பழத்தோல்களை சாப்பிட்ட பிறகு இனி தூக்கி எறியாமல் இப்படி பயன்படுத்தி பாருங்கள்!!!

16 January 2021, 2:37 pm
Quick Share

பழங்கள் சாப்பிடுவதை அனைவரும்  விரும்புவோம். அதே போல தோட்டக்கலையிலும் ஒரு சிலருக்கு ஆர்வம் இருக்கும். ஆனால் பழத்தை சாப்பிட்டு விட்டு அதன் மிச்சம் மீதியை  உங்கள் தோட்டத்திற்கு  உரமாக பயன்படுத்தி உள்ளீர்களா?  ஆப்பிள்களின் தோல், முலாம்பழம், அன்னாசிப்பழம் மற்றும் பப்பாளி, வாழைப்பழத்தின் தோல்கள், ஆரஞ்சு தோல்  போன்றவற்றை நீங்கள் தூக்கி எறியக்கூடாது. அவற்றை சேகரிக்கவும். உங்கள் தோட்டத்திற்கு அவை ஒரு அற்புதமான உரமாக பயன்படுத்தலாம். வீணாகும் பழத்தை  பயனுள்ளதாக மாற்றும்  நேரம் இது. பொதுவாக  உரம் இரண்டு முக்கிய அடுக்குகளைக் கொண்டுள்ளது: 

1. பச்சை அடுக்கு: 

பழங்கள் மற்றும் காய்கறிகள் 

2. பழுப்பு அடுக்கு: உலர்ந்த இலைகள், மர துகல்கள் மற்றும் பிற.

நீங்கள் உரம் தயாரிக்க பழங்களை  பயன்படுத்தும்போது, ​​மூடி இல்லாத ஒரு பெரிய டப்பாவை  பயன்படுத்துவது நல்லது அல்லது உரம் தயாரிப்பதற்கு உங்கள் தோட்டத்தின் ஒரு மூலையைத் தேர்வுசெய்யுங்கள். 

நினைவில் கொள்ளுங்கள்: 

*உரம் தயாரிக்க நீங்கள் பச்சை பழங்கள், சமைத்த பழங்கள் மற்றும் பழ கூழ் ஆகியவற்றைப் பயன்படுத்தலாம். *இவற்றை சேர்க்கும் முன் பெரிய துண்டுகள் அல்லது கடினமான, குண்டான   தோல்கள் ஆகியவற்றை சிறிய துண்டுகளாக நறுக்கவும். 

*ஏனெனில் பெரிய துண்டுகள் மக்குவதற்கு அதிக நேரம் எடுக்கும். 

*மேலும் இது தாவர நோய்கள் மற்றும் களைகளை அழிக்க உதவும் உகந்த வெப்பநிலையை அடைவதற்கு உதவுகின்றன. 

*உரம் தயாரிப்பதற்கு பழங்களைப் பயன்படுத்தும் போது, ​​காய்ந்த இலைகள், புல், வைக்கோல், துண்டாக்கப்பட்ட காகிதம் மற்றும் பிற பொருட்கள் அடங்கிய கார்பன் நிறைந்த அடுக்குடன் அவற்றை மாற்றவும். 

*உங்கள் உரம் ஏற்கனவே மழை காரணமாக சொத சொதவென்று ஆகி இருந்தால், அதில் காய்ந்த  புல் மற்றும் இலைகள் போன்ற உலர்ந்த பொருட்களைச் சேர்க்கவும். 

உரம் தயாரிக்க நீங்கள் என்ன பயன்படுத்தலாம்? 

நீங்கள் தோல்கள், கூழ், சமைத்த பழம், தோல்கள், , திராட்சை தண்டுகள், ஜெல்லி, ஜாம் அல்லது சாறு மற்றும் பழங்களின் சாப்பிடாத பிற பகுதிகளை எடுத்துக் கொள்ளலாம். 

உரம் தயாரிப்பதற்கு பழங்களைப் பயன்படுத்துவதன் நன்மைகள்: 

பழக் கழிவுகள் உரம் தயாரிப்பதற்கான ஒரு சீரான பொருளாகக் கருதப்படுகின்றன. இதில்  உயர் நைட்ரஜன் பிரிவு  உள்ளது மற்றும் 35: 1 நைட்ரஜன்-கார்பன் விகிதத்தைக் கொண்டுள்ளன. இது சிறந்ததாக கருதப்படுகிறது. பழக் கழிவுகள் பொதுவாக சொத சொதவென்று  இருக்கும். இது மரத்தூள் மற்றும் இலைகளை உள்ளடக்கிய உரம் தயாரிக்க உதவுகிறது மற்றும் வேகமான உரம் தயாரிப்பதற்கு உகந்த அளவு ஈரப்பதத்தை உருவாக்குகிறது. எனவே, அடுத்த முறை நீங்கள் ஒரு பழத்தை சாப்பிடும்போது, ​​அதன் தேவையற்ற பகுதிகளை தூக்கி எறிய வேண்டாம். அதனை  சேமித்து உரமாக மாற்றவும்.

Views: - 0

0

0