பெண்களுக்கு வரப்பிரசாதமாக அமையும் வரகு அரிசியின் மருத்துவ குணங்கள்!!!

Author: Hemalatha Ramkumar
26 October 2021, 1:12 pm
Quick Share

நம் முன்னோர்கள் பயன்படுத்திய பாரம்பரிய அரிசி வகைகளில் வரகு அரிசி ஒன்று. இதில் மெக்னீசியம், நார்ச்சத்து, பாஸ்பரஸ் உள்ளிட்ட ஏகப்பட்ட ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இந்த அரிசியை சாப்பிடுவதால் ஏற்படும் மருத்துவ குணங்கள் குறித்து இப்போது பார்ப்போம்.

*வரகு அரிசியில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்து காரணமாக இது மலச்சிக்கல், வயிறு உப்புசம் உள்ளிட்ட பல செரிமான கோளாறுகளுக்கு தீர்வாக அமைகிறது.

*பொதுவாக சர்க்கரை நோயாளிகள் அரிசி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்று கூறப்படுகிறது. ஆனால் இந்த மகத்தான வரகு அரிசியை சர்க்கரை நோயாளிகள் சாப்பிட மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். ஏனெனில் இது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

*மூட்டு வலி, மூட்டு வீக்கம் உள்ளிட்ட எலும்பு சம்மந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் வரகு அரிசி ஒரு வரப்பிரசாதம்..

*அது மட்டும் இல்லாமல் கண் சம்பந்தமான நோய்களான கண்புரை, கண்களில் ஏற்படும் வீக்கம் போன்றவைகளுக்கும் நல்ல தீர்வாக அமைகிறது.

*உடலில் உள்ள உஷ்ணத்தை குறைத்து உடலை குளிர்ச்சியாக வைக்கிறது.

*மேலும் நரம்பு கோளாறுகள், கல்லீரல் செயல்திறன் மேம்படுத்தல், கல்லீரல் அழற்சி, சீரான நிணநீர் சுரப்பு போன்றவற்றை ஊக்குவிக்கிறது.

*வரகு அரிசி பெண்களுக்கு உகந்த அரிசியாகும். ஏனெனில் இது மாதவிடாய் கோளாறுகளை போக்கும் தன்மை கொண்டது.

Views: - 261

0

0