பாரம்பரிய நெல்: அரியான் பயிர் பற்றி நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை!!!

25 January 2021, 10:21 pm
Quick Share

தினம் ஒரு பாரம்பரிய நெல் என்ற வகையில் இதுவரை நமது வலைதளத்தில் இரண்டு நெல் வகைகளைப் பற்றி பார்த்துள்ளோம். பாரம்பரியத்தை மறந்து வாழும் இந்த தலைமுறைக்கு ஒரு நினைவூட்டலாகவே இந்த சிறிய முயற்சி. இன்று நாம் பார்க்க இருப்பது அரியான் என்ற பாரம்பரிய நெல் வகையாகும். இது தமிழ்நாட்டின் ராமநாதபுரத்தை சேர்ந்த ஒரு நெல் ரகம் ஆகும். அதிலும் குறிப்பாக, ராமநாத மாவட்டத்திலுள்ள ரெகுநாதபுரம் பகுதிகளில் இது வளர்க்கப்படுகிறது. 

நீர்நிலைகளின் ஓரத்தில் இருக்கும் மணல் கலந்த மண்ணில் அருமையாக வளரக்கூடியது அரியான் என்னும் நெற்பயிர்.   

பருவம்:

அரியான் நெல் வகை நாள்வகைப்படும். இது பொதுவாக அக்டோபர் முதல் நவம்பர் மாதம் வரை விதைக்கப்படுகிறது. பிறகு ஜனவரி மாதத்தில் அறுவடை செய்யப்படுகிறது. இந்த பருவமானது நான்கு வகை அரியான் நெல்லிற்கும் பொருந்தும். மேலும் இது தான் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பின்பற்றப்பட்டு வருகிறது. 

காலம் மற்றும் மகசூல்:

அரியான் ஒரு குறுகிய கால நெற்பயிர். 120 நாள் வரை வறட்சியை தாங்கக்கூடியது. இது 5 1/2 முதல் 6 1/2 அடி வரை வளரும். கடலோரப் பகுதிகள் மற்றும் ஆற்றுப்படுக்கைகளில் இது நன்றாக செழித்து வளரும். ஒரு ஏக்கர் நிலத்தில் இதனை பயிரிடும் போது நமக்கு 2000 கிலோ முதல் 2100 கிலோ வரை கிடைக்கும். இந்த நெற்பயிரானது முதல் மூன்று கால இடையில் ஒரு முறை நல்ல மகசூலை தரும். 

அரியான் நெல் குறித்த வேறு சில விவரங்கள்:

*மேலே கூறியுள்ளது போல அரியானில் வெள்ளை அரியான், கருப்பு அரியான், சிவப்பு அரியான், வாழை அரியான் என நான்கு வகை உண்டு. 

*அரியான் நெல்லானது மூன்று நிலைகளில் அறுவடை செய்யப்படுகிறது. முதலாவதாக மேற்புற நெற்கதிரும், இரண்டாவது நடுவக வைக்கோலும், கடைசியாக அடித்தண்டும் அறுவடை செய்யப்படுகிறது. 

*அரியான் வகை பயிர்களை இலை சுருட்டு புழுக்களும், தண்டு துளைப்பான் பூச்சிகளும் எளிதில் தாக்கி விடும்.

Views: - 0

0

0