COVID-19 தொற்றிலிருந்து தப்பிக்க உதவும் SMS! இதை நீங்களும் தெரிஞ்சிக்கோங்க

18 June 2021, 9:28 am
try this SMS method to avoid Covid 19
Quick Share

கொரோனா (அ) COVID 19 தொற்றின் இரண்டாம் அலை உலகமெங்கும் பரவி மக்களை பாடாய் படுத்திவிட்டது. அது குறிப்பாக இந்தியாவில் மக்களின் அஜாக்கிரதையினால் பல உயிர்கள் வீணாய் கொரோனாவுக்கு இரையானது. இப்போது இரண்டாம் அலையின் தாக்கம் படிப்படியாக குறைந்து பல உயிர்களையும் உறவுகளையும் இழந்து இரண்டாம் அலை கரை சேரும் தருவாயில் இருக்கிறோம். இது போன்ற சமயங்களில் நாம் தைரியத்துடனும் முன்னெச்சரிக்கையுடனும் இருப்பது மிகவும் அவசியம். இந்த சமயத்தில் SMS எனும் முன்னெச்சரிக்கையுடன் நான் பாதுகாப்பாக இருக்க வேண்டியது அவசியம். 

அதென்ன SMS?

S – Social Distance எனும் சமூக இடைவெளி 

என்னதான் ஊரடங்கில் இருந்து படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்தாலும் நாம் வெளியிலோ அல்லது பொது இடங்களுக்கோ செல்லும்போது முன்னெச்சரிக்கையாக சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். முடிந்தவரை நேரடி தொடர்பைத் தவிர்க்க வேண்டும். குறைந்தது 6 அடி இடைவெளி விட்டு நிற்க வேண்டும். 

M – Mask எனும் முககவசம்

நம் அஜாக்கிரதையினால் தான் நம் முகம் முககவசத்தினுள் அடைய வேண்டிய நிலை ஏற்பட்டது. இப்போதாவது நாம் அதை சரி செய்துகொண்டால் தான் நம் வருங்காலமாவது இயல்பு நிலைக்குத் திரும்பும். முடிந்தவரை, மாற்றவுடன் நெருங்கிய தொடர்பில் செல்லும்போது, AC அறைகளில் இருக்கும்போது, பொது வெளியில் கடைகளுக்கு செல்லும்போது முககவசம் அணிந்தே இருப்போம்.

S – Sanitation & Sanitization எனும் சுகாதாரம் & சுத்திகரிப்பு

நம்மிடம் இருந்து மற்றவர்களுக்கோ மற்றவரிடம் இருந்து நமக்கோ கொரோனா தொற்று பரவுவதற்கான முதன்மை காரணம் சுகாதாரமின்மை தான். நாம் வெளியில் செல்லும்போதோ, வெளியில்   சென்று வீட்டிற்கு வரும்போதோ இயற்கை சுத்திகரிப்பான்களான மஞ்சள், வேம்பு போன்றவற்றுடனோ அல்லது கடைகளில் கிடைக்கும் சோப்பு, சேனிடைசர் போன்றவற்றுடனோ கை, கால், முகம், ஆகியவற்றை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

இதோடு முட்டை, சிறுதானியங்கள், பழங்கள், காய்கறிகள், இறைச்சி போன்ற ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொண்டு நலமுடன் இருந்தாலே நாம் கொரோனாவின் மூன்றாவது அலை எழாமல் தடுக்கவும் முடியும், தற்காத்துக்கொள்ளவும் முடியும். 

Views: - 174

0

0