அபரிதமான நீர்ச்சத்து கொண்ட மஞ்சள் நிற தர்பூசணி…நீங்களும் வாங்கி சாப்பிட்டு பாருங்க…!!!

4 March 2021, 6:19 pm
Quick Share

மார்ச் மாதம் தொடங்கியதில் இருந்தே பல மாவட்டங்களில் வெயில் வாட்டி வதைக்க ஆரம்பித்து விட்டது. பகல் நேரத்தில் இந்த வெப்பத்தில் இருந்து நம்மை காத்துக்கொள்ள மோர், பழச்சாறு, தர்பூசணி, நுங்கு, பதநீர் ஆகியவற்றை தேடி நாம் செல்கிறோம். அதிலும் குறைந்த விலையில் கிடைக்கும் தர்பூசணி பழத்திற்கு அதிக மவுசு. 

நீர்ச்சத்து அதிகமாக உள்ள பழங்களில் தர்பூசணியும் ஒன்று. இதனை கோடைகாலத்தில் சாப்பிடும் போது நம் உடலில் உள்ள உஷ்ணம் குறைந்து தனி புத்துணர்ச்சி கிடைக்கும். நாம் எப்போதும் வாங்கும் தர்பூசணி உட்புறத்தில் சிவப்பு நிறத்திலும் வெளியே பச்சை நிறத்திலுமே இருக்கும். 

இந்த நிலையில் தற்போது கர்நாடக மாநிலத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் உயர்ந்த ரக மஞ்சள் தர்பூசணியை விளைவித்து இருக்கிறார். இது குளிர்ந்த பகுதிகளில் மட்டுமே விளைவிக்க முடியும் என்று அவர் கூறுகிறார். இந்த மஞ்சள் நிற தர்பூசணி தான் தற்போதைய டிரெண்ட். 

கர்நாடகாவில் உள்ள கலாபுராகி என்ற இடத்தை சேர்ந்த கோரல்லி கிராமத்தில் வசிக்கும்  பசவராஜ் பாட்டீல் என்ற விவசாயி தனது சொந்த வயலில் ‘மஞ்சள் நிற தர்பூசணி’ யை விளைவித்து புது சாதனை படைத்துள்ளார். இந்த உயர் இரக தர்பூசணியை இள வயது விவசாயி தாமாகவே உருவாக்கியது என ஒரு செய்தித்தாளில் கூறியுள்ளார்.

இந்த தர்பூசணி வெளியிலிருந்து பார்க்க பச்சை நிறமாகவும், உட்புறத்தில் பிரகாசமான மஞ்சள் நிறத்திலும் இருக்கும். இது சாதாரண தர்பூசணியை விட இனிமையாக இருக்குமாம். மேலும் இது எப்போதும் இருக்கும் சிவப்பு தர்பூசணியை காட்டிலும் அதிக அளவில் நீர்ச்சத்தை கொண்டுள்ளது. இந்த தர்பூசணி வாங்கும் வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக வாங்கி சாப்பிட்டு பாருங்கள்.

Views: - 12

0

0