பசியே எடுக்க மாட்டேங்குதுன்னு புலம்புறவங்களுக்கான டிப்ஸ்!!!

Author: Hemalatha Ramkumar
27 November 2024, 4:50 pm

ஒரு சிலருக்கு பிறருடன் ஒப்பிடும் பொழுது குறைவான பசி ஏற்படும். இது பொதுவாக பசி இழப்பு என்று அழைக்கப்படுகிறது. சாப்பிடுவதற்கான ஆசை குறைவாக இருப்பதை இது குறிக்கிறது. பசியின்மை பல்வேறு காரணங்களால் ஏற்படலாம். அதில் அஜீரணம், நெஞ்செரிச்சல், மனநல பிரச்சனை மற்றும் ஒரு சில மருந்துகள் போன்றவை அடங்கும். எனினும், பசி இழப்பு காரணமாக ஒரு தனி நபரின் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். அதிலும் குறிப்பாக அவர் உடல் எடை குறைவாக உள்ள ஒரு நபர் என்றால் அது அவருடைய உடல் ஆரோக்கியத்தை இன்னும் மோசமாக்கலாம். ஆனால் பசியை அதிகரிப்பதற்கு பல்வேறு யுத்திகள் உள்ளன. அவற்றில் எளிமையான சில வழிகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். 

காலை உணவை தவிர்க்க வேண்டாம் 

காலை உணவு என்பது ஒரு நாளில் மிக முக்கியமான உணவாகும். எனவே ஒருபோதும் உங்களுடைய காலை உணவை தவிர்க்கக்கூடாது. காலை உணவு என்பது ஊட்டச்சத்து நிறைந்ததாக இருக்க வேண்டும். அதில் நம்முடைய உடலுக்கு தேவையான அத்தனை அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும் வண்ணம் உணவை சமைத்து சாப்பிடவும். மேலும் காலை உணவை சரியான நேரத்திற்கு சாப்பிடுவதும் அவசியம்.

ஆரோக்கியமான உணவை தேர்ந்தெடுங்கள் 

உடல் எடையை அதிகரிப்பதற்கு குறைவான பசி கொண்ட நபர்கள் அடிக்கடி ஐஸ்கிரீம், பர்கர் மற்றும் பிற ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிடுவார்கள். அதிக கலோரி கொண்ட உணவுகள் சாப்பிடுவதற்கு ஆசையாக இருந்தாலும் அவற்றில் நம்முடைய உடலுக்கு தேவையான எந்த ஒரு முக்கியமான ஊட்டச்சத்துக்களும் இருக்காது. எனவே நம்முடைய ஆரோக்கியத்தை உறுதி செய்வதற்கு அதிக புரோட்டின், நார்ச்சத்து, இரும்புச்சத்து, வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் அடங்கிய ஊட்டச்சத்து மிகுந்த உணவை சாப்பிடுவது அவசியம். 

இதையும் படிக்கலாமே: தாறுமாறா தலைமுடி கொட்டினா அதுக்கு காரணம் இதுவா தான் இருக்கணும்!!!

உணவுக்கான அட்டவணை

நீங்கள் எப்போது சாப்பிட வேண்டும் என்பதை உங்களுடைய பசி தீர்மானிக்க தேவையில்லை. உங்களுடைய உணவை குறிப்பிட்ட நேரத்திற்கு அட்டவணை போட்டு திட்டமிட்டுக் கொள்ளுங்கள். அந்த நேரம் வரும் பொழுது அதற்கான ரிமைண்டர்களை அமைத்து சரியான நேரத்தில் சாப்பிடுங்கள். 

உணவை மகிழ்ச்சியோடு சாப்பிடவும் 

உணவை மகிழ்ச்சியோடு அனுபவித்து சாப்பிடுவதன் மூலமாக அதில் உள்ள ஊட்டச்சத்து பலன்களை முழுமையாக பெற்று ஆரோக்கியமான முறையில் உடல் எடையை பெறலாம். சாப்பிடும் பொழுது குடும்பத்தோடு சேர்த்து சாப்பிடுவது, டிவி பார்த்துக் கொண்டே சாப்பிடுவது அல்லது பிற வேலைகளை செய்து கொண்டே சாப்பிடுவது உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் என்றால் அதனை செய்யுங்கள். 

அடிக்கடி சிறிய உணவுகளை சாப்பிடுங்கள் 

ஒரு நாளைக்கு 3 பெரிய உணவுகளை சாப்பிடுவதற்கு பதிலாக 5 அல்லது 6 சிறிய உணவுகளை சாப்பிடுங்கள். உங்களுக்கு பசி அதிகரித்தால் உங்களுடைய உணவின் எண்ணிக்கையை இன்னும் அதிகரிக்கலாம். ஆனால் எப்பொழுதும் உங்களுடைய உணவு ஊட்டச்சத்து நிறைந்ததாக இருக்க வேண்டும் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • Harish Kalyan new Pan India movie ஹரிஷ் கல்யாணுடன் இணையும் பாலிவுட் நடிகர்..ஆஹா மஜா கூட்டணியா இருக்கே ..!
  • Views: - 60

    0

    0

    Leave a Reply