அதிக உடல் எடையால் மூட்டு வீக்கம் ஏற்பட்டுள்ளதா? இந்த 3 சுவாச பயிற்சிகளை செய்யுங்க | Yoga Day Weight loss Tips

21 June 2021, 8:42 am
yoga to reduce belly fat and to cure arthritis
Quick Share

இன்று உலகளாவிய யோகா தினம். இந்நாளில் சில முக்கியமா சுவாச பயிற்சிகளையும் அதனால் நமக்கு கிடைக்கும் நன்மைகளை பற்றியும் தெரிந்துக்கொள்ளலாம்.

சில வருடங்களுக்கு முன்னதாக எல்லாம் ஒரு 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தான் மூட்டு வீக்கம், மூட்டு வலி பிரச்சினை எல்லாம் ஏற்படும். ஆனால் இன்றைய காலகட்டத்தில், ​​அனைத்து வயதினருக்கும், குறிப்பாக இளைஞர்களுக்கும் கூட இந்த மூட்டு வீக்கம் மற்றும் மூட்டு வலி பிரச்சினை இருக்க செய்கிறது.

தற்போதைய நவீன வாழ்க்கை முறையில் எல்லாமே உட்கார்ந்த இடத்திலேயே நடக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். இதற்கான நம்மில் பெரும்பாலோனோருக்கு உடல் செயல்பாடு என்பது வெகுவாக குறைந்துவிட்டது. உணவு பழக்கங்களில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. மக்கள் ஃபாஸ்ட் ஃபுட் எனப்படும் ஆரோக்கியமற்ற உணவையே சாப்பிட விரும்புகிறார்கள். இதனால் உடலில் கெட்ட கொழுப்புகள் சேர்ந்து விடுகிறது.

yoga to reduce belly fat and to cure arthritis

இதனால், உடல் எடை கூடிவிடுகிறது மற்றும் கீல்வாதம் போன்ற மூட்டு சம்பந்தமான பல பிரச்சினைகள் ஏற்படுகிறது. ஒரு குறிப்பிட்ட அளவிலான எடையை மட்டுமே நம் கால்கள் தாங்கக்கூடிய வகையில் நம் உடல் அமைப்பு இருக்கும். உடல் எடை கூடிக்கொண்டே போகும் வேளைகளில் இது போன்ற பல பிரச்சினைகள் ஏற்படக்கூடும். இதற்கென உடனே மாத்திரை மருந்து என எதையேனும் நாம் தேடிச் செல்ல வேண்டி இருக்கிறது.

ஆனால், மாத்திரை மருந்துகளுக்கு பதிலாக அதிக எடையுள்ளவர்கள் பல நிலைகளில் சில யோகாசனங்களை மேற்கொண்டால், அவர்கள் முழங்கால்களின் வலி குறைந்து எடையும் குறையக்கூடும். அப்படி கை கால்களை மடக்கி பல நிலைகளில் யோகா செய்ய முடியாதவர்கள் 3 மாதங்களுக்கு மூன்று வகையான பிராணயாமா சுவாச பயிற்சிகளை செய்தாலும் நல்ல பலன்களைப் பெற முடியும்.

கீல்வாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் 

1. கபல்பதி (Kapalbhati)

2. நாடி சோதனம் (Nadi Shodhana)

3. அனுலம் விலம் (Anulam Vilom)

ஆகிய மூச்சு பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம் நல்ல பலனைப் பெற முடியும்.

சரி, இப்போது இந்த மூச்சு பயிற்சிகளை எப்படி முறையாக செய்ய வேண்டும் என்பதை தெரிந்துக்கொள்ளலாம்.

கபல்பதி

yoga to reduce belly fat and to cure arthritis
 • முதலில் தியான நிலை உட்கார்ந்து கொள்ளுங்கள்.
 • கண்களை மூடிக்கொண்டு முழு உடலையும் தளர்வாக சௌகரியமாக வைத்துக்கொள்ளுங்கள்.
 • மூக்கின் இரண்டு நாசி வழியாகவும் சுவாசத்தை நன்கு ஆழமாக உள்ளிழுத்து மார்பு விரிவடையும்படி சுவாசியுங்கள்.
 • வயிற்று தசைகளில் அழுத்தம் படும்படி மிக மெதுவாக மூச்சினை வெளி விடுங்கள்.
 • சீராக செய்தாலே போதும். உடலை சிரமப்படுத்த வேண்டாம்.
 • இதை பல முறை செய்ய விடும். இதே பயிற்சியை தினமும் செய்ய வேண்டும்.

நாடி சோதனம்

yoga to reduce belly fat and to cure arthritis

நாடி சாதனம் எனப்படும் சுவாசப் பயிற்சியின் போது மிகவும் கவனத்துடன் சுவாசிக்க வேண்டும். இது நம் உடல் முழுவதும் ஆக்ஸிஜன் விநியோகத்தை அதிகரிக்கும் ஆற்றல் கொண்ட ஒரு யோகா பயிற்சி. கூடுதலாக, நம் உடலில் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க செய்து நம் உடல் எடை வெகுவாக குறைக்க செய்யும்.

நாடி சோதனம் யோகாசனம் செய்வது எப்படி?

 • சௌகரியமான தியான நிலையில் அமர்ந்து கொள்ள வேண்டும்.
 • வலது கையின் கட்டைவிரலை வலது நாசிக்கு மேல் வைத்து துவாரத்தை மூடிக்கொள்ள வேண்டும். 
 • இப்போது இடது துவாரத்தின் வழியாக ஆழ்ந்து சுவாசிக்க வேண்டும்.
 • அடுத்து மோதிர விரலை இடது துவாரத்தின் மேல் வைக்க வேண்டும். இப்போது வலது துவாரத்தின் வழியே சுவாசத்தை வெளியே விட வேண்டும்.
 • இந்த பயிற்சி பல முறை செய்ய வேண்டும். இதை தினமும் காலையில் தொடர்ந்து செய்ய வேண்டும்.

அனுலம் விலம்

அனுலாம் விலம் என்பது நாடி பிராணயாமா வகையின் கீழ் வரும் ஒரு சுவாசப் பயிற்சி. இது நமது சுவாசத்தை அதிகரிக்கிறது மற்றும் உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.

அனுலம் விலம் பயிற்சி செய்வது எப்படி?

 • ஒரு சௌகரியமான இடத்தில் அமர்ந்து கொள்ளுங்கள்
 • முதலில், கட்டைவிரலை வலது நாசியிலும், மோதிர விரலை இடது நாசியிலும் வைத்துக்கொள்ளுங்கள்.
 • கட்டைவிரலால் வலது நாசியை மூடி, அதே நேரத்தில் இடது நாசி வழியாக சுவாசத்தை மெதுவாக உள்ளிழுக்கவும்.
 • உங்கள் முழு கவனமும் சுவாச பயிற்சிகளில் இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இதை செய்யும் போது கவனச் சிதறல் இருக்கக்கூடாது
 • இப்போது கட்டைவிரலை எடுத்து வலது நாசி வழியாக மூச்சை வெளிவிடுங்கள்.
 • இவ்வாறு மாற்றி மாற்றி இந்த சுவாசப் பயிற்சி பல முறை செய்ய வேண்டும்.
 • இதை தினமும் காலையில் செய்ய வேண்டும்.

இந்த மூன்று சுவாச பயிற்சிகளையும் முறையாக செய்தால் உடல் பருமன் மற்றும் மூட்டுவலி பிரச்சினைகளை குணப்படுத்த முடியும். அதே போல  ஆரோக்கியமான உணவை சரியான நேரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டியதும் அவசியம்.

பிராணயாமா சுவாச பயிற்சிகள் மற்றும் சரியான உணவு மூலம் எடையைக் குறைத்த பிறகும், கீல்வாத பிரச்சினை உள்ளவர்கள் தங்கள் உடல் ஆரோக்கியத்தை பராமரிக்க.

 • வீரபத்ராசனம்
 • விருட்சாசனம்
 • திரிகோனாசனம் 
 • சேதுபந்தசனம்
 • சவாசனம்

போன்ற  யோகா பயிற்சிகளை செய்து வந்தா நல்ல பலன் கிடைக்கும்.

Views: - 353

0

0