந்தேகத்தை தீர்த்து வைப்பதற்காகவே இந்த பதிவு.

பயப்படாதீங்க… எந்த வித சந்தேகமும் இல்லாமல் தினமும் இரண்டு வாழைப்பழங்களை நீங்கள் சாப்பிடலாம். காலையில் வாழைப்பழத்தை சாப்பிடும் போது வயிறு நிரம்பிய ஒரு உணர்வும், ஆரோக்கியமான பழத்தை சாப்பிட்ட மன நிறைவும் ஏற்படும். இப்போது வாழைப்பழத்தை சாப்பிடுவதினால் உண்டாகும் நன்மைகளைப் பற்றி தெரிந்து கொள்ளலாம். 

காலை உணவோடு வாழைப்பழத்தை எடுத்து கொள்ளும் போது உடலுக்கு தேவையான கலோரிகள் சரிவர கிடைக்கிறது. இதனால் வேறு எந்த உணவையும் நீங்கள் தேட மாட்டீர்கள். வாழைப்பழம் உடலின் செரிமான அமைப்பிற்கு உற்ற துணையாக அமைகிறது. எனவே இப்பழம் சாப்பிடும் போது செரிமானம் சீரான முறையில் நடைபெறுகிறது. 

செரிமான மண்டலத்திற்குள் சுலபமாக நுழையும் தன்மையை வாழைப்பழம் கொண்டுள்ளது. எனவே கர்ப காலத்தில் உடல் சோர்வினால் அவதிப்படும் பெண்கள் வாழைப்பழத்தை எடுத்து கொள்ளலாம். மேலும் வாழைப்பழமானது ஒரு புரோபயாடிக் போல செயலாற்றுகிறது. இதனால் உடலில் நல்ல பாக்டீரியாக்களை உற்பத்தி செய்து, சத்துக்களை உறிஞ்ச தேவையான நொதிகளை சுரக்க உதவுகிறது. 

வாழைப்பழத்தில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்து மலச்சிக்கல் பிரச்சினையில் இருந்து உங்களுக்கு ஒரு சிறந்த தீர்வினை தருகிறது. உடல் எடையை குறைக்க குறிப்பிட்ட உணவு முறைகளை பின்பற்றுபவர்களுக்கு வாழைப்பழம் ஒரு சூப்பர் உணவு. ஏனென்றால் வாழைப்பழமானது சீக்கிரமே செரிமானமாகி வயிறு முழுவதுமாக இருக்கும் ஒரு உணர்வினை ஏற்படுத்தி விடுகிறது.

வாழைப்பழத்தில் உள்ள புரதம், கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட் நீண்ட நேரம் பசி எடுக்காமல் பார்த்து கொள்கிறது. பெண்களுக்கு ஏற்படும் PMS அறிகுறிகளை குறைப்பதில் வாழைப்பழம் சிறந்து விளங்குகிறது. இறுதி மாதவிடாயை சந்திக்கும் பெண்களுக்கு மனநிலை சார்ந்த பிரச்சினைகள் ஏற்படுகிறது. இதனை நிவர்த்தி செய்ய வாழைப்பழம் உதவும்.

Views: - 55

0

0