என்ன தான் புரண்டு படுத்தாலும் தூக்கம் வர மாட்டேங்குதா… இத மட்டும் ஃபாலோ பண்ணி இனி ஹாயா தூங்குங்க!!!

Author: Hemalatha Ramkumar
24 May 2023, 5:38 pm
Quick Share

உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் தூக்கம் அவசியமான ஒன்றாகும். அனைத்து மனிதர்களுக்கும் வயதுக்கு ஏற்றாற்போல் தூக்கம் அவசியமாகும். சிறு குழந்தைகளுக்கு 12 முதல் 15 மணி நேரம் வரை தூக்கம் அவசியமாகும். மனிதர்களுக்கு சராசரியாக தினமும் 6 – 8 மணி நேர தூக்கம் அத்தியாவசியம். ஆனால் தூக்கத்தை கெடுப்பதில் செல்ஃபோன், வீடியோ கேம், சமூக ஊடகங்கள், டிவி உள்ளிட்டவை முக்கிய பங்கு வகிக்கின்றன.

உலகில் சுமார் 40% மக்கள் தூக்கமின்மை என்னும் இன்சோம்னியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு முக்கிய காரணம் மனஅழுத்தம் ஆகும். இளம் வயதில் தூக்கத்தை தவிர்ப்பதன் மூலம் ஏற்படும் பாதிப்புகளை அப்போதைக்கு உணர வாய்ப்பில்லை. ஆனால், வயதாகும்போது மிகபெரும் நோய்களை உண்டாக்கிவிடும். இளம் வயதில் தூக்கம் பாதிக்கப்படும் போது அந்த வயதுக்கு அவசியமான ஹார்மோன்கள் சுரப்பது பாதிக்கப்படுகிறது. இதனால் நமக்கு உடல் மற்றும் மனதளவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே அனைவருக்கும் நல்ல தூக்கம் என்பது மிகவும் அவசியமாகும்.

தூக்கமின்மை எனப்படும் இன்சோம்னியா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பக்கவிளைவுகள் அற்ற, இயற்கை முறையில் தூக்கம் வரச் செய்யும் ஒரு சில வழிமுறைகளை பற்றி பார்ப்போம்.

காலையில் எழுந்ததும் தினமும் அரை லிட்டர் அளவிற்கு நீர் அருந்துவது மிக அவசியமாகும். குறைந்தது அரை மணி நேரம் உடற்பயிற்சி அல்லது சூரிய ஒளியில் நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். சூரியக்கதிர்கள் உடலின் உள்ள செரட்டோனை செய்து, இரவில் உறங்குவதற்கு தேவையான மெலட்டோனின் ஹார்மோன் சுரப்பதை அதிகமாக்கிறது.

உறங்கும்போதும் பளிச்சிடும் விளக்குகள் இல்லாத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் தூக்கத்தை வரவழைக்கக் கூடிய ஹார்மோன்கள் இருட்டில் மட்டுமே சுரக்கும். எனவே படுக்கையறையில் டிவி, செல்ஃபோன் போன்ற பிரகாசமூட்டும் திரைகளை தவிர்க்க வேண்டும். படுக்கையறையில் மெல்லிய மந்தமான வெளிச்சம் தரக்கூடிய நீல நிற விளக்குகளை பொருத்தலாம். நீல நிறம் இயற்கையாகவே மனதை சாந்தப்படுத்தி தூங்கச் செய்ய வல்லது.

தூங்கச் செல்வதற்கு முன் ஒரு டம்ளர் பாலை மிதமான சூட்டில் குடிப்பது நல்லது. பொதுவாக பால் உணவுகளில் ட்ரிப் டோபன் உள்ளது. இது தூக்கத்தை ஊக்குவிக்கக்கூடியது. மேலும் வாழைப்பழம், தேன் மற்றும் முட்டை போன்ற உணவுகளை இரவில் உணவில் சேர்த்துக் கொள்வது நல்ல தூக்கத்தை வரவழைக்கும்.

தூங்குவதற்கு முன் அதிக கொழுப்புள்ள உணவு வகைகள், மது, சிகரெட், டீ மற்றும் காபி போன்றவற்றை குடிப்பதை தவிர்க்கவும்.

தூங்குவதற்கு முன் ஒரு ஸ்பூன் அளவு ஜாதிக்காய் பொடியை பாலில் கலந்து குடித்தால் நன்கு தூக்கம் வரும்.

அஸ்வகந்தா தைலத்தை வாரம் இருமுறை தலைக்கு தேய்த்து குளித்தால் மன அழுத்தம் நீங்கி புத்துணர்வு கிடைக்கும். இதனால் நன்கு தூக்கம் வரும்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

Views: - 358

0

0