ரொம்ப சோர்வா இருக்கீங்களா? இரத்த சோகை பிரச்சினைக்கு என்ன வீட்டு வைத்தியம் பண்ணலாம்?

13 May 2021, 7:15 pm
tips to increase haemoglobin level in your body
Quick Share

உடலில் இரத்த சிவப்பணுக்களின் அல்லது ஹீமோகுளோபின் அளவு குறைந்தால் இந்த இரத்த சோகை பிரச்சினை ஏற்படும். பெரும்பாலும் குழந்தைகள் மற்றும் பெண்களில் இந்த பிரச்சினை அதிகம் காணப்படுகிறது. இரத்த சோகை இருந்தால், சில அறிகுறிகள் மூலம் அதை தெரிந்துக்கொள்ள முடியும்

உடல் விரிவாக சோர்வடைதல், சோம்பல் உணர்வாக இருத்தல், சுவாசிப்பதில் சிரமம், படபடப்பு மற்றும் எதையும் சரியாக கவனம் செலுத்த முடியாமல் போவது போன்ற அறிகுறிகளை வைத்து இரத்த சோகை பிரச்சினை இருந்தால் தெரிந்துக்கொள்ளலாம். மாதவிடாயின் போது அதிகப்படியான இரத்தப்போக்கு, நாள்பட்ட இரும்புச்சத்து குறைபாடு, சிறுநீரக பிரச்சினைகள் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு போன்ற பிரச்சினைகளாலும் இரத்த சோகை ஏற்படலாம்.

இந்த இரத்த சோகைக்கு சிகிச்சையளிக்க சிறந்த வழி உடலில் இரும்புச் சத்து அளவை அதிகரிப்பது தான். இரத்த சோகைக்கான சில எளிய வீட்டு வைத்தியங்கள் இங்கே.

தேன்

தேனில் இரும்புச்சத்து அதிகம் உள்ளதால், சர்க்கரைக்கு பதிலாக இதை பயன்படுத்தினால் உடலில் சிவப்பு இரத்த அணுக்களின் அளவு அதிகரிக்கும்.

வைட்டமின் C

இரத்த சோகை உள்ளவர்கள் வைட்டமின் C நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும், ஏனெனில் வைட்டமின் C தான் இரும்புச்சத்தை உறிஞ்சுவதற்கு உடலுக்கு உதவும் ஊட்டச்சத்து ஆகும்.

உடற்பயிற்சிகள்

தினசரி சுவாச பயிற்சிகள் மற்றும் நடைபயிற்சி போன்ற லேசான உடற்பயிற்சியை செய்வதன் மூலம், உடலில் இரத்தத்தின் அளவை அதிகரித்து ஆரோக்கியத்துடன் இருக்க முடியும்.

பாதாம் 

இரத்த சோகை உள்ளவர்கள் பாதாம் சாப்பிடுவதன் மூலம் ஹீமோகுளோபின் அளவை வேகமாக அதிகரிக்க முடியும்.

பேரீச்சம் பழம்

பேரீச்சம் பழத்தை தேனில் ஊறவைத்து, தினமும் 2 பழம் சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள இரத்த சிவப்பணுக்களின் அளவு அதிகரிக்கும் மற்றும் இரத்த சோகை சீக்கிரமே குணமடையும்.

வெள்ளரிக்காய்

உடலில் பொட்டாசியம் அளவு குறைவாக இருந்தாலும், இரத்த சோகை ஏற்படலாம். உங்கள் அன்றாட உணவில் வெள்ளரிக்காயையும் சேர்த்துக் கொள்ளுங்கள். வெள்ளரிகள் தண்ணீர் சத்தில் மட்டுமல்ல, பொட்டாசியம் சத்துடனும் நிறைந்துள்ளது.

பழச்சாறு

இரத்த சோகை உள்ளவர்கள் தினமும் பீட்ரூட், பசலைக்கீரை ஜூஸ் போன்றவற்றையும் ஆப்பிள் மற்றும் ஆரஞ்சு பழச்சாறுகளை குடிப்பதன் மூலம் இரத்த சோகை பிரச்சினையிலிருந்து விடுபடலாம்.

காய்கறிகள் மற்றும் பழங்கள்

வாழைப்பழங்கள், ஆப்பிள், மாதுளை, திராட்சை போன்ற பழ வகைகளையும் அத்துடன் கேரட், பீட்ரூட் மற்றும் தக்காளி போன்ற காய்கறிகளையும் தினசரி உணவோடு சேர்த்துக்கொண்டால் இரத்த சோகையிலிருந்து விடுபடலாம்.

Views: - 238

0

0