உடம்பு ரொம்ப சூடாகிடுதா? இந்த பாட்டி வைத்தியம் எல்லாம் ட்ரை பண்ணுங்க!

25 June 2021, 8:44 am
tips to reduce body heat at home
Quick Share

கோடை காலம் எண்பதாலும்,  நீண்ட நேர பயணம் போன்ற பல காரணங்களால் உடல் உஷ்ணம் என்பது உலகில் பலருக்கும் இருக்கும் பிரச்சினையாக உள்ளது. உடல் வெப்பநிலை அதிகமாவது தான் உடல் உஷ்ணம் என்று சொல்கிறார்கள். உடல் வெப்பநிலை சாதாரணமாக 36.5 முதல் 37.5 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். 

இது அதிகமாகும் போது காய்ச்சல், கண் எரிச்சல், வயிற்று அசௌகரியம், புண்கள், அதிகரித்த அமிலத்தன்மை மற்றும் வாய்வு போன்ற செரிமான பிரச்சினைகளும் கூட ஏற்படும். சரி இதை எப்படி தவிர்ப்பது என்று பார்ப்போம்.

உடல் உஷ்ணத்திற்கான சரியான காரணத்தை சொல்லிவிட முடியாது. ஏனென்றால், உடல் வெப்பநிலை அதிகமாக, ​​போதுமான அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பது, அதிக ஆரோக்கியமற்ற உணவு எடுத்துக்கொள்வது, மற்றும் தொடர்ந்து காரமான உணவுகளை மட்டுமே சாப்பிடுவது போன்ற காரணங்களாலும் உடல் வெப்பம் அதிகமாகக்கூடும். அது போன்ற சமயத்தில் நீங்க ஃபாலோ செய்ய வேண்டிய பாட்டி டிப்ஸ் தான் இந்த பதிவு.

உள்ளங்கால் நன்கு நனையும்படி 20 நிமிடங்கள் தண்ணீரில் கால்களை வைக்கலாம்.

tips to reduce body heat at home

ஒரு அகலமான பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி கால்கள் நன்கு நனையும்படி வைக்க வேண்டும். குளிர்ந்த நீரில் கால்களை வைக்கும் உடல் சூடு நன்றாக தணியும். தேவைப்பட்டால் சில கொஞ்சம் ஐஸ் கட்டிகளைச் சேர்த்தும் கொள்ளலாம். 

பொதுவாகவே தண்ணீருக்கு உடலை குளிர்விக்கும் சக்தி உண்டு. உடல் வெப்பநிலை அதிகமாக இருக்கும்போது உங்கள் கால்களை 20 முதல் 30 நிமிடங்கள் தண்ணீரில் வைக்கவும், இவை உடல் வெப்பநிலையை கட்டுக்குள் வைத்திருக்க உதவியாக இருக்கும்.

தினமும் இளநீர் குடிக்கலாம் 

tips to reduce body heat at home

அடுத்து இயற்கையாக கிடைக்கும் இளநீர் குடிக்கலாம். ஏனென்றால் இளநீர் உடலுக்கு தேவையான உடனடி ஆற்றலை வழங்கும் ஒரு பானம். இது புத்துணர்ச்சியூட்டும் பானமாகவும் செயல்படுகிறது. இளநீரில் உள்ள வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் எலக்ட்ரோலைட்டுகள் வெப்பநிலையை மாற்றி வெப்பத்தை தனிக்கின்றன. இளநீர் குடிப்பதால் உடலில் நீரிழிவு நோயைத் தடுக்கவும், உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கவும் முடியும்.

காபி, டீ, பால் எல்லாம் தவிர்த்து வெந்தய தேநீர் குடிக்கலாம்.

tips to reduce body heat at home

உடல் சூடாக இருக்கும்போது காபி, தேநீர், பால் மற்றும் பிற பானங்களை தவிர்க்க வேண்டியது முக்கியம். மாற்றாக நீங்கள் வெந்தயம் போட்டு தேநீர் தயாரித்து குடிக்கலாம். வெந்தய தேநீர் குடிக்கும்போது உடலில் இருந்து வியர்வை வெளியேறும். பின்னர் உடல் குளிர்ச்சி அடையும். வெந்தய தேநீரை சூடாக குடிக்க விரும்பவில்லை என்றால், அதை குளிர்சாதன பெட்டியில் வைத்து குளிரச் செய்தும் குடிக்கலாம். வெந்தயம் உடலில் இருந்து நச்சுகளை நீக்கி உடல் வெப்பத்தை குறைக்கும் தன்மை கொண்டது.

புதினா வேகவைத்த நீரில் எலுமிச்சை, தேன் சேர்த்து குடிக்கலாம்.

tips to reduce body heat at home

புதினா இலைகள் உடலை குளிரூட்டும் தன்மைக் கொண்டது. புதினா இலைகளில் வைட்டமின் C நிறைந்துள்ளதால் உடலுக்குத் தேவையான ஆற்றலை வழங்கும். தண்ணீரில் கொஞ்சம் புதினா இலைகளைச் சேர்த்து கொதிக்க வைத்து இறக்கி விடவும்.

சில நிமிடங்களுக்குப் பிறகு இலைகளின் சாறு நன்றாக அந்த நீரில் இறங்கிவிடும். அப்படி இறங்கிய பிறகு தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து குடிக்க வேண்டும். உடல் வெப்பத்தால் கண்களில் ஏற்படும் எரிச்சல் வயிற்று வலி போன்ற பிரச்சினைகள் எல்லாம் புதினா தேநீர் குடித்தால் சரியாகிவிடும்.

வெயில் அதிகமாக இருக்கும் நேரத்தில் நீர் மோர் குடிக்கலாம்.

tips to reduce body heat at home

நீர்மோர் ஒரு சத்தான பானமாகும், இது உடல் வெப்பத்தை குறைத்து உடலை ஆற்றலுடன் வைத்திருக்கும். பொதுவாக மோரில் புரோபயாடிக்குகள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்திருக்கும். உடல் வெப்பம் எவ்வளவு தீவிரமாக இருந்தாலும், மோர் உடலை குளிர்வித்துவிடும். உங்களுக்கு சளி இருந்தால் அதில் ஒரு டீஸ்பூன் இஞ்சி சாறு மோருடன் சேர்த்துகுடிக்கலாம்.

நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை கட்டாயம் சேர்த்துக்கொள்ளலாம்.

tips to reduce body heat at home

புடலங்காய், முள்ளங்கி, சுரைக்காய், வெள்ளரிக்காய், சௌ சௌ, காலிஃபிளவர், முட்டைக்கோஸ், நூக்கல் போன்ற காய்கறிகளை அதிக உப்பு சேர்க்காமல் வேகவைத்து சாப்பிடலாம். தர்பூசணி, ஸ்ட்ராபெர்ரி போன்ற பழங்களையும் தவறாமல் சேர்த்துக்கொள்ளலாம். இதை பச்சையாக சாப்பிடலாம் அல்லது தயிருடன் சேர்த்து சாப்பிடலாம்.

வைட்டமின் C நிறைந்த பழங்கள் சாப்பிடலாம்.

tips to reduce body heat at home

ஆரஞ்சு, எலுமிச்சை, திராட்சை போன்ற வைட்டமின் C நிறைந்த பழங்கள் உடலை குளிர்விக்க வல்லது. உடல் வெப்பநிலையைக் கட்டுப்படுத்த மாதுளை சாற்றை தினமும் உட்கொள்ளலாம். எலுமிச்சை சாற்றை பிழிந்து உப்பு மற்றும் சர்க்கரை இரண்டையும் சேர்த்து குடிக்கலாம். இது உடல் வெப்பத்தையும் நீக்குகிறது, உடலுக்கு ஆற்றலையும் அளிக்கிறது. இருப்பினும் இதை மாலையில் குடிப்பதைத் தவிர்க்கவும்.

சரும குளிர்ச்சி

கோடை காலங்களில் சருமத்தை குளிர்ச்சியாக வைத்திருக்கவும் உடல் வெப்பத்தை குறைக்கவும் சோற்றுகற்றாழையின் ஜெல்லை பிரித்தெடுத்து சருமத்தில் தடவலாம். அத்துடன் சந்தனத்தையும் தோலில் தடவலாம். ஆயுர்வேத முறையின்படி, உடலை குளிர்விக்க சந்தனம் பயன்படுத்தலாம். 

பழைய சோறு 

tips to reduce body heat at home

நீர் ஆகாரம் என்பது உடல் சூட்டைத் தணித்து உடலுக்கு ஆற்றல் தரும் ஒரு பானம். இது உடலுக்கு சிறந்த உணவாக இருப்பதால் நீராகாரம் என்று அழைக்கப்படுகிறது. நீங்கள் உடல் வெப்பத்தைத் தணிக்க விரும்பினால், மறக்காமல் தினமும் நீராகாரம் உட்கொள்ளலாம்.

முந்தைய நாள் வடித்த சாதத்தில் தண்ணீர் ஊற்றி நன்கு ஊற வைத்துவிடுங்கள். மறுநாள் தண்ணீரில் மோர் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கரைத்து கொள்ளுங்கள். அடுத்த நாள் தாகமாக இருக்கும்போதெல்லாம் இதை குடித்து வாருங்கள். ஒரு வாரம் தொடர்ந்து இதை குடிப்பதால் உடல் வெப்பம் நன்றாக குறையும். 

எண்ணெய் குளியல்

tips to reduce body heat at home

வாரம் இருமுறையேனும் அரப்பு தேய்த்து எண்ணெய் குளியல் எடுத்துக்கொள்வது மிகவும் முக்கியம். குழந்தை பருவத்தில் அம்மாவோ பாட்டியோ அரப்பு அரைத்து தேய்த்து விட்டு குளிக்க சொன்ன ஞாபகம் இருக்கலாம். பணிக்கு சென்ற பின்பு அதை மறந்திருப்போம். ஆனால் அப்படி செய்வது எல்லா பருவங்களிலும் உடல் வெப்பநிலையை குறைக்க உதவியாக இருக்கும் என்பதால் மறக்காமல் எண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லது.

tips to reduce body heat at home

Views: - 465

0

0