கொளுத்தும் கோடை வெயிலில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க உதவும் டிப்ஸ்!!!

Author: Hemalatha Ramkumar
5 May 2022, 2:09 pm
Quick Share

கோடை காலத்தின் உச்சி என்று அழைக்கப்படும் அக்னி நட்சத்திரம் ஆரம்பிச்சாச்சு. சில பகுதிகளில் வெப்பநிலை தருமாறாக அதிகரித்து வருகிறது. ஆங்கிலத்தில் ஹீட் வேவ் என்று அழைக்கப்படும் வெப்ப அலை என்ற தலைப்பு தற்போது விவாதிக்கப்படுகிறது. வெப்ப அலைகள் நீரிழப்பு போன்ற பல உடல்நலப் பிரச்சினைகளைக் கொண்டு வரக்கூடும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்த வெப்ப அலையில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ள முக்கியமான விஷயங்களில் ஒன்று, நிறைய தண்ணீர் குடிப்பது, மற்றும் தேவைப்படாவிட்டால் முற்றிலும் வெளியே செல்வதைத் தவிர்ப்பது. வெப்ப அலையானது எல்லா வயதினரையும் பாதிக்கலாம் என்றாலும், இது குழந்தைகளுக்கு குறிப்பாக மன அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும். மேலும், இது போன்ற சமயத்தில் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவைகளின் அடிப்படையில் சில விதிகளைப் பின்பற்ற வேண்டும். அது குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.

1. நீங்கள் எங்காவது பயணம் செய்கிறீர்கள் என்றால், வெயிலில் நிறுத்தப்பட்டிருக்கும் காரில் உங்கள் குழந்தையை தனியாக விட்டுச் செல்லாதீர்கள். ஆபத்தான வெப்பநிலைக்கு வாகனங்கள் வேகமாக வெப்பமடையும் என்பதால் தவிர்க்க முடியாத ஆபத்துகள் ஏற்படலாம்.

2. உங்கள் குழந்தைக்கு நிறைய திரவங்களை குடிக்க கொடுப்பது முக்கியம்.

3. குழந்தைகளுக்கு வெப்பம் தொடர்பாக ஏற்படும் நோய்களைக் கண்டறிவதும் முக்கியம்.

4. நீரிழப்பை எவ்வாறு பரிசோதிப்பது என்று தெரிந்து கொள்வது மிக அவசியம். இதனை அறிய குழந்தைக்கு செறிவூட்டப்பட்ட அல்லது இருண்ட நிறத்தில் சிறுநீர் இருக்கும் என்பதை அறிந்து கொள்ளுங்கள். இது நீரிழப்பைக் குறிக்கும்.

Views: - 776

0

0