ஆரோக்கியமான மாதவிடாய் காலத்திற்கு பெண்கள் ஃபாலோ பண்ண வேண்டிய டிப்ஸ்!!!

Author: Hemalatha Ramkumar
28 May 2022, 10:43 am
Quick Share

வழக்கமான மாதவிடாய் சுழற்சியைப் பெறுவது எவ்வளவு ஆரோக்கியமானதோ, அதே சமயம் ஆரோக்கியமான மாதவிடாயை உறுதி செய்வதும் முக்கியம். வலி அல்லது ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்படுவதைத் தவிர்க்க, நீங்கள் பின்பற்றக்கூடிய பல எளிய குறிப்புகள் உள்ளன.

மாதவிடாய் என்பது பெண்களுக்கு தொற்றுநோய்க்கான அதிக ஆபத்துள்ள காலமாகும். பொதுவாக உங்கள் கருப்பை வாயைத் தடுக்கும் சளி, இரத்தம் செல்ல அனுமதிக்கும் போது உங்கள் மாதவிடாய் காலத்தில் திறக்கப்படுவதால், உங்கள் கருப்பையில் கெட்ட பாக்டீரியாக்கள் பயணிப்பதற்கான கதவுகளையும் திறக்கிறது. எனவே, உங்கள் மாதவிடாய் சுகாதாரத்தில் மிகுந்த கவனம் செலுத்துவது மிகவும் முக்கியமானது.

ஆடைத் தேர்வுகள் – இறுக்கமான ஆடைகள் உங்கள் உடலில் ஒட்டிக்கொண்டிருக்கும் என்பதால் இது போன்ற துணிகளைத் தவிர்ப்பது நல்லது. மென்மையான பருத்தி உள்ளாடைகள் மற்றும் தளர்வான ஆடைகள் ஈரப்பதத்தை தக்கவைத்து, உங்களை புதியதாகவும் உலர்ந்ததாகவும் இருக்க உதவும்.

உங்கள் மாதவிடாய் தயாரிப்புகளை அடிக்கடி மாற்றவும் – பரிந்துரைக்கப்பட்டதை விட நீண்ட நேரம் உங்கள் சானிட்டரி பேடை வைத்திருக்க வேண்டாம். 6-8 மணி நேரத்திற்கு மேல் இதை அணிய வேண்டாம். ஏனெனில் இது உங்கள் சொறி மற்றும் தொற்று அபாயத்தை அதிகரிக்கும்

போதுமான உடற்பயிற்சி மற்றும் இயக்கம் – யோகா வழக்கமான மாதவிடாய் காலத்திற்கு ஒரு நல்ல விளைவைக் கொண்டிருப்பதாக அறியப்படுகிறது. இதில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. இது ஒழுங்கற்ற மாதவிடாய்களுக்கு ஒரு சிறந்த தீர்வாகும். உடற்பயிற்சி உங்கள் உடலின் வளர்சிதை மாற்ற விகிதத்தை உகந்த அளவில் வைத்திருக்கும். எனவே, உங்கள் தசைகளை தளர்த்தவும், உங்கள் இரத்தத்தை பம்ப் செய்யவும் அல்லது விறுவிறுப்பான நடைபயிற்சி செய்யவும்.

போதுமான தூக்கம் – போதுமான தூக்கத்தைப் பெற முயற்சிக்கவும். ஏனெனில் உங்கள் தூக்கச் சுழற்சி சீர்குலைந்தால், அது உங்கள் மாதவிடாய் சுழற்சியை கடுமையாகப் பாதிக்கும். 7-8 மணி நேரத் தூக்கத்தை ஆரோக்கியமான மாதவிடாய் காலகட்டத்துக்கும், நீங்கள் மகிழ்ச்சியாகவும் இருக்க உதவும்.

ஆரோக்கியமான உணவுப் பழக்கம் – ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்கள் ஹார்மோன் சமநிலையின்மைக்கு வழிவகுக்கும். இது ஒழுங்கற்ற மாதவிடாய்களுடன் தொடர்புடையது. மாதவிடாய் தாமதம் அல்லது ஒழுங்கற்ற மாதவிடாய் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு உடல் பருமன் மிகவும் பொதுவான காரணமாகும். மேலும் உடல் பருமனுக்கு முக்கிய காரணம் ஆரோக்கியமற்ற உணவு. முழு தானியங்கள், பழங்கள் மற்றும் இலைக் காய்கறிகளின் உட்கொள்ளலை அதிகரிக்கவும். அதே நேரத்தில் உப்பு நுகர்வினை குறைக்கவும்.

நீரேற்றத்துடன் இருங்கள் – நிறைய தண்ணீர் குடிக்கவும். இது குடல் இயக்கத்திற்கு உதவுகிறது மற்றும் மாதவிடாய் பிடிப்பைத் தடுக்கிறது. நீங்கள் எவ்வளவு தண்ணீர் குடிக்கிறீர்களோ, அவ்வளவு எளிதாக உங்கள் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவும்.

மன அழுத்தத்தை ஒதுக்கி விடுங்கள் – நீங்கள் மன அழுத்தத்தில் இருக்கும்போது, ​​​​உங்கள் உடல் கார்டிசோல் என்ற ஹார்மோனை உற்பத்தி செய்கிறது. இது பெண் இனப்பெருக்க ஹார்மோனான ஈஸ்ட்ரோஜனைத் தொந்தரவு செய்ய போதுமானது. ஆரோக்கியமான மாதவிடாய் காலகட்டத்தில் ஈஸ்ட்ரோஜன் முக்கிய பங்கு வகிக்கிறது. இது போன்ற நேரத்தில் நீங்கள் அமைதியாக இருக்க வேண்டும் மற்றும் ஆழ்ந்த மூச்சை எடுக்க வேண்டும்.

Views: - 670

0

0