அடிக்கடி நியாபக மறதி ஏற்படுகிறதா… உங்கள் நினைவாற்றலை அதிகரிக்க உதவும் சில எளிமையான வழிகள் இதோ!!!

Author: Hemalatha Ramkumar
31 March 2023, 2:30 pm
Quick Share

​பலருக்கு இன்று நினைவாற்றல் பிரச்சனை இருப்பதாக சொல்லப்படுகிறது. இது ஒருவரை பல பிரச்சினைகளில் கொண்டு விடலாம். உங்களுக்கும் இந்த பிரச்சினை உள்ளதா? கவலைப்படாதீர்கள்.
ஆயுர்வேதம் நினைவாற்றல் பிரச்சினைகள், கவனச்சிதறல் மற்றும் மூளைச் சிதைவு ஆகியவற்றை மேம்படுத்த உதவுகிறது. ஒரு சில ஆயுர்வேத குறிப்புகள் மற்றும் தந்திரங்கள் மூலம் கவனம் செலுத்துதல் மற்றும் நினைவாற்றலை எப்படி மேம்படுத்துவது என்பதை பார்க்கலாம்.

உங்கள் உடலுக்கு ஊட்டச்சத்து தேவைப்படுவது போலவே, உங்கள் மூளையும் ஆரோக்கியமாக இருக்கவும் சரியாக செயல்படவும் ஒரு சில உணவு தேவைப்படுகிறது. நெய், ஆலிவ் எண்ணெய், வால்நட், ஊறவைத்த பாதாம், திராட்சை, பேரிச்சம்பழம் மற்றும் ஃபிரஷான பழங்களை அடிக்கடி சாப்பிடுங்கள்.

பருப்பு, பீன்ஸ், பனீர் ஆகியவை உங்கள் மூளை ஆரோக்கியத்திற்கு சிறந்த உணவுகள். ஆயுர்வேதத்தின் படி, சீரக விதைகள் நமது மூளையின் சேனல்களைத் திறக்கின்றன மற்றும் கருப்பு மிளகு நம் மனதின் செயலாக்கத்தை அதிகரிக்கிறது.

நமது மூளை நன்றாக செயல்பட ஆக்ஸிஜன் தேவை. இருப்பினும் அதிகமான ஆக்சிஜன் உடலின் செல்களில் அதிகப்படியான ஃப்ரீ ரேடிக்கல்களுக்கு வழிவகுக்கிறது. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஃப்ரீ ரேடிக்கல்களை நடுநிலையாக்குவதற்கும் உங்கள் மன நிலையை சமநிலைப்படுத்துவதற்கும் நிரூபிக்கப்பட்ட தீர்வாகும். இளஞ்சிவப்பு மற்றும் சிவப்பு நிற பழங்கள் மற்றும் காய்கறிகளான தர்பூசணி மற்றும் தக்காளி போன்றவை ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்தவை.

உங்கள் உடலில் அதன் செயல்பாடுகளைச் சரியாகச் செய்ய போதுமான நீர் இல்லை என்றால், நீங்கள் பலவீனமாகவும் நிலையற்றதாகவும் உணரலாம். நீரிழப்பு மூளையின் நிலைமை இதுதான். ஆயுர்வேத வல்லுனர்கள் சிறப்பு மூலிகை தேநீர் குடிப்பதால் நமது மூளையை ஹைட்ரேட் செய்து நமது மன வலிமையையும் நினைவாற்றலையும் அதிகரிக்கும் என்று பரிந்துரைக்கின்றனர். பெருங்காயம், மஞ்சள் தூள், ஓமம் மற்றும் துளசி போன்றவற்றால் ஆன தேநீரை நீங்கள் பருகலாம்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

Views: - 374

0

1