ஆரோக்கியமான சருமத்திற்கு வாரம் இருமுறை இதனை மட்டும் யூஸ் பண்ணுங்க!!!

16 January 2021, 4:30 pm
Quick Share

ஒவ்வொருவரின் தோல் பராமரிப்பு வழக்கமும் வேறுபட்டது. இது பெரும்பாலும் தோல் வகை (உலர்ந்த, எண்ணெய், காம்பினேஷன்) மற்றும் அதில் இருக்கும் சில காரணிகளை மனதில் வைத்து வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அனைத்து வகையான சருமத்திலும் பிரமாதமாக வேலை செய்யும் ஒரு சில இயற்கை பொருட்கள் உள்ளன. அவற்றில் தாமரை எண்ணெய் ஒன்று. இது அனைத்து தோல் வகையினரும் பயன்படுத்தலாம்.   

தோல் பராமரிப்பு நன்மைகள்: 

* தாமரை மலர் என்பது வைட்டமின்கள் பி மற்றும் சி போன்ற பல வகையான ஊட்டச்சத்துக்களின் ஒரு களஞ்சியமாகவும். மேலும்  இதிலுள்ள தாமிரம் மற்றும் இரும்பு போன்ற தாதுக்கள்  அனைத்தும் சருமத்தை வெளிப்புறமாக குணப்படுத்த உதவும் என்றும் கூறப்படுகிறது. 

* குளிர்காலத்தில் ஈரப்பதம் குறைவதால் தோல் அதன் இயல்பான நன்மையை இழக்கத் தொடங்குகிறது. தாமரை மலரின் எண்ணெய் இறந்த சரும செல்களை நீக்கி, உங்கள் முகத்தை மீண்டும் கலகலப்பாக மாற்றும். 

* ஈரப்பதம் குறைவதால் சருமத்தையும் நீரிழக்கச் செய்யலாம். எல்லா நேரங்களிலும் சருமத்தை நீரேற்றமாக வைத்திருப்பது முக்கியம். தாமரை மலர் எண்ணெய் சருமத்தை நிலைநிறுத்தி ஈரப்பதத்தை மீட்டெடுக்கும். 

* இது தவிர, முகத்தின் வயதான செயல்முறையை மெதுவாக்குவதற்கும், முகம் மற்றும் கழுத்துப் பகுதியைச் சுற்றியுள்ள சுருக்கங்கள் மற்றும் கருப்பு புள்ளிகளை அகற்றுவதற்கும் எண்ணெய் உதவுகிறது..  

இதனை எப்படி பயன்படுத்துவது?

தாமரை எண்ணெயை பயன்படுத்துவது இயற்கையாகவே மற்ற  அத்தியாவசிய எண்ணெயை போல தான் உள்ளது. நீங்கள் விரும்பினால் இதிலிருந்து ஒரு ஃபேஸ் பேக்கையும் செய்யலாம். தாமரை எண்ணெயில் சிறிது பால் மற்றும் தேன் சேர்த்து முகத்தில் தாராளமாக தடவவும். ஆரோக்கியமான, முகப்பரு இல்லாத சருமத்திற்கு வாரத்திற்கு இரண்டு முறை இதனை  செய்யுங்கள்.

Views: - 0

0

0