அதிகமான சுயஇன்ப பழக்கத்திற்கு அடிமையானால் அதிலிருந்து வெளியே வருவது எப்படி? சில சிம்பிள் டிப்ஸ் உங்களுக்காக இதோ

Author: Dhivagar
28 July 2021, 5:51 pm
why do people masturbate and how to stop it
Quick Share

மக்கள் ஏன் சுயஇன்பம் செய்கிறார்கள்?

சுயஇன்பம் செய்வது மக்களுக்கு இருக்கும் பாலியல் வேட்கையைத் தீர்த்துக்கொள்ள உதவியாக இருக்கும் முற்றிலும் இயல்பான செயல்முறையாகும். பாலியல் வேட்கையைத் தீர்த்துக்கொள்வது மட்டுமல்லாமல் மக்கள் அதைச் செய்வதற்கு நிறைய காரணங்களும் உண்டு. பெரும்பாலான தனிநபர்கள் இதை ஏன் செய்கிறார்கள் என்றால், 

  • மன அழுத்தம் குறையும்
  • பாலியல் உறவில் திருப்தியின்மை 
  • தாம்பத்திய உறவு சிக்கல்கள்
  • ஆபாச படங்கள் பார்த்தல்

மேற்சொன்ன காரணங்களாலும், மேலும் பல காரணங்களாலும் மக்கள் சுயஇன்பம் காணுகின்றனர்.

சுயஇன்பத்தை நிறுத்துவது எப்படி?

சுயஇன்பம் காணுதல் அளவோடு இருக்கும்போது நல்லது தான். ஆனால் அதுவே, கையாள முடியாத அளவுக்கு போதையாகிவிட்டால், உங்களுக்கு நிறைய சிக்கல்கள் ஏற்படும். எனவே கட்டுப்படுத்த உதவும் எளிய டிப்ஸ் உங்களுக்காக இங்கே பட்டியலிட்டுள்ளோம்.

1. ஆபாச படம் பார்ப்பதைத் தவிர்க்கவும்

ஆபாச படங்கள் என்பது சுயஇன்பம் செய்யும் நபர்களுக்கு ஒரு தவிர்க்கமுடியாத மன உந்துதலை ஏற்படுத்தும். இது ஒரு நபரை மனரீதியாக பாதிக்கிறது, இது ஒட்டுமொத்த சமுதாயத்தில் அவர்கள் நினைக்கும் மற்றும் செயல்படும் விதத்தையும் கூட மாற்றக்கூடியது. ஆபாச படங்கள், வீடியோக்கள் மற்றும் அந்த சிந்தனைக்கு உங்களை இழுத்துச் செல்லக்கூடிய விஷயங்களை, வலைத்தளங்களை முழுமையாக தவிர்த்துவிடுங்கள்.

2. உங்களுக்கு பிடித்த விஷயத்தில் கவனம் செலுத்துங்கள்

உங்கள் மனதில் சுயஇன்பம் காணுவதற்கான வேட்கைத் தோன்றும்போது மனதைத் திசை திருப்புவதும் வேறு ஏதாவது உங்களுக்குப் பிடித்த செயல்பாடுகளில் ஈடுபடுவதும் சுயஇன்பம் பழக்கத்தில் இருந்து விடுவிக்கும் வழியாகும். புதிய பொழுதுபோக்கைத் தேர்ந்தெடுப்பதைக் கருத்தில் கொள்ளுங்கள், இது சுயஇன்பம் செய்ய தோன்றும் எண்ணங்களை மாற்றும். புத்தகம் படித்தல், படம் பார்ப்பது போன்ற உங்கள் தனிப்பட்ட குறிக்கோள்களில் பணியாற்றத் தொடங்கி அவற்றை குறிப்பிட்ட காலவறைக்குள் முடிக்க வேண்டும் என்று முயற்சி செய்யுங்கள். உங்கள் மனம் அதை நோக்கி செல்லும்போது, உங்கள் நேரம் அதிலேயே அதிகம் செலவிடப்படும்போது உங்களுக்கு சுயஇன்பம் காணுதலுக்கான எண்ணமே தோன்றாது. 

3. ஒரு மருத்துவரை அணுகவும்

உங்களுக்கு மன அழுத்தம் கொடுக்கும் பிரச்சினை ஏதேனும் இருந்தால் அதை உங்களுக்கு நெருங்கியவரிடம் மனம் விட்டு பேச வேண்டும். நீங்கள் தனியாக போராட முடியாது என்பதையும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். யாரிடமும் உங்களுக்கு பகிர்ந்துக்கொள்ள விருப்பம் இல்லை என்றால் ஒரு சுகாதார நிபுணரைச் சந்தித்து உங்களுக்கு உள்ள சிக்கலைப் கலந்தாலோசித்தால் உங்களுக்கான தீர்வை அவர் சொல்வார். 

4. மக்களுடன் அதிகம் பேசி பழகுங்கள்

சிலர் தனிமையாக இருப்பதால் அவர்களுக்கு சுயஇன்பம் காணுதல் ஒரு பழக்கமாக மாறியிருக்கக்கூடும். இதனால் சுயஇன்ப பழக்கத்திற்கு நீங்கள் அடிமையாவது போல பல விஷயங்களுக்கு அடிமையாகக்கூடும். எனவே நல்ல மக்களுடன் நேரடியாக பேசி பழகுவது, உங்களுக்கு புதிய எண்ணங்களைக் கொடுக்கும். இதனால் உங்களுக்கு தவறான சிந்தனைகள் வராமல் தடுக்க முடியும். எனவே குடும்பம், நண்பர்களுடன் பழகுவதை ஒரு பழக்கமாக மாற்றிக்கொள்ளுங்கள் அல்லது உங்கள் உடலுக்கு வேலைக் கொடுக்க ஜிம்மிற்கு செல்லுங்கள்.

5. வழக்கமான உடற்பயிற்சி

வழக்கமான உடற்பயிற்சி உங்களை மன ரீதியாக வலுவாக வைத்திருக்கும். ஓட்டம், நீச்சல், நடைபயிற்சி மற்றும் ஜாகிங் போன்ற எளிய பயிற்சிகள் நேர்மறையான எண்ணங்களை அதிகரிக்கும் மற்றும் உங்கள் கவனத்தை நல்ல விஷயங்களில் வைத்திருக்கும். இது மன அழுத்தத்தை போக்கும் மற்றும் உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும். ஒவ்வொரு நாளும் 30 நிமிடங்கள் எளிய பயிற்சி செய்வது உங்களுக்கு மிகவும் நன்மைப் பயக்கும்.

அதிகப்படியான சுயஇன்பத்தின் பின்னால் உள்ள உளவியல்

அதிகப்படியான சுயஇன்பம் காணுதல் என்பது நடத்தை சீர்கேடுகளை ஏற்படுத்தக்கூடிய ஒரு மனநிலையின் அறிகுறியாகும். சுயஇன்பத்திற்குப் பிறகு ஏற்படும் ஒரு குற்ற உணர்வு சுயஇன்ப பழக்கத்திற்கு நீங்கள் அடிமையாகிறீர்கள் என்பதை காட்டும் ஒரு அறிகுறியாகும். இதனால் நீங்கள் மது அருந்தும் பழக்கத்திற்கும் அடிமையாகக்கூடும். எனவே, கட்டாயம் சுய இன்பம் காண வேண்டும் என்ற வேட்கை தோன்றினால் அதை தவிர்க்க மேற்சொன்ன வழிமுறைகளை முயற்சி செய்யவும்.

Views: - 435

0

0