CTSS என்றால் என்ன? ஒருவர் COVID 19 தொற்றிலிருந்து குணமடைந்த பின்னும் மருத்துவமனையில் இருக்க வேண்டிய அவசியம் என்ன?

3 June 2021, 9:30 am
what is ctss and CORADS in COVID 19 patients
Quick Share

CTSS என்றால் என்ன?

CTSS என்றால் CT scan Severity Score அதாவது தீவிரத்தன்மை மதிப்பெண் என்று சொல்வார்கள். COVID 19 தொற்றால் நுரையீரல் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்துகொள்ள உதவும் ஒரு மதிப்பெண் முறையாகும். வலது நுரையீரலில் 3 மடல்கள் (Lobes) (அறை / பகிர்வு) மற்றும் இடது நுரையீரலில் 2 மடல்கள் உள்ளன. ஐந்து நுரையீரல் மடல்களும் ஒவ்வொன்றாக பார்வையிடப்பட்டு 1 முதல் 5 வரை மதிப்பெண் வழங்கப்படுகின்றது.

1 – எனில் 5% க்கும் குறைவான லோபர் ஈடுபாட்டைக் குறிக்கும்.

2- எனில் 5-25% லோபர் ஈடுபாடு.

3 – எனில் 26-50% லோபர் ஈடுபாடு.

4 – எனில் 51-75% லோபர் ஈடுபாடு.

5 – 75% க்கும்  அதிகமான லோபர் ஈடுபாடு.

பின்னர், இறுதி மதிப்பெண் தனிப்பட்ட லோபார் மதிப்பெண்களின் சுருக்கமாக இருக்கும், இந்த மதிப்பெண் 25 (மொத்த மதிப்பெண்) க்கு  கணக்கிடப்படும்; அதன் படி,

1-8 – லேசான தொற்று

9-15 – மிதமான தொற்று

> 15 – கடுமையான தொற்று

மொத்த மதிப்பெண் மேற்சொன்ன மதிப்பெண்ணை 4 மடங்கு பெருக்குவதன் மூலம் மொத்த நுரையீரல் ஈடுபாடு கணக்கிடப்படுகிறது.

(எ.கா.) CTSS 25 ஆக இருந்தால், அதாவது 100% (25 x 4) நுரையீரல் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.

CTSS 15 ஆக இருந்தால், அதாவது 60% (15 x 4) நுரையீரல் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.

CTSS 8 ஆக இருந்தால், 32% (8 x 4) நுரையீரல் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.

இருந்தாலும் இந்த கணக்கீட்டை விட நுரையீரல் ஈடுபாடு எப்போதும் கொஞ்சம் குறைவாகவே இருக்கும்.

CT scan குறித்து மேலும் உங்களுக்கு இருக்கும் கேள்விகளுக்கான விடைகளை அறிய கீழுள்ள இணைப்பைக் கிளிக் செய்யவும்: 

https://www.updatenews360.com/health/do-all-covid-19-patients-need-ct-scan-is-it-safe-030621/

CORADS ஸ்கோர் என்றால் என்ன?

COVID-19 அறிக்கையிடல் மற்றும் தரவு அமைப்பைக் (COVID-19 Reporting and Data System) குறிப்பது தான் CORADS என்பதாகும். இது வைரஸ் காரணமாக தொற்று மற்றும் ஈடுபாட்டின் அளவை தீர்மானிக்கிறது.

CORAD மதிப்பெண் 1-6 அடிப்படையில் செய்யப்படுகிறது, இதில் 1 ஒரு ‘negative COVID’ அல்லது சாதாரண நுரையீரல் செயல்பாட்டைக் குறிக்கிறது, மதிப்பெண்கள் 2 முதல் 4 என்பது வைரஸ் ஈடுபாட்டிற்கான சந்தேகத்தைக் குறிக்கிறது மற்றும் 5 மதிப்பெண் என்றால் கோவிட்-19  தொற்று இருக்கிறது என்று பொருள்.

நுரையீரலில் ground opacities எனும் சொல்லக்கூடிய தீவிர பாதிப்பு கண்டறியப்பட்டால் ஒரு நபருக்கு 6 மதிப்பெண் வழங்கப்படுகிறது மற்றும் இது COVID தீவிரத்தன்மையையும் அதிக ஆபத்து இருப்பதையும் குறிக்கிறது. ஒரு RTPCR positive நோயாளிகளுக்கும் CORADS 6 மதிப்பெண் வழங்கப்படுகிறது.

மீண்டும் எப்போது CT ஸ்கேன் எடுக்க வேண்டும்?

கொடுக்கப்பட்ட உகந்த சிகிச்சைக்கு நோயாளி பதிலளிக்கவில்லை என்றால் அல்லது மருத்துவ அறிகுறிகள் மோசமடைந்துவிட்டால் மட்டுமே மீண்டும் CT ஸ்கேன் எடுக்க வேண்டும். இல்லையெனில் CT ஸ்கேன் எடுப்பதை தவிர்த்துவிட வேண்டும்.

CT ஸ்கேன் தேவைப்படாதது எப்போது?

நோயாளியின் மருத்துவ அறிகுறிகள் மேம்படும் போது CT ஸ்கேன் சோதனை தேவையில்லை. நோயாளி சிகிச்சைக்கு சீராக பதிலளித்தால் அல்லது நோயாளி நிலையாக இருந்தால் மீண்டும் CT ஸ்கேன் செய்ய வேண்டிய அவசியமில்லை.

CT ஸ்கோர் மற்றும் ஆக்ஸிஜன் செறிவூட்டல் ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பு என்ன?

CTSS அதிகமாக இருந்தால் நுரையீரலின் பெரும்பகுதி தொற்றினால் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும் மற்றும் குறைந்த ஆக்ஸிஜன் செறிவு இருக்கும். 

ஆனால் சில சந்தர்ப்பங்களில் முன்பே இருக்கும் நோய் காரணமாக நுரையீரல் முன்பே சேதம் அடைந்திருந்தாலும் CTSS அதிகமாக இருக்கக்கூடும், அது போன்ற சூழல்களில் மருத்துவ அறிகுறிகள் மற்றும் ஆக்ஸிஜன் செறிவு நன்றாக இருக்கும். எனவே ஏற்கனவே நுரையீரல் சம்பந்தமான பிரச்சினை இருந்தால் CTSS அதிகமாக இருக்கிறது என்பதை கருத்தில் கொண்டு பதற்றமடைய தேவையில்லை. பயிற்சி பெற்ற மருத்துவரிடம் சென்று முறையான மருத்துவ ஆலோசனைப் பெறுவது நல்லது.

ஒரு நோயாளி முழுமையாக குணமடைந்தாலும், அதிக CT மதிப்பெண் பெற்றிருந்தால், அதற்கான காரணம் என்ன?

கடுமையான தொற்று காரணமாக நுரையீரல் சேதமடைந்தால், அது குணமடைய சில வாரங்கள் முதல் சில மாதங்கள் வரை ஆகலாம். அதைப் பற்றி கவலைப்பட தேவையில்லை. பயிற்சி பெற்ற மருத்துவரிடம் முறையான ஆலோசனைப் பெற்றுக்கொண்டால்  CTSS பற்றி பீதியடைய தேவையில்லை. புரோன் பொசிஷன் பிசியோதெரபி மற்றும் நுரையீரல் ஸ்பைரோமெட்ரி பயிற்சிகள் CTSS ஐ சீரமைக்க உதவும்.

CTSS குறைவாக இருந்தாலும் நோயாளி தொடர்ந்து மருத்துவமனையில்  இருக்கவேண்டியதற்கான தேவை உள்ளதா?

மருத்துவமனையில் அனுமதிப்பது நோயாளிகளின் மருத்துவ அறிகுறிகளைப் பொறுத்தது மற்றும் CTSS பொறுத்து அல்ல. மருத்துவ அறிகுறிகள் கடுமையானதாகவும் மற்றும் நோயாளி சாதாரண குறைவான CTSS இருந்தாலும் சாதாரண ஆக்ஸிஜன் செறிவூட்டலை (> 94%) கொண்டிருக்க முடியாவிட்டால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கபட வேண்டும். இதேபோல் CTSS அதிகமாக இருந்தாலும், ஆக்சிஜன் செறிவு சீராக இருந்தால், மருத்துவமனையில் அனுமதிக்கபட வேண்டிய அவசியமில்லை.

நீரிழிவு நோய், தைராய்டு, உயர் இரத்த அழுத்தம், COPD, ஆஸ்துமா, இதய நோய் போன்ற நோயாளிகளுக்கு குறைந்த CTSS இருந்தாலும் கூட மருத்துவரின் ஆலோசனையின் அடிப்படையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டியிருக்கலாம்.

CT ஸ்கேன் செய்வதால் என்ன பிரச்சினை ஏற்படக்கூடும்?

அதிகமான கதிர்வீச்சு வெளிப்பாடு புற்றுநோய் ஏற்பட வழிவகுக்க வாய்ப்புண்டு.

கர்ப்பிணி பெண்களுக்கு CT ஸ்கேன் செய்யலாமா?

கர்ப்பிணி பெண்களுக்கு கண்டிப்பாக CT ஸ்கேன் செய்யகூடாது. CT Scan செய்யும் போது அந்த கதிர்வீச்சு கருப்பையில் குழந்தைக்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால் CT Scan செய்தல் கூடாது.  

CT scan குறித்து மேலும் உங்களுக்கு இருக்கும் கேள்விகளுக்கான விடைகளை அறிய கீழுள்ள இணைப்பைக் கிளிக் செய்யவும்:  https://www.updatenews360.com/health/do-all-covid-19-patients-need-ct-scan-is-it-safe-030621/

Views: - 242

0

0