கொத்தவரங்காய் சாப்பிட்டால் மாரடைப்பில் இருந்து தப்பிக்கலாமா?!

26 May 2021, 9:06 pm
What are the health benefits of cluster beans
Quick Share

அவரைக்காய் கூட இப்போது பலருக்கும் தெரிகிறது, ஆனால் கொத்தவரங்காய் பற்றி பலருக்கும் தெரிவதே இல்லை. இதிலிருக்கும் பல அற்புதமான மருத்துவ குணங்கள் பற்றி தெரிந்தால் நாம் யாரும் இதை வேண்டாமென்று சொல்லவே மாட்டோம். அந்தளவுக்கு பல நன்மைகளை கொத்தவரங்காய் கொண்டுள்ளது. இந்த கொத்தவரங்காய் இப்போதும் பல கிராம பகுதிகளில் பயிர் செய்யப்படுகிறது. 3 முதல் 4 அடி உயரம் வரை வளரக்கூடியது. கொத்தவரங்காய் ஒரு குறிப்பிட்ட மண் வகையில் தான் வளரும் என்று சொல்லிவிட முடியாது. ஏனெனில் பல வகையான மண் வகைகளிலும் வளரக்கூடியது. கொத்தவரங்காய் மருத்துவ குணங்கள் நிறைந்த ஒரு காய்கறி ஆகும். அப்படி என்னென்ன மகத்துவம்  எல்லாம் இந்த கொத்தவரங்காயில் உள்ளது தெரிஞ்சுக்கலாம்  வாங்க.

கொத்தவரங்காய் அடிக்கடி சாப்பிட்டால் மாரடைப்பு ஏற்படுவதை தடுக்க முடியும் என்கின்றனர். ஏனெனில் இது இதயத்திற்கு மிகவும் நன்மை தரக்கூடியதாம்.

வாரத்திற்கு இரண்டு முறை, உங்கள் உணவில் கொத்தவரங்காய் சேர்த்துக்கொண்டால் உடலுக்கு தேவையான அளவு கால்சியம் சத்து கிடைக்கும் என்பதால் எலும்புகள் மற்றும் பற்கள் எல்லாம் வலுவடையும்.

இரத்த சோகை உள்ளவர்கள் இதை அடிக்கடி சாப்பிடலாம். ஏனெனில் இது அதிக இரத்த சுரப்பை ஏற்படுத்துகிறது. இரத்த சோகையை நீக்கி, உடலை மீண்டும் நல்ல நிலைக்கு கொண்டு வருகிறது.

தினமும் 10 கிராம் கொத்தவரங்காய் சாப்பிடுவதால் இரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும் என்றும் ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் நீரிழிவு நோயிலிருந்தும் தப்பித்துக்கொள்ள முடியும்.

கர்ப்பிணி பெண்கள் நல்ல சத்தான உணவுகளை சாப்பிடவேண்டியது மிகவும் அவசியம். கர்ப்பிணி பெண்கள் கொத்தவரங்காய் சாப்பிட்டால் கருவின் ஆரோக்கியம் நன்கு மேம்படும்.

கொத்தவரங்காயில் அதிகம் நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் சத்து இருப்பதால் இது இதயத்திற்கு நல்ல பலத்தை அளிக்கிறது.

ஆஸ்துமா பிரச்சினையைக் குணமாக்கும் ஆற்றல்  கொத்தவரங்காய்க்கு உண்டு. கொத்தவரங்காய் ஒரு வலி நிவாரணியாகவும் பயன்படுத்தப்படுகிறது.

உடலில் உள்ள நரம்புகளை வலுப்படுத்தும் சக்தி கொத்தவரங்காய்க்கு உண்டு. 

சரியாக ஜீரணமாகாவிட்டால் மலச்சிக்கல் பிரச்சினை ஏற்படலாம். அதற்கு கொத்தவரங்காய் சமைத்து சாப்பிட்டால், அதில் உள்ள நார்ச்சத்து செரிமான பிரச்சினைகளை சரிசெய்து மலச்சிக்கல் பிரச்சினையை நீக்கும்.

கொத்தவரங்காய் அடிக்கடி உட்கொள்வது முகத்தில் கரும்புள்ளிகள் மற்றும் பருக்கள் போன்ற சரும பிரச்சினைகளை எதிர்த்து போராட உதவும்.

Views: - 189

0

0