மஞ்சள் பூசணி உங்க வீட்டில் இருக்கா? ஈசியாக அழகாக சிம்பிள் டிப்ஸ்

14 June 2021, 3:24 pm
yellow pumpkin beauty tips
Quick Share

பூசணிக்காய் என்று சொன்னாலே நமக்கு முதலில் நினைவிற்கு வருவது பூசணி சாம்பார் தான். இதுவரை பூசணியை சமைத்து உண்டு வந்து இருப்பீர்கள். அது ஒரு ஆரோக்கியமான காய் என்பதையும் தாண்டி பல அழகு சார்ந்த நன்மைகளை நமக்கு அளிக்கிறது. இந்த காயானது நமது சருமத்தை மென்மையாக்க உதவி செய்கிறது. கொலாஜன் உற்பத்தியை ஊக்குவித்து வயதான தோற்றத்தை தடுக்கிறது.

எதாவது ஒரு விசேஷம் வரும் சமயம் பூசணிக்காயை செதுக்கி பொருட்கள் செய்வது தற்போது வழக்கமாக உள்ளது. மஞ்சள் பூசணிக்காயை முக்கியமாக குளிர் காலத்தில் பயன்படுத்தி வர பல நன்மைகள் கிட்டும். மஞ்சள் பூசணிக்காயில் உள்ள ஆல்ஃபா ஹைட்ராக்ஸி ஆசிட் முகத்தில் உள்ள இறந்த செல்களை நீக்க உதவி செய்கிறது. இதன் மூலம் முகத்திற்கு பொலிவை தருகிறது.

மஞ்சள் பூசணிக்காயை அனைத்து வகை சருமத்தாரும் பயன்படுத்தலாம். முக்கியமாக சென்சிடிவ் மற்றும் சுற்று சூழலால் பாதிக்கப்பட்ட சருமங்களுக்கு மஞ்சள் பூசணி சிறந்தது. இப்போது இந்த காய்கறியின் அழகு சார்ந்த பயன்கள் குறித்து காண்போம்.

1.வறண்ட சருமம்:

ஆல்ஃபா ஹைட்ராக்ஸி ஆசிட் நிறைந்த மஞ்சள் பூசணிக்காயை வறண்ட சருமத்தை பாதுகாக்க பயன்படுத்தலாம். அதற்கு இரண்டு தேக்கரண்டி பூசணிக்காயுடன் 1/4 தேக்கரண்டி பால் மற்றும் 1/2 தேக்கரண்டி தேன் கலந்து பேஷியல் பேக்காக முகத்தில் பூசி வர வேண்டும்.

2. கரும்புள்ளிகள்:

வைட்டமின் A நிறைந்த மஞ்சள் பூசணிக்காய் கரும்புள்ளிகள் மற்றும் பருக்களில் இருந்து விடுதலை தந்து முகத்தை நிறத்தை மேம்படுத்துகிறது. கரும்புள்ளிகளை குறைக்க ஒரு தேக்கரண்டி மஞ்சள் பூசணிக்காயோடு ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து தடவி கொள்ள வேண்டும்.

3. சுருக்கங்கள்:

மஞ்சள் பூசணிக்காயில் ஆன்டிஆக்ஸிடன்டுகள் மற்றும் வைட்டமின் C அதிகம் உள்ளதால் முகத்தில் காணப்படும் சுருக்கங்களை போக்கி அழகாக மாற்றுகிறது.

4.எண்ணெய் சருமம்:

எண்ணெய் பிசுக்கு கொண்ட சருமம் ஆரோக்கியமாகவும் சுத்தமாகவும் இருக்க மஞ்சள் பூசணியில் உள்ள சின்க் மற்றும் செலினியம் உதவுகிறது. அது மட்டும் இல்லாமல் மஞ்சள் பூசணியில் வைட்டமின் E நிறைந்துள்ளதால் சுற்று சூழல் மாசில் இருந்து முகத்தை பாதுகாக்கிறது.

5.வயதான தோற்றம்:

பீட்டா கரோட்டின் கொண்ட மஞ்சள் பூசணி வயதான தோற்றம் ஏற்படாமல் தடுக்கிறது. UV கதிர்களால் முகத்திற்கு ஏற்பட்ட பாதிப்பை சரி செய்கிறது. 

6.பருக்கள்:

வைட்டமின் B, நியேசின், ரிபோஃபிளேவின், B6, ஃபோலேட் நிறைந்த மஞ்சள் பூசணிக்காய் இரத்த ஓட்டத்தை அதிகரித்து பருக்களை விழச் செய்கிறது. 

7. தலைமுடி வளர்ச்சி:

நல்ல ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு மஞ்சள் பூசணியை பயன்படுத்துங்கள். பொட்டாசியம் மற்றும் சின்க் கொண்ட மஞ்சள் பூசணி முடி உதிர்வதை தடுத்து முடி வளர்ச்சியை தூண்டுகிறது. 

Views: - 186

0

0