ஹைப்பர் டென்ஷன் என்று அழைக்கப்படும் உயர் ரத்த அழுத்தம் என்பது இதய நோய் மற்றும் பக்கவாதம் போன்ற மிக மோசமான உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தக் கூடிய ஒரு பொதுவான நிலையாகும். இன்றைய இளைஞர்கள் இடையே ஹைப்பர்டென்ஷன் என்பது அதிகரித்த வண்ணம் காணப்படுகிறது. உட்கார்ந்த வாழ்க்கை முறையை கொண்டிருப்பதன் காரணமாக மற்றும் அவசர அவசரமான வேலை சூழலின் காரணமாகவும் இது ஏற்படுகிறது. இதயத்தின் வலிமையை பாதிக்காமல் இருக்க அதற்கு தேவையான ரத்த ஓட்டம் மற்றும் ஆக்சிஜனை கொடுப்பதற்கு கூடுதல் முயற்சி எடுத்து தமனிகள் அதிக அழுத்தத்தில் வேலை பார்க்கும் நிலையே உயர் ரத்த அழுத்தம் என்று சொல்லப்படுகிறது. அதிர்ஷ்டவசமாக உயர் ரத்த அழுத்தத்தை பராமரிப்பதற்கும் அதனை குறைப்பதற்கும் ஒரு சில யுக்திகள் உள்ளன. உங்களுடைய இரத்த அழுத்தத்தை குறைத்து, ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு உதவும் சில யுக்திகளை பற்றி பார்க்கலாம்.
உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவும் முதல் படி வழக்கமான முறையில் உங்களுடைய ரத்த அழுத்தத்தை கண்காணிப்பது ஆகும். உங்களுடைய சௌகரியத்திற்காக ஹோம் பிளட் பிரஷர் மானிட்டரை நீங்கள் பயன்படுத்தலாம். தினமும் அதற்கான கணக்கீடுகளை எடுத்து அதனை உங்களுடைய மருத்துவரிடம் பகிர்ந்து கொள்ளலாம்.
அடுத்தபடியாக ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதில் உணவு ஒரு முக்கிய பங்கு கொண்டுள்ளது. ஹைப்பர் டென்ஷனை நிறுத்தக்கூடிய உணவுகளை சாப்பிடுவது அவசியம். பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், மெலிந்த புரதங்கள் மற்றும் குறைந்த கொழுப்பு கொண்ட பால் சார்ந்த பொருட்களை நீங்கள் சாப்பிடலாம். அதே நேரத்தில் சாச்சுரேட்டட் கொழுப்புகள் மற்றும் கொலஸ்ட்ரால் இல்லாத உணவை சாப்பிட வேண்டும். பொட்டாசியம் சத்து அதிகமாக உள்ள வாழைப்பழங்கள், சர்க்கரைவள்ளி கிழங்கு மற்றும் கீரை போன்றவற்றை சேர்த்துக் கொள்ளுங்கள்.
உங்களுடைய தினசரி சோடியம் உட்கொள்ளல் 2300 மில்லிகிராமுக்கும் குறைவாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இதுவே ஹைப்பர் டென்ஷன் இருப்பவர்கள் 1500 மில்லி கிராமுக்கும் குறைவாக சாப்பிட வேண்டும். பதப்படுத்தப்பட்ட மற்றும் அதிக உப்பு நிறைந்த பண்டங்களை தவிர்க்கவும்.
மது அருந்துவதை முடிந்த அளவு குறைத்துக் கொள்வது நல்லது. பெண்கள் ஒரு நாளைக்கு ஒரு ட்ரிங்க் மற்றும் ஆண்கள் இரண்டு ட்ரிங்க் எடுத்துக் கொள்ளலாம்.
வழக்கமான முறையில் உடற்பயிற்சி செய்வது ரத்த அழுத்தத்தை குறைப்பதற்கும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும். விறுவிறுப்பான நடை பயிற்சி ,சைக்கிள் ஓட்டுதல் அல்லது நீச்சல் போன்ற உடற்பயிற்சிகளை நீங்கள் செய்யலாம்.
இதையும் படிக்கலாமே: என்னது… முதுகு வலி ஹார்ட் அட்டாக்கின் அறிகுறியா…???
அதிகப்படியான உடல் எடை உயர் ரத்த அழுத்தத்திற்கு பங்களிக்கலாம். ஒருவேளை உங்களுடைய உடல் எடை அதிகமாக இருந்தால் சரிவிகித உணவு மற்றும் வழக்கமான உடற்பயிற்சி மூலமாக ஆரோக்கியமான உடல் எடையை பராமரிக்க வேண்டும்.
நாள்பட்ட மன அழுத்தம் உயர் இரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும். எனவே மன அழுத்தத்தை குறைக்கும் விஷயங்களை செய்வது அவசியம். இதற்கு நீங்கள் எளிமையான மூச்சு பயிற்சிகளை கூட செய்யலாம்.
போதுமான அளவு தூக்கம் பெறுவது உங்கள் ரத்த அழுத்தத்தை பராமரிப்பதற்கு மட்டுமல்லாமல் உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் அவசியம். தினமும் 7 முதல் 9 மணி நேரம் தரமான இரவு தூக்கம் தேவை.
எனவே உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதற்கு நீங்கள் உணவு, உடற்பயிற்சி, உடல் எடை, மன அழுத்தம், போதுமான தூக்கம் போன்ற விஷயங்களில் கவனம் செலுத்துங்கள்.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.
புரட்சி நாயகன் தமிழ் சினிமாவின் புரட்சி நாயகனாக வலம் வந்த முரளி, கோலிவுட் வரலாற்றில் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்…
தென்னிந்திய திரையுலகில் டாப் நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா. தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் முன்னணி நடிகர்களுக்கு…
கோவை வந்த விஜய் தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கூடட்த்திற்கு 2 நாட்கள் வந்து சென்றிருந்தார். அந்த நேரத்தில் ரோடு ஷோ…
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
This website uses cookies.