உங்களுக்கு ஆஸ்துமா பிரச்சினை இருக்கா… நீங்க தினமும் செய்ய வேண்டிய பயிற்சி இது தான்!!!

Author: Hemalatha Ramkumar
13 May 2023, 6:16 pm
Quick Share

தற்காப்பு, ஆரோக்கியம், என்ஜாய்மென்ட், ரிலாக்சேஷன் என்ற அனைத்தையும் வழங்கக்கூடிய நீச்சல் பயிற்சியை தினமும் செய்வதால் ஏற்படக்கூடிய நன்மைகளைப் பற்றி இந்த பதிவில் பேசலாம். அன்றாடம் 30 நிமிடங்கள் நீங்கள் நீச்சல் பயிற்சியை செய்து வந்தால் உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் நிச்சயமாக ஒரு மாற்றத்தை காண்பீர்கள். இப்போது நீச்சலடிப்பதால் கிடைக்கும் குறிப்பிட்ட சில பலன்கள் பற்றி இப்போது பார்க்கலாம்.

நீச்சல் ஒரு ஏரோபிக் பயிற்சியாக கருதப்படுகிறது. இது ஒருவரின் தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தக்கூடிய நன்மையை வழங்குகிறது.
நீச்சல் பயிற்சியை வழக்கமாக செய்வது உங்களுக்கு சரியான நேரத்தில் தூக்கத்தை வரவழைத்து தூங்குவதற்கு உதவும்.

நீச்சல் பயிற்சி செய்வது குழந்தைகளின் கற்கும் திறனை மேம்படுத்துவதாக ஆஸ்திரேலியாவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வு கூறுகிறது. நீச்சல் கற்றுக் கொண்ட குழந்தைகள் விரைவாக கணக்கு பாடத்தை படிப்பதாக அந்த ஆய்வு முடிவுகள் தெரிவித்தன.

நீச்சல் பயிற்சி இதயம் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படுவதை தடுக்கிறது. நீங்கள் தொடர்ந்து நீச்சல் அடிக்கும் போது உங்கள் தசைகளுக்கு அதிக ஆக்சிஜன் தேவைப்படுகிறது. இதனை ஈடு கட்டுவதற்காக இதயம் வேகமாக செயல்பட தொடங்குகிறது. அதுமட்டுமல்லாமல் உங்கள் உடலுக்கு தேவையான ஆக்சிஜனை வழங்குவதற்கு நுரையீரலும் ஆக்டிவாக செயல்படுகிறது. ஆகவே உங்கள் இதயம் மற்றும் நுரையீரல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் தினமும் நீச்சல் பயிற்சியில் ஈடுபடலாம்.

எந்த ஒரு விஷயமும் வயதாகும் செயல்முறையை மாற்றி அமைக்க முடியாது என்றாலும், நீச்சல் பயிற்சி செய்வது வயதாகும்போது ஏற்படும் அறிகுறிகளை குறைக்க உதவும். அன்றாடம் நீச்சல் பயிற்சியில் ஈடுபடுவது ரத்த அழுத்தத்தை குறைத்து, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. மேலும் தசைகளின் வளர்ச்சியை ஊக்குவித்து, ஒட்டுமொத்த ஆக்சிஜன் மற்றும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. மேலும் மூட்டு வலியினால் அவதிப்படுபவர்கள் நீச்சல் பயிற்சியை தொடர்ந்து செய்துவர நல்ல பலன் கிடைக்கும்.

ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்கள் குளிர்ந்த அல்லது வறண்ட காற்றை சுவாசிப்பதில் சிக்கல்களை சந்திப்பார்கள். எனினும் நீச்சல் என்பது இந்த பிரச்சனையை ஓரளவு சமாளிக்க உதவும். நீச்சல் குளத்தில் இருக்கக்கூடிய ஈரப்பதம் நிறைந்த சூழலானது மூச்சு விடுவதில் இருக்கக்கூடிய சிரமத்தை குறைக்கும். ஆகவே ஆஸ்துமா நோயாளிகளுக்கு நீச்சல் ஒரு சிறந்த பயிற்சி.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

Views: - 285

0

0