ஒருவேளை நீங்கள் ஒரு நீரிழிவு நோயாளியாக இருந்தால் அடிக்கடி வீட்டிலிருந்தபடியே நீங்கள் குளுக்கோமீட்டர் சோதனையை செய்து பார்க்க நேரிடலாம். இந்த குளுக்கோமீட்டர் சோதனையை செய்யும் பொழுது நீங்கள் மனதில் வைக்க வேண்டிய வைத்துக் கொள்ள வேண்டிய சில முக்கியமான விஷயங்கள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். குளுக்கோமீட்டர் சோதனைக்கு எந்த விரலை பயன்படுத்த வேண்டும் மற்றும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டிய ஒரு சில முன்னெச்சரிக்கைகள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
சோதனைக்கு பொதுவாக விரல் நுனிகளின் இரு பக்கங்களும் பரிந்துரை செய்யப்படுகின்றன. இந்த சோதனைக்கு நீங்கள் கட்டைவிரல் மற்றும் ஆள்காட்டி விரலை தவிர்க்க வேண்டும். குளுக்கோமீட்டர் சோதனைக்கு நீங்கள் நடுவிரல், மோதிர விரல் மற்றும் சுண்டு விரல்களை பயன்படுத்தலாம். மேலும் விரல் நுனிகளின் இரு பக்கங்களும் குறைவான உணர்திறன் கொண்டவையாக இருக்கும். அதே நேரத்தில் அங்கு அதிக ரத்த நாளங்கள் இருப்பதால் உங்களுக்கு பெரிய அசௌகரியம் ஏதும் ஏற்படாமல் போதுமான ரத்தம் கிடைத்துவிடும்.
மேலும் அடிக்கடி குளுக்கோமீட்டர் சோதனையை எடுப்பவர்கள் ஒரே விரலை எப்பொழுதும் பயன்படுத்தக் கூடாது. ஒவ்வொரு விரலாக மாற்றி ஒரு சுழற்சியை வைத்துக் கொள்வது வீக்கத்தை தவிர்ப்பதற்கு உதவும். அதுமட்டுமல்லாமல் இது தொடர்ச்சியான மற்றும் துல்லியமான முடிவுகளை உங்களுக்கு தரும். மேலும் அடிக்கடி சோதனை செய்வதால் ஏற்படும் வலியையும் இது குறைக்கும்.
இதையும் படிக்கலாமே: தீபாவளி பலகாரங்கள் சாப்பிட்டு வயிறு கெட்டுப் போய்விட்டதா… இதோ மருந்து குழம்பு ரெசிபி!!!
மனதில் வைத்துக் கொள்ள வேண்டிய விஷயங்கள்
*சோதனை செய்வதற்கு முன்பு எப்பொழுதும் உங்களுடைய கைகளை சுத்தமாக கழுவவும். சோதனைக்கு முன்பு கைகள் சுத்தமாகவும், உலர்ந்த நிலையிலும் இருப்பதை உறுதிப்படுத்துங்கள்.
*விரல் நுனியின் இரு பக்கங்களிலும் ரத்தத்தை எடுப்பது உங்களுக்கு குறைவான வலியையும் அதே நேரத்தில் போதுமான அளவு ரத்த மாதிரியையும் அளிக்கும்.
*அதே நேரத்தில் சாதனத்தின் செட்டிங்கை தேவையான அளவு ஆழத்திற்கு செல்லும்படி அமைத்து வைக்க வேண்டும். இது வலியை குறைப்பதற்கு உதவும்.
*சோதனை மூலமாக உங்களுக்கு கிடைத்த உங்களுடைய ரத்த சர்க்கரை அளவுகளின் முடிவுகளை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். தேதி, நேரம் மற்றும் உணவு அல்லது மருந்து போன்ற தேவையான விஷயங்களை அதில் எழுதி வைத்துக் கொள்வது சர்க்கரை அளவில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் மற்றும் ஏதேனும் மாற்றங்கள் தேவைப்படுகிறதா என்பதை புரிந்து கொள்ள உதவும்.
*சோதனை செய்வதற்கு கட்டைவிரல் மற்றும் ஆள்காட்டி விரலை தவிர்த்து விடுவது நல்லது.
*விரல்களை ஒருபோதும் அழுத்தி ரத்தத்தை எடுக்கக் கூடாது. அது உங்களுக்கு துல்லியமான முடிவுகளை தராது. சோதனையின் போது விரல்களை பொறுமையாக கையாள வேண்டும்.
*ஒரு முக்கியமான விதியாக ஒவ்வொரு சோதனைக்கும் ஒரு புதிய லேண்செட் பயன்படுத்துவது வலியை குறைத்து தொற்று ஏற்படுவதை தவிர்க்க உதவும்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.