கொண்டைக்கடலை, பச்சைப்பயறு, தட்டைப்பயறு, கொள்ளு, மொச்சை, சோயாமொச்சை, ராகி, கம்பு போன்ற பயிர் வகைகள் ஆரோக்கியமானவை என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் இந்த பயிர்களின் ஊட்டச்சத்துக்களை இன்னும் அதிகரிப்பதற்கு அவற்றை முளைகட்டி சாப்பிடலாம். ஆனால் முளைகட்டிய பயிர்களை பெரும்பாலானவர்கள் விரும்புவதில்லை. ஆகவே இதனை ருசியானதாக மாற்றுவதற்கு உங்களுக்கு உதவக்கூடிய சில தனித்துவமான ஐடியாக்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
சாலட்
முளைகட்டிய பயிர்களை ஒரு சில பச்சை காய்கறிகளோடு சேர்த்து சாப்பிடுவது சுவையாக இருப்பதோடு அதன் ஊட்டச்சத்து மதிப்பையும் அதிகரிக்கும். உதாரணமாக தக்காளி, வெங்காயம், கொத்தமல்லி ஆகியவற்றுடன் சீரகத்தூள், மிளகுத்தூள் போன்ற மசாலாக்கள் சேர்த்து சிறிதளவு எலுமிச்சை சாறு பிழிந்து முளைகட்டிய பயிர்களை சாப்பிடலாம். இது உடல் எடையை குறைப்பதற்கு மிகவும் ஆரோக்கியமான ஒரு காலை உணவாக அமைகிறது.
கிச்சடி
முளைகட்டிய பயிர்களை வைத்து ருசியான கிச்சடி செய்து சாப்பிடலாம். ரவை, சேமியா, அவல், ஜவ்வரிசி என்று எதைக் கொண்டு வேணாலும் நீங்கள் கிச்சடி செய்யலாம். அதில் இந்த முளைகட்டிய பயிர்களையும் சேர்த்து சில காய்கறிகளையும் சேர்த்து சமைத்து சாப்பிட்டால் சுவையும் ஆரோக்கியமும் கூடும்.
காதி
முளைகட்டிய பயிர்கள், தயிர் மற்றும் மசாலா பொருட்கள் ஆகியவற்றின் காம்பினேஷன் மிக அருமையாக இருக்கும். இதில் ஆன்டி-ஆக்சிடன்ட்கள், புரோட்டின் மற்றும் நார்ச்சத்து நிறைந்திருப்பதால் நம்முடைய ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் இது அற்புதமான உணவாக அமைகிறது. அதுமட்டுமல்லாமல் இது உடல் எடையை குறைப்பதற்கும் பெரிய பெரிதும் உதவுகிறது.
சப்ஜி
காய்கறிகளைக் கொண்டு செய்யப்படும் பல்வேறு வகையான தொட்டுகைகளில் நீங்கள் இந்த முளைகட்டிய பயிர்களையும் சேர்க்கலாம். நார்ச்சத்து, பொட்டாசியம், ஆன்டி-ஆக்சிடன்ட்கள் நிறைந்த இந்த ஊட்டச்சத்து களஞ்சியம் நம்முடைய நோய் எதிர்ப்பு அமைப்பை வலுவாக மாற்றுகிறது. அதிலும் குறிப்பாக இந்த மழைக்காலத்தில் ஏற்படும் தொற்றுகளில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வதற்கு இது ஒரு சிறந்த உணவாக அமைகிறது.
பீன்ஸ் ஃப்ரை
பீன்ஸ் மற்றும் முளைகட்டிய பயிர்கள் ஆகிய இரண்டிலுமே வைட்டமின் C சத்து அதிகமாக உள்ளது. இது ரத்த வெள்ளை அணுக்கள் உற்பத்தியை அதிகரித்து, ஆக்சிடேட்டிவ் வழுத்தத்தை குறைக்க உதவுகிறது.
குறைந்த கலோரி முளைகட்டிய பயிர்கள் புலாவ்
இந்த சுவை மிகுந்த காம்போ உங்களுடைய ஆற்றல் அளவை அதிகரித்து, பசியை கட்டுக்குள் வைத்திருக்கிறது. அதிக நார்ச்சத்து கொண்ட இந்த உணவு நம்முடைய செரிமானத்தை சீராக நடைபெற செய்கிறது. இதன் மூலமாக ஆரோக்கியமான முறையில் உங்கள் உடல் எடையை குறைக்கலாம்.
டோக்லா
இந்த முளைகட்டிய பயிர்களால் செய்யப்பட்ட டோக்லா ஒமேகா கொழுப்பு அமிலங்கள் அதிகம் கொண்டதாக இருக்கிறது. இதனால் இது கொலஸ்ட்ரால் அளவுகளை குறைத்து நம்முடைய இதய ஆரோக்கியத்திற்கு பலன் தருகிறது.
முளைகட்டிய பயிர்கள் சூப் முளைகட்டிய பயிர்களை கொண்டு செய்யப்படும் சூப் அதிக நார்ச்சத்து நிறைந்த ஒரு உணவாக கருதப்படுகிறது. இது நம்முடைய குடலை சுத்தம் செய்து மலச்சிக்கல் பிரச்சனையை தடுக்கிறது. மேலும் இது குடலில் புற்றுநோய் ஏற்படும் அபாயத்தையும் குறைக்கிறது.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.