தாம்பத்திய வாழ்க்கையில் திருப்தி கிடைக்க ஆணும் பெண்ணும் இந்த 2 விஷயத்தைச் செய்யணும்!

Author: Dhivagar
24 July 2021, 3:54 pm
tips to increase the healthiness of sexual life
Quick Share

தாம்பத்திய வாழ்க்கையில் ஆர்வம் குறைந்தால், அது கண்டிப்பாக நிச்சயம் உங்கள் கணவன் மனைவி உறவை பாதிக்கும். செக்ஸ் உணர்வின்மை, அல்லது குறைவான செக்ஸ் உணர்வு, பல ஆண்களையும் பெண்களையும் தங்கள் வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் பாதிக்கும் ஒரு பொதுவான பிரச்சினை ஆகும். உறவு பிரச்சினைகள், மன அழுத்தம் அல்லது சோர்வு ஆகியவற்றால் செக்ஸ் மீது ஆர்வம் குறையக்கூடும். செக்ஸ் உணர்வு இழப்பானது  ஹார்மோன் அளவு  குறைவதால் அல்லது ஏதேனும் உடல் நலக்குறைபாட்டின் அடையாளமாகவும் இருக்கலாம்.

உங்கள் பாலியல் வாழ்க்கையை மீண்டும் நல்ல முறையில் தொடங்க  சரியான வழிகளைத் தேடுகிறீர்களா? செக்ஸ் மீதான உங்கள் ஆர்வத்தை  அதிகரிக்கவும், உங்கள் பாலியல் வாழ்க்கையை மேம்படுத்தவும் நீங்கள் நிறைய விஷயங்களைச் செய்யலாம். உங்கள் பாலியல் வாழ்க்கையில் அதிசயங்களைச் செய்யவும் பாலுணர்வுகளைத் தூண்டவும் பல உணவுகள் மற்றும் பயிற்சிகளைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம்.  

ஆனால் இரண்டு விஷயங்கள் உங்கள் செக்ஸ் ஆர்வத்தை அதிகரிக்கும் என்று ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. 

ஒன்று பயணம். பயணம் உங்கள் பாலியல் உறவு மீதான  ஆர்வத்தை அதிகரிக்கும். அதே போல நீங்க நேர தூக்கம். இவை இரண்டும் உங்கள் பாலியல் வாழ்க்கையை ஆரோக்கியமாக மாற்றும் இரண்டு வாழ்க்கைமுறைகள் என்று சொல்லலாம்.

பிரிட்டனில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், பயணம் உடல் எடையை குறைக்கவும், நம்பிக்கையைப் பெறவும், இளமையாக உணரவும், பாலியல் உந்துதலை அதிகரிக்கவும் உதவும் என்று தெரியவந்துள்ளது. மன அழுத்த ஹார்மோன் ஆன கார்டிசோலின் அளவைக் குறைக்கவும் பயணம் உதவும்.   நாள்பட்ட மன அழுத்தம் மனச்சோர்வு மற்றும் பதட்டத்திற்கு வழிவகுக்கும் இந்த ஹார்மோன் பயணத்தின் மூலம் குறைக்கப்படும்.  இது ஆரோக்கியமான பாலியல் வாழ்க்கையில் பிரச்சினைக்கு வழி வகுக்கும் என்பதால் அதை தடுத்து நம்ம மகிழ்ச்சியாக உணர வைக்க பயணங்கள் மிகவும் உதவியாக இருக்கும்.

மேம்பட்ட பாலியல் ஆசையை அனுபவிக்க ஆண்கள், பெண்கள் இருவரும் வழக்கத்தை விட ஒரு மணி நேரம் கூடுதலாக தூங்க வேண்டும் என்றும் ஆய்வுகள்  பரிந்துரைத்துள்ளன. மோசமான தூக்க முறைகள் கொண்ட ஆண்களில் டெஸ்டோஸ்டிரோனின் அளவு  குறையும் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. இதன் விளைவாக பாலியல் உணர்வு குறைகிறது. இதனால் அவ்வப்போது உங்கள் துணையுடன் பயணங்களை மேற்கொள்வது மற்றும் நன்கு தூங்குவது உங்கள் பாலியல் வாழ்க்கையை மேம்படுத்த உதவும்.

அதே போல உங்கள் துணையுடன் பேசிப் பழகி சந்தோசமாக இருக்க வேண்டும். உறவுகளின் இடையே வெளிப்படைத்தன்மை இல்லை என்றாலும் உங்கள் பாலியல் வாழ்க்கை பாதிப்படையும்.

பெரும்பாலான ஆய்வுகளில்  செக்ஸ் வாழ்க்கை சிறப்பாக இருக்க வைட்டமின் D உதவுவதாக கண்டறியப்பட்டுள்ளது. எனவே உங்கள் செக்ஸ் வாழ்க்கையில் சிறப்பாக செயல்பட வைட்டமின் D அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

Views: - 624

0

0