ஆளி விதை என்பது சரும பராமரிப்பு நன்மைகளின் ஒரு பொக்கிஷமாக கருதப்படுகிறது. ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்த இந்த ஆளி விதைகள் வீக்க எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஈரப்பதத்தை வழங்குகிறது. இதில் உள்ள ஆன்டி-ஆக்சிடன்ட் சருமத்தை சுற்றுச்சூழல் மாசுபடுத்திகளிடம் இருந்து பாதுகாத்து, அதே நேரத்தில் மெல்லிய கோடுகள் மற்றும் சுருக்கங்களையும் குறைக்கிறது. அடுத்தபடியாக ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் தோலுக்கு தேவையான ஊட்டச்சத்தை வழங்கி அதற்கு ஈரப்பதத்தை வழங்குகிறது. இதனால் சருமம் குண்டாகவும், பொலிவாகவும் தெரிகிறது.
மேலும் ஆளி விதைகளில் உள்ள வீக்கை எதிர்ப்பு பண்புகள் சருமத்தை ஆற்றி, முகப்பருக்களை போக்கி, சிவத்தல் மற்றும் எரிச்சலை நீக்குகிறது. பல்வேறு நன்மைகளின் காரணமாக ஆளி விதைகள் உங்களுடைய சரும பராமரிப்புக்கு அற்புதமான ஒரு தீர்வாக அமைகிறது. எனவே மினுமினுப்பான மற்றும் இளமையான சருமத்தை இயற்கையான வழியில் பெறுவதற்கு ஆளி விதைகளை எப்படி பயன்படுத்தலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
ஆளி விதை மற்றும் தேன்
இந்த போஷாக்கு நிறைந்த ஃபேஸ் மாஸ்கை செய்வதற்கு நமக்கு ஆளி விதை, தேன் மற்றும் தயிர் தேவைப்படும். முதலில் ஒரு கிண்ணத்தில் ஒரு டீஸ்பூன் அளவு அரைத்த ஆளி விதை எடுத்துக் கொள்ளலாம். அதனுடன் ஒரு டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் ஒரு டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்து நன்றாக கலக்கவும். இதனை உங்கள் முகத்தில் தடவி 25 நிமிடங்களுக்கு காத்திருந்து முகத்தை கழுவவும்.
ஆளி விதை மற்றும் ஓட்ஸ்
உங்களுடைய சருமத்திற்கு தேவையான போஷாக்கை வழங்குவதற்கு ஆளி விதை மற்றும் ஓட்ஸ் பயன்படுத்தி ஒரு ஃபேஸ் மாஸ்கை நீங்கள் தயார் செய்யலாம். இதற்கு 2 டேபிள் ஸ்பூன் ஓட்ஸுடன் ஒரு டேபிள் ஸ்பூன் பொடித்த ஆளி விதையை கலந்து முகத்தில் தடவி, 10 நிமிடங்களுக்கு பிறகு வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவ வேண்டும். இந்த மாஸ்க் உங்களுடைய சருமத்தை பொறுமையாக எக்ஸ்ஃபோலியேட் செய்து அதில் உள்ள இறந்த செல்களை அகற்றுவதன் மூலமாக சருமத்தை மென்மையாக மாற்றி பொலிவிழந்த சருமத்தை பளிச்சிட செய்யும்.
ஆளி விதை, ரோஸ் வாட்டர் மற்றும் கிளிசரின்
ஒரு டேபிள் ஸ்பூன் பொடித்த ஆளி விதையுடன் 2 டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டர் மற்றும் ஒரு டேபிள் ஸ்பூன் கிளிசரின் சேர்த்து பேஸ்டாக கலந்து கொள்ளுங்கள். இதனை முகத்தில் தடவி 25 நிமிடங்களுக்கு பிறகு முகத்தை கழுவவும். இந்த ஃபேஸ் மாஸ்க் சருமத்தை ஆழமாக மாய்சரைஸ் செய்து பளபளப்பாக மாற்றுகிறது.
ஆளி விதை, கிரீன் டீ மற்றும் தேன்
முதலில் ஒரு கிரீன் டீ பேக் எடுத்து அதனை சிறிதளவு சுடு தண்ணீரில் சேர்த்து கிரீன் டீ தயாரித்துக் கொள்ளவும். இந்த கிரீன் டீயை ஆற வைத்து அதிலிருந்து ஒரு டேபிள் ஸ்பூன் எடுத்து ஒரு டேபிள் ஸ்பூன் பொடித்த ஆளி விதை மற்றும் ஒரு டேபிள் ஸ்பூன் தேனோடு கலந்து முகத்தில் தடவி 15 நிமிடங்களுக்கு பிறகு வழக்கமான தண்ணீர் வைத்து முகத்தை கழுவவும். இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்த ஃபேஸ் மாஸ்க் சருமத்தை ஆற்றி மினுமினுப்பான தோலை தருகிறது.
இதையும் படிச்சு பாருங்க: இந்த இரண்டு பழங்களை ஒன்றாக சாப்பிடுவது உடலுக்கே ஆபத்தாம்!!!
ஆளி விதை, மஞ்சள் பொடி மற்றும் தேன்
இந்த ஃபேஸ் மாஸ்க் செய்வதற்கு ஒரு டேபிள் ஸ்பூன் பொடித்த ஆளி விதையுடன் 1/2 டேபிள் ஸ்பூன் மஞ்சள் பொடி மற்றும் ஒரு டேபிள் ஸ்பூன் தேனை கலக்கவும். இதனை முகத்தில் நன்றாக தடவி 15 நிமிடங்களுக்கு ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். பிறகு வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவவும். இந்த மாஸ்கில் வீக்க எதிர்ப்பு விளைவுகள் இருப்பதால் இது சருமத்தில் உள்ள முகப்பருக்களை போக்கி உங்களுக்கு இளமையான பொலிவை தருகிறது.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.