உலக செஞ்சிலுவை தினம் இன்று! இந்நாளின் வரலாறு மற்றும் முக்கியத்துவம் என்ன?

8 May 2021, 11:51 am
World Red Cross Day 2021: History, Theme And Significance
Quick Share

சர்வதேச செஞ்சிலுவை தினம் மற்றும் செம்பிறை இயக்கத்தின் கொள்கைகளை நினைவுகூரும் வகையில் உலக செஞ்சிலுவை தினம்  கொண்டாடப்படுகிறது. உலக செஞ்சிலுவை தினத்தன்று, தேவைப்படும் மக்களுக்கு உதவுவதற்காக மனிதாபிமான நிறுவனங்களுக்கு அவர்கள் செய்த பெரும் பங்களிப்புக்காக மக்கள் அஞ்சலி செலுத்துகின்றனர். 

2021 உலக செஞ்சிலுவை தினம் மற்றும் செம்பிறை நாள் ‘நிற்காதது’ (Unstoppable) என்ற கருத்துடன் நினைவுகூரப்படுகிறது. முதல் செஞ்சிலுவை தினம் மே 8, 1948 அன்று கொண்டாடப்பட்டது. மேலும் 1984 இல் உலக செஞ்சிலுவை தினம் மற்றும் செம்பிறை தினமாகவும் இந்நாள் நினைவுக்கூரப்படுகிறது. 

உலக செஞ்சிலுவை சங்க தினத்தைப் பற்றி நாம் தெரிந்துக்கொள்ள வேண்டிய முக்கியமான பத்து விஷயங்கள் இங்கே.

உலக செஞ்சிலுவை தினம்: வரலாறு மற்றும் முக்கியத்துவம்

  • செஞ்சிலுவை தினம் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் (International Committee of the Red Cross – ICRC) நிறுவனர் ஹென்ரி டுனண்ட் பிறந்தநான்று நினைக்கூரப்படுகிறது. முதல் அமைதிக்கான நோபல் பரிசையும் ஹென்ரி டுனன்ட் தான் பெற்றார்.
  • சர்வதேச செஞ்சிலுவை தினம் மற்றும் செம்பிறை சங்கங்களின் கூட்டமைப்பு (IFRC) 1919 ஆம் ஆண்டில் பாரிஸில் முதலாம் உலகப் போருக்குப் பின்னர் நிறுவப்பட்டது
  • முதலில் துவங்கப்படும்போது பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய ஐந்து நிறுவனர்கள் மட்டுமே இருந்தன. ஆண்டுகள் கடந்த பிறகு, இந்த எண்ணிக்கை வளர்ந்தது, இப்போது 190 அங்கீகரிக்கப்பட்ட தேசிய சங்கங்கள் இதில் உறுப்பினர்களாக உள்ளன. அதாவது கிட்டத்தட்ட ஒவ்வொரு நாட்டிலும் இந்த சங்கம் உள்ளது.
  • உலக செஞ்சிலுவை தினம் மற்றும் செம்பிறை நாள் சர்வதேச செஞ்சிலுவை தினம் மற்றும் செம்பிறை இயக்கத்தின் கொள்கைகளை கொண்டாடுகிறது.
  • இந்த தினத்தை கொண்டாடும் முயற்சி, முதலாம் உலகப் போருக்குப் பிறகு அறிமுகப்படுத்தப்பட்டது. இது செஞ்சிலுவை தினம் என்று அழைக்கப்பட்டது.
  • 1934 இல் டோக்கியோவில் நடைபெற்ற 15 வது சர்வதேச மாநாட்டில் ட்ரூஸ் கொள்கைகள் அங்கீகரிக்கப்பட்டன.
  • செஞ்சிலுவை சங்கம் மற்றும் செம்பிறை இயக்கத்தின் உலகளாவிய அமைப்பு இப்போது சர்வதேச செஞ்சிலுவை சங்கம் மற்றும் செம்பிறை சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் தேசிய செஞ்சிலுவை சங்கம் மற்றும் செம்பிறை சங்கங்களை உள்ளடக்கியது.

Views: - 162

0

0