சீக்கிரம் எடைக்குறைய நீங்க குடிக்க வேண்டிய இயற்கை பானங்கள் இவை தான் | Weight Loss Drinks

17 June 2021, 8:59 am
weight loss drinks on an empty stomach
Quick Share

கொரோனா காலத்தில் விதிக்கப்பட்டுள்ன ஊரடங்கின் காரணாமாக பலரும் வீடுகளிலிருந்தே பணிகளை மேற்கொள்ள வேண்டி இருக்கிறது. வீடுகளில் ஒரே இடத்தில் உட்கார்ந்தே வேலைப் பார்ப்பதால் பலருக்கும் மிகப்பெரிய ஒரு பிரச்சினையாக இருப்பது உடல் பருமன் தான். உடல் எடை அதிகரிப்பால் பலரும் அவதிப்பட்டு வருகின்றனர். இது போன்ற சமயத்தில் வீடுகளிலிருந்தே எடைக் குறைக்க நினைப்போர், சில பானங்களை தினமும் குடிப்பதன் மூலம் உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள முடியும். அதென்னென்ன பானங்கள், என்னென்ன சத்துக்கள் உள்ளது என்பதை இந்த பதிவில் தெரிஞ்சுக்கலாம் வாங்க.

சீரகம்-எலுமிச்சை நீர்

வளர்சிதை மாற்றத்தின் வேகத்தை அதிகரிப்பதன் மூலமும் செரிமானத்தை மேம்படுத்துவதன் மூலமும் கலோரிகளை வேகமாக எரிக்க சீரகம் உதவியாக இருக்கும். சீரகத்தை இரவு முழுவதும் நன்கு ஊறவைத்துவிடுங்கள், பின்னர் அதை அடுப்பில் வைத்து நன்கு கொதிக்க விடுங்கள். நன்கு கொதித்த பின் அடுப்பில் இருந்து இறக்கி விதைகளை வடிகட்டி, வெதுவெதுப்பான தண்ணீரைக் குடிக்கவும். 

இதோடு எலுமிச்சை சாற்றையும் சேர்த்து, காலை வெறும் வயிற்றில் குடிக்கலாம். இப்படி குடிப்பதன் மூலம் நாள் முழுவதும் உடல் சுறுசுறுப்பாகவும் சோர்வில்லாமலும் இருக்கும். இதை தொடர்ந்து செய்வதன் மூலம் உடல் எடையைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள முடியும். மலச்சிக்கல் பிரச்சினையும் இருக்காது.

தேன் இலவங்கப்பட்டை நீர்

படுக்கைக்குச் செல்வதற்கு முன்பு நீங்கள் சிறிது தேன் சாப்பிட்டால் அதிக கலோரிகளை எரிக்க முடியும். ஏனென்னில் தேன் அத்தியாவசிய வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகளால் நிறைந்துள்ளது. தேனில் உள்ள அத்தியாவசிய ஹார்மோன்கள் பசியை அடக்கி எடை குறைக்க உதவுகின்றன. 

அதே போல இலவங்கப்பட்டையும், கொழுப்பை இழக்க உதவுகிறது. இலவங்கப்பட்டையின் ஆண்டிமைக்ரோபியல், ஆன்டிபராசிடிக் பண்புகள் காரணமாக ஆரோக்கியமான மசாலாப் பொருட்கள் நிறைந்த நம் அஞ்சறைப் பெட்டியில் இருக்கும் தவிர்க்க முடியாத ஒரு மூலிகையாகும். இது பொதுவான சளி, ஒவ்வாமை, கொழுப்பு, சிறுநீர்ப்பை தொற்று போன்றவற்றைத் தடுக்கிறது. 

தேன் மற்றும் இலவங்கபட்டை இரண்டுமே எடை இழப்புக்கு உதவியாக இருக்கும் என்பதால் இலவங்கபட்டை பொடியை நீரிலிட்டு நன்கு காய்ச்சி வடிகட்டி நன்கு ஆறிய பிறகு தேன் சேர்த்து தினமும் பருக உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும்.

வெந்தய நீர்

நாம் அன்றாடம் சமையலில் பயன்படுத்தும் வெந்தயத்தில் இரும்புச்சத்து, மெக்னீசியம், மாங்கனீசு, தாமிரம், வைட்டமின் B6, புரதம் மற்றும் உணவு நார்ச்சத்து போன்ற பல நன்மை பயக்கும் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளது. இதில் ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளும் உள்ளன. 

வெந்தயத்தில் சபோனின்கள் மற்றும் நார்ச்சத்து இருப்பதால் பெரும்பாலான ஆரோக்கிய நன்மைகள் இதில் உள்ளது. இதிலிருக்கும் அதிகப்படியான உயர்தர நார்ச்சத்து காரணமாக, வெந்தயம் செரிமானம் மற்றும் மலச்சிக்கல் பிரச்சினைகளைப் போக்க உதவுகிறது. சிறிது வெந்தயத்தை இரவு முழுவதும் ஊறவைத்துவிட வேண்டும். விதைகளை நீக்கிவிட்டு காலையில் அந்நீரை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இதனால் மலச்சிக்கல் பிரச்சினை இருக்காது. மேலும் எடை இழப்புக்கும் உதவியாக இருக்கும்.

Views: - 258

0

0